ஆட்டிப்படைக்கும் ஓமிக்ரான் BF.7 கொரோனா.. குழந்தைகளை தாக்கினால் என்னென்ன அறிகுறிகள் ஏற்படும்? பின்னணி
சென்னை: சீனா, தென் கொரியா உள்ளிட்ட நாடுகளில் ஓமிக்ரான் BF.7 கொரோனா வேகமாக பரவி வரும் நிலையில் இந்த கொரோனா குழந்தைகளை தாக்கினால் என்னென்ன அறிகுறிகள் ஏற்படும் என்ற தகவல் வெளியாகி உள்ளது.
ஓமிக்ரான் கொரோனா வைரஸ் தற்போது மேலும் உருமாற்றம் அடைந்து சீனாவில் தீவிரமாக பரவி வருகிறது. அங்கு கொரோனா கட்டுப்பாடுகளை அகற்றிய பின்தான் கேஸ்கள் அதிகரித்து உள்ளன. சீனாவில் தினசரி கேஸ்கள் வேகமாக அதிகரித்து வருகின்றனர். ஓமிக்ரான் BF.7 மற்றும் BF.12 வகை கொரோனா காரணமாக சீனாவில் இந்த பாதிப்பு ஏற்பட்டு உள்ளது.
சீனாவில் நேற்று முதல்நாள் மட்டும் 3.7 கோடி பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டு உள்ளது. ஓமிக்ரான் என்னாவது கொரோனாவின் B.1.1.529 வகை ஆகும். இந்த ஓமிக்ரானின் கிளை வைரஸ்தான் BA.5 வகை. இதில் இருந்து உருவான இன்னொரு கிளைதான் BA.5.2.1.7. இதைத்தான் சுருக்கமாக BF.7 என்று அழைக்கிறார்கள்.

அறிகுறிகள்
ஓமிக்ரான் BF.7 பாதிப்பு ஏற்பட்டால் பின்வரும் அறிகுறிகள் தென்படும்.
உடல் சோர்வு
மூட்டுகளில் ஏற்படும் வலி
சளி
தலைவலி
காய்ச்சல்
இருமல்
தொண்டை புண்
மூக்கு ஒழுகுதல்
வாந்தி
வயிற்றுப்போக்கு

இந்தியா
இந்தியாவில் இந்த வைரஸ் வேகமாக பரவில்லை. ஏற்கனவே 5 கேஸ்கள் வரை பரவி இருந்தாலும் இந்தியாவில் இது புதிய அலையை எல்லாம் ஏற்படுத்தவில்லை. சீனாவில் ஒவ்வொரு மாகாணங்களில் கிட்டத்தட்ட 10 லட்சம் கேஸ்கள் பதிவாகி வருகின்றன. வயதானவர்கள், சிறியவர்கள் என்று வேறுபாடு இல்லாமல் சீனாவில் கேஸ்கள் பரவி வருகின்றன. இந்தியாவில் அந்த மாதிரியான பாதிப்புகள் ஏற்படவில்லை. இந்தியாவில் ஓமிக்ரான் பரவிய சமயத்தில் ஒரு பெரும்பாலும் வயதானவர்கள், எதிர்ப்பு திறன் குறைவானவர்கள் மட்டுமே பாதிக்கப்பட்டனர்.

சிறுவர் சிறுமி
ஆனால் சீனாவில் சிறுவர், சிறுமிகளும் தற்போது ஏற்பட்டு இருக்கும் அலையால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இந்த நிலையில்தான் குழந்தைகளுக்கு ஓமிக்ரான் BF.7 மற்றும் BF.12 வகை கொரோனா ஏற்பட்டால் என்ன மாதிரியான அறிகுறிகள் ஏற்படும் என்று தகவல் வெளியிடப்பட்டு உள்ளது. அதன்படி காய்ச்சல், வறண்ட தொண்டை, மூக்கு அடைப்பு, இருமல் ஆகியவை குழந்தைகள் இடையே ஏற்படும் சாதாரண அறிகுறிகள் ஆகும். சில குழந்தைகளுக்கு தீவிர அறிகுறிகள் ஏற்படும் வாய்ப்புகள் உள்ளன. மூச்சு விடுவதில் சிரமம், முகம், உதடு, கைகள் நீல நிறத்தில் மாறுவது போன்ற பாதிப்புகள் ஏற்படும்.

அறிகுறிகள்
இதயம் லேசாக வலிப்பது, குழப்பம் ஏற்படுவது, திரவ பொருட்களை அருந்த முடியாமல் தவிப்பது, உறக்கம் இன்றி தவிப்பது ஆகியவை மோசமான அறிகுறிகளாக இருக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது. இந்த அறிகுறிகள் ஏற்பட்டால் உடனே மருத்துவர்களை அணுக வேண்டும் என்று மருத்துவர்கள் அறிவுறுத்தி உள்ளனர். இது தீவிர அறிகுறிகள்தான். மற்றபடி காய்ச்சல், வறண்ட தொண்டை, மூக்கு அடைப்பு, இருமல் ஆகிய சாதாரண அறிகுறிகள் ஓமிக்ரான் BF.7 மற்றும் BF.12 வகை கொரோனா ஏற்பட்டால் வரும் என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்!












Click it and Unblock the Notifications