அமைச்சருக்கு நிகரான அந்தஸ்து.. எதிர்க்கட்சி தலைவராக எடப்பாடி பழனிசாமிக்கு என்னென்ன அதிகாரங்கள்?

Subscribe to Oneindia Tamil

சென்னை: அமைச்சருக்கு நிகரான அந்தஸ்து எதிர்க்கட்சி தலைவருக்கு உள்ளது. எதிர்க்கட்சி தலைவராக தேர்வாகி உள்ள எடப்பாடி பழனிசாமிக்கு என்னென்ன அதிகாரங்கள் உள்ளது. என்னென்ன பொறுப்புகள் உள்ளது என்பதை இப்போது பார்ப்போம்,

நடந்து முடிந்த தமிழக சட்டசபை தேர்தலில் திமுக கூட்டணி மிகப்பெரிய வெற்றி பெற்று 10 ஆண்டுகளுக்கு பிறகு ஆட்சியை கைப்பற்றி உள்ளது. திமுக தலைவர் ஸ்டாலின் தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியமைத்துள்ளார்.

அதேநேரம் தேர்தலில் தோற்ற அதிமுக 66 சட்டப்பேரவைத் தொகுதிகளில் வென்று வலுவான எதிர்க்கட்சியாக சட்டசபையில் அமர்ந்துள்ளது. இதற்கு கொங்கு மண்டலத்தில் அதிமுக பெற்ற வெற்றி தான் காரணம். ஒருவேளை கொங்கு மண்டலத்தில் அதிமுக வலுவான வெற்றி பெறாமல் போயிருந்தால் மோசமான தோல்வியை சந்தித்திருக்கும்.

விட்டுக்கொடுத்த ஓபிஎஸ்

விட்டுக்கொடுத்த ஓபிஎஸ்

இந்நிலையில் கொங்கு மண்டலத்தில் வலுவான வெற்றிக்கு அதிமுகவின் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி தான் காரணம் என்று அங்குள்ள நிர்வாகிகள் அனைவரும் ஒருமித்த ஆதரவு அளித்ததால், தமிழக எதிர்க்கட்சித் தலைவராக ஒருமனதாகத் தேர்வு செய்யப்பட்டார். வழக்கம் போல் இந்த முறையும் கட்சிக்காக ஓ பன்னீர்செல்வம் விட்டுக்கொடுத்து ஒதுங்கி உள்ளார்.

24 எம்எல்ஏக்கள் ஆதரவு

24 எம்எல்ஏக்கள் ஆதரவு

பொதுவாக எதிர்க்கட்சி அந்தஸ்து என்பது ஆளுங்கட்சிக்கு அடுத்தபடியாக அதிக சட்டப்பேரவைத் தொகுதிகளில் வெற்றிபெற்ற கட்சிக்கு தான் கிடைக்கும் எதிர்க்கட்சி என்ற தகுதியைப் பெற குறைந்தபட்சம் 24 தொகுதிகளில் வெற்றிபெற்றிருக்க வேண்டும். ஒரே கட்சியைச் சேர்நத் 24 சட்டப்பேரவை உறுப்பினர்களால் தேர்ந்தெடுக்கப்படும் சட்டப்பேரவைக் குழு தலைவர் எதிர்க்கட்சித் தலைவராக செயல்படுவார். சட்டப்பேரவைத் துணைத் தலைவருக்கு உரிய தகுதியை சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவருக்கு உள்ளது.

தகவல் ஆணையர் நியமனம்

தகவல் ஆணையர் நியமனம்

எதிர்க்கட்சித் தலைவருக்கு அலுவலக அறை, வாகனம், பணியாளர் உள்ளிட்ட வசதிகள் அமைச்சருக்கு நிகராக அளிக்கப்படும். முக்கிய பொறுப்புகளான லோக் ஆயுக்தா, மாநில தகவல் ஆணையர் உள்ளிட்ட பணியிடங்களுக்கு உறுப்பினர்களை நியமிக்கும் குழுவில் இவருக்கும் இடமுண்டு.

பிரச்சனைகள்

பிரச்சனைகள்

இதேபோல் எதிர்க்கட்சி தலைவர், மாநிலத்தின் முக்கிய பிரச்சனைகள் குறித்து சட்டசபையில் குரல் எழுப்பி சிறப்பு விவாதம் நடத்த கோரிக்கை வைக்க முடியும். அது குறித்த விரிவான பதில்களை சட்டசபையில் முதல்வரும், துறை அமைச்சரும் அளிக்க வேண்டியது கடமை ஆகும்.

எளிதான பணி அல்ல

எளிதான பணி அல்ல

சட்டசபையில் எதிர்க்கட்சி தலைவர் பணி என்பது எளிதானது அல்ல, தற்போதைய ஆட்சியில் கொண்டுவரப்பட்ட திட்டங்கள், அவர்களது ஆட்சியில் கொண்டுவரப்பட்ட திட்டங்கள், செலவீனங்கள் பல புள்ளி விவரங்கள் தெரிந்தவராக இருக்க வேண்டும். அத்துடன் ஒவ்வொரு துறையிலும் எவை எல்லாம் பிரச்சனை, அதற்கான தீர்வு என்ன, அரசாங்கம் அதை தட்டிக்கழிக்கிறதா என்பதை கவனித்து சட்டசபையில் தெரிவித்து விவாதிக்க வைக்க வேண்டும். இதுவே மிக முக்கியமானதாகும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+