அப்படி என்ன வசதிகள் இருக்கு? அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு ரெடியான அறையின் சிறப்புகள்! முழுவிபரம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: சென்னை சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி எம்எல்ஏவும், முதலமைச்சர் ஸ்டாலினின் மகனுமான உதயநிதி இன்று அமைச்சராக பதவியேற்று கொண்டார். இந்நிலையில் முழுவீச்சில் அவருக்கு தயாரான அறையில் என்னென்ன வசதிகள் உள்ளன என்பது பற்றிய விபரங்கள் வெளியாகி உள்ளன.

ஸ்டாலின் தலைமையில் திமுக கட்சி கடந்த ஆண்டு நடந்த சட்டசபை தேர்தலில் அதிமுகவை வீழ்த்தி வெற்றி பெற்றது. இதையடுத்து முதல்வராக ஸ்டாலின் பொறுப்பேற்றார். அவருடன் 33 பேர் அமைச்சராக பதவியேற்று கொண்டனர்.

இந்நிலையில் தான் ஸ்டாலினின் மகனும், திமுக இளைஞரணி செயலாளருமான உதயநிதி ஸ்டாலினுக்கு அமைச்சர் பதவி வழங்க வேண்டும் என அமைச்சர்கள், கட்சி நிர்வாகிகள் கருத்துகள் தெரிவித்து வந்தனர்.

அமைச்சரான உதயநிதி

அமைச்சரான உதயநிதி

அதன்படி சேப்பாக்கம் திருவல்லிக்கேணி தொகுதி எம்எல்ஏவாக உள்ள உதயநிதி ஸ்டாலின் இன்று அமைச்சராக பொறுப்பேற்று கொண்டார். ஆளுநர் மாளிகையில் நடந்த பதவியேற்பு விழாவில் ஆளுநர் ஆர்என் ரவி அவருக்கு பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். அமைச்சராக பதவியேற்ற உதயநிதி ஸ்டாலினுக்கு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு துறை ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதற்கான பெயர் பலகை அவரது அறையில் முன்பகுதியில் இன்று பொருத்தப்பட்டது. மேலும் சிறப்பு திட்ட அமலாக்கப்பிரிவு இலாக்காவை அவர் கூடுதலாக கவனிக்க உள்ளார்.

 அறையில் வைத்து கையெழுத்து

அறையில் வைத்து கையெழுத்து

முன்னதாக உதயநிதி ஸ்டாலின் அமைச்சராக பொறுப்பேற்க இருந்ததையொட்டி கடந்த 2 நாட்களாக தலைமை செயலகத்தில் அறை முழுவீச்சில் தயார் செய்யப்பட்டு வந்தது. இந்த அறை தொடர்பான படங்கள், செய்திகள் கடந்த 2 நாட்களாக வெளியாகி வந்த நிலையில் அமைச்சரான பிறகு முதல் முறையாக உதயநிதி அந்த அறைக்கு சென்று பொறுப்பேற்றார். மூத்த அமைச்சர்களான துரைமுருகன், கேஎன் நேரு உள்ளிட்டவர்கள் உதயநிதியை அமைச்சர் இருக்கையில் அமர வைத்தனர்.

உதயநிதியின் அறை எங்கு உள்ளது?

உதயநிதியின் அறை எங்கு உள்ளது?

இந்நிலையில் தான் உதயநிதி ஸ்டாலினுக்காக தயாரான அறையில் என்னென்ன வசதிகள் உள்ளன? என்பது பற்றிய தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி உதயநிதி ஸ்டாலினுக்காக உருவாக்கப்பட்ட அறை தலைமை செயலகத்தின் 2வது தளத்தில் உள்ளது. சட்டத்துறை செயலாளர் கோபி ரவிக்குமாரின் அறைக்கு அருகே ‛டி' பிரிவில் இந்த அறை அமைந்துள்ளது. இந்த அறை இதற்கு முன்பு சிறப்பு திட்ட அமலாக்கத் துறையின் அதிகாரிகளின் அறையாக இருந்தது. உதயநிதி அமைச்சராக பொறுப்பேற்ற நிலையில் சிறப்பு திட்ட அமலாக்க துறை அதிகாரிகளின் அறைகள் கேட் எண் 8 ல் உள்ள தரை தளத்துக்கு மாற்றம் செய்யயப்பட்டுள்ளது.

வசதிகள் என்னென்ன?

வசதிகள் என்னென்ன?

தற்போது உதயநிதிக்காக மாற்றியமைக்கப்பட்டுள்ள இந்த அறை 1000 சதுரஅடி பரப்பளவு கொண்டதாகும். அறை முழுவதும் ஏசி வசதி உள்ளது. உதயநிதியின் நேர்முக உதவியாளருக்கு தனி அறை உள்ளது. தெற்கு வாசல் கொண்ட அறையில் சிறிய கூட்ட அரங்கு, ஓய்வறை, சந்திக்க வரும் விருந்தினருக்கு சிற்றுண்டி தயார் செய்ய சமையலறை வசதிகள் உள்ளன. கழிவறை வசதி உள்ளது.

 4 முக்கிய போட்டோக்கள்

4 முக்கிய போட்டோக்கள்

இந்த அறை தற்போது உருவாக்கப்பட்டுள்ளதால் புதுப்பொலிவுடன் கண்களை கவரும் வகையில் உள்ளது. இந்த அறையில் மொத்தம் 4 பேரின் போட்டோக்கள் உள்ளன. பெரியார், முன்னாள் முதல்வர்களான அண்ணா, கருணாநிதி மற்றும் தற்போதைய முதல்வர் முக ஸ்டாலின் ஆகியோரின் போட்டோக்கள் உதயநிதியின் அறையில் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+