“ஃபுல் பவர்”.. இறையன்பு விரும்பும் பதவி! மாநில தலைமை தகவல் ஆணையருக்கு இவ்வளவு அதிகாரமா? என்ன ஊதியம்?
இறையன்பு விண்ணப்பித்து உள்ள மாநில தலைமை தகவல் ஆணையருக்கு இருக்கும் அதிகாரிகள் என்ன? அவர்களுக்கான மாத ஊதியம் எவ்வளவு? என்பதை விரிவாக பார்ப்போம்.
சென்னை: தமிழ்நாடு தலைமை செயலாளராக இருக்கும் வெ.இறையன்பு
ஜூன் மாதம் ஓய்வு பெற உள்ள நிலையில் தமிழ்நாடு தலைமை தகவல் ஆணையர் பதவிக்கு விண்ணப்பித்து இருக்கிறார். மாநில தலைமை தகவல் ஆணையருக்கு இருக்கும் அதிகாரிகள் என்ன? அவர்களுக்கான மாத ஊதியம் எவ்வளவு? என்பதை விரிவாக பார்ப்போம்.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு ஆட்சியமைத்த பிறகு எழுத்தாளரும், பேச்சாளருமான மூத்த ஐஏஎஸ் அதிகாரி வெ.இறையன்பு தமிழ்நாடு தலைமை செயலாளராக நியமனம் செய்யப்பட்டார்.

இறையன்பு
கடந்த 1988 ஆம் ஆண்டு ஐஏஎஸ் அதிகாரியாக பணியில் சேர்ந்த வெ.இறையன்பு மாவட்ட ஆட்சியர், உதவி ஆட்சியர், கூடுதல் ஆட்சியர் என பல துறைகளில் பணிபுரிந்து உள்ளார். அவரது புத்தகங்கள், மேடை பேச்சுக்கள் மக்கள் மத்தியில் பிரபலமாக இருந்தன. அவரது கருத்துக்கள், மாணவர்கள், இளைஞர்களுக்கு புத்துணர்ச்சி ஊட்டுவதாக இருந்தன.

இறையன்பு ஓய்வு
தமிழ்நாட்டின் தலைமை செயலாளராக 21 மாதங்கள் பதவி வகித்து வந்த வெ.இறையன்புவுக்கு ஜூன் மாதம் 16 ஆம் தேதியுடன் பதவிகாலம் நிறைவடைகிறது. தமிழ்நாடு அரசு விரும்பினால் அவரது பதவி காலத்தை நீட்டிக்க மத்திய அரசிடம் கோரிக்கை வைக்க முடியும். ஆனால், இறையன்பு அதற்கு ஒப்புக்கொள்ளவில்லை என்று கூறப்படுகிறது.

தமிழ்நாடு தலைமை தகவல் ஆணையர்
அதே நேரம் அவருக்கு வேறு ஒரு யோசனையும் இருந்தது. அதுதான் தமிழ்நாடு தலைமை தகவல் ஆணையர் பதவி. தமிழ்நாடு தலைமை தகவல் ஆணையராக இருந்த ராஜகோபாலின் பதவிகாலம் 2022 நவம்பருடன் நிறைவடைந்தது. கடந்த ஒன்றரை மாதங்களாக காலியாக இருக்கும் புதிய ஆணையரை தேர்வு செய்வதற்காக நீதிபதி அக்பர் அலி தலைமையிலான தேர்வுக்குழு அமைக்கப்பட்டது.

இறையன்பு விண்ணப்பம்
2 முறை நீட்டிக்கப்பட்ட இந்த குழு இதுவரை எந்த அதிகாரியையும் கண்டறியாத நிலையில், இறையண்பு அந்த பதவிக்கான விண்ணப்பத்தை இன்று சமர்பித்து இருக்கிறார். வெ.இறையன்புவுக்கு தமிழ்நாடு தலைமை தகவல் ஆணையர் பதவி உறுதியானால் மாநில தலைமை செயலாளர் பதவியில் இருந்து விலக நேரிடும்.

உச்சபட்ச பதவி
இப்போதே தமிழ்நாடு அரசு துறை உச்சபட்ச பதவியான தலைமை செயலாளர் இருக்கையில் அமரப்போவது யார் என்ற பேச்சுக்கள் எழுந்து இருக்கும் நிலையில், 4 மாதங்களுக்கு முன்பே அப்பதவியில் இருந்து விலகி இதை தேர்வு செய்யும் அளவும் இப்பதவியில் என்ன உள்ளது என்ற கேள்வி எழுந்துள்ளது.

3 ஆண்டுகளாக குறைப்பு
தமிழ்நாடு தலைமை தகவல் ஆணையரின் பதவிகாலம் 3 ஆண்டுகளாகும். 5 ஆண்டுகளாக இருந்த இந்த பதவிகாலம் 2019 ஆம் ஆண்டு குறைக்கப்பட்டு உள்ளது. 2005 ஆம் ஆண்டு கொண்டு வரப்பட்ட தகவல் அறியும் உரிமை சட்டம் கடந்த 2019 ஆம் ஆண்டு திருத்தம் செய்யப்பட்டதை தொடர்ந்து இந்த பதவிகாலம் குறைக்கப்பட்டது.

நடவடிக்கை எடுக்கும் அதிகாரம்
தமிழ்நாட்டின் பல்வேறு துறைகள், திட்டங்கள் சார்ந்து பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள், ஊடகங்கள் தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் எழுப்பபடும் கேள்விகளுக்கு பதிலளிப்பது தமிழ்நாடு தகவல் ஆணையத்தின் பணி. இவ்வாறு பதிலளிக்க தவறும் அதிகாரிகள் எத்தகைய உயர் பொறுப்பில் இருந்தாலும் அவர்கள் மீது தமிழ்நாடு தலைமை தகவல் ஆணையரால் நடவடிக்கை எடுக்க முடியும் என்று கூறப்படுகிறது.

சம்பளம் எவ்வளவு?
தமிழ்நாடு தலைமை தகவல் ஆணையருக்கான மாத ஊதியம் ரூ.2.50 லட்சமாகும். அவருக்கு கீழ் பணியாற்றும் தகவல் ஆணையர்களின் ஊதியம் ரூ.2.25 லட்சமாகும். தலைமை தகவல் ஆணையரால் உயரதிகாரிகள் மீதும் எளிதில் நடவடிக்கை எடுக்க முடியும். இதனை தடுக்கவே ஒரே நபர் 5 ஆண்டுகளில் அந்த பதவியில் இருப்பதை 3 ஆண்டுகளாக மத்திய அரசு குறைத்ததாக கூறப்படுகிறது.

மத்திய அரசால் மாற்ற முடியும்
கடந்த 2019 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 25 ஆம் தேதி நிறைவேற்றப்பட்ட ஆர்.டி.ஐ, திருத்த மசோதாவில் தலைமை தகவல் ஆணையர், தகவல் ஆணையர்கள், மாநில தகவல் ஆணையர்களுன் நியமனம் குறித்த விதிகள், நிபந்தனைகள், பதவிகாலம், ஊதியத்தம், படிகளை மத்திய அரசு நிர்ணயிக்கும் அதிகாரம் வழங்கப்பட்டது. எனவே இதில் மத்திய அரசு என்ன வேண்டுமானாலும் செய்ய முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.
-
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
1 சவரன் தங்க நகை வாங்க போறீங்களா? கடைக்காரர் போடும் கணக்கில் அதிக மாற்றமா? ஏமாறாமல் இருக்க பில் தேவை -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
48 அவுட் ஆஃப் 234! திமுக கூட்டணியில் இதுவரை எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை சீட் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம்












Click it and Unblock the Notifications