"இதை" செய்தால் தங்கம் விலை சர்னு குறையும்.. குட் நியூஸ் சொன்ன ஆனந்த் சீனிவாசன்.. உடனே நோட் பண்ணுங்க
சென்னை: தங்கம் விலை தினசரி உச்சம் தொட்டு வரும் நிலையில், வரும் நாட்களில் அதன் விலை எப்படி இருக்கும் என்பது குறித்து ஆனந்த் சீனிவாசன் சில முக்கிய கருத்துகளைப் பகிர்ந்துள்ளார்.
தங்கம் விலை இப்போது ஒவ்வொரு நாளும் புதிய உச்சத்தைத் தொட்டு வருகிறது. இதனால் இந்தியாவில் ஏழை மற்றும் நடுத்தர வர்க்கத்தினர் தங்கத்தை நினைத்துக் கூட பார்க்க முடியாத ஒரு சூழல் ஏற்பட்டுள்ளது.

இதற்கிடையே தங்கம் விலை வரும் காலத்தில் குறையுமா.. அப்படியே குறைந்தாலும் எந்தளவுக்குத் தங்கம் விலை குறையக் காரணம் இருக்கு என்பது குறித்து பிரபல பொருளாதார வல்லுநர் ஆனந்த் சீனிவாசன் விளக்கியுள்ளார்.
தங்கம்: இது தொடர்பாக அவர் தனது வீடியோவில், "தங்கம் விலை சர்வதேச சந்தையில் சற்று குறைந்து இருக்கிறது. ஆனால், இந்தியாவில் குறையவில்லை. சர்வதேச சந்தையில் தங்கம் விலை குறைந்தாலும், இந்திய ரூபாய் மதிப்பும் சரிவதால் நமது நாட்டில் தங்கம் விலை குறையவில்லை. இருப்பினும் வரும் நாட்களில் தங்கம் விலை கொஞ்சம் குறைய வாய்ப்பு இருக்கிறது. குறையும் என்றால் ரொம்ப குறையும் என எதிர்பார்க்காதீர்கள். ஒரு ரூ.20,30 ரூபாய் குறையும். அவ்வளவு தான்.
அமெரிக்காவில் அங்குள்ள மத்திய வங்கி எதிர்பார்த்த அளவுக்கு வட்டி விகிதம் குறையாததே இதற்குக் காரணம். கடந்த 6 மாதங்களில் இல்லாத அளவுக்கு விலைவாசி அதிகரித்துள்ளது. அங்கு பெட்ரோல் விலை, இன்சூரன்ஸ் எனப் பலவற்றின் விலை அதிகரித்துள்ளது. இப்போதைக்கு அங்குப் பண வீக்கம் குறைவது போலத் தெரியவில்லை. அமெரிக்க மத்திய வங்கி பண வீக்கத்தை 2%க்குள் வைக்க வேண்டும்.. ஆனால், இப்போது அங்குப் பண வீக்கம் 4.5%க்கு மேல் இருக்கிறது.
ஏன் முக்கியம்: இதன் காரணமாக ஜூன் மாதம் அமெரிக்கத் தனது வட்டி விகிதத்தைக் குறைக்கும் என்ற நம்பிக்கை குறைந்துள்ளது. அடுத்து செப். மாதம் தான் வட்டி விகிதத்தைக் குறைக்க வாய்ப்பு இருக்கு. சிலர் இந்தாண்டு 2 முறை தான் வட்டி விகிதத்தைக் குறைப்பார்கள் என்கிறார்கள். இன்னும் சிலர் குறைக்க வாய்ப்பே இல்லை என்கிறார்கள்" என்றார்.
தங்கம் விலை என்பது அமெரிக்க மத்திய வங்கியின் வட்டி விகிதத்தைப் பொறுத்து பெரியளவில் மாறும். அங்கு வட்டி விகிதத்தை அதிகரித்தால் தங்கம் விலை குறையும்.. வட்டி விகிதத்தைக் குறைத்தால் தங்கம் அதிகரிக்கத் தொடங்கும். இத்தனை காலம் ஜூன் மாதம் வட்டி விகிதத்தைக் குறைப்பார்கள் என்று நினைத்தே தங்கம் விலையை அதிகரித்தார்கள். இப்போது ஜூனில் வட்டி விகிதத்தைக் குறைக்க வாய்ப்பு இல்லை என்பதால் தங்கம் விலை சற்று குறையலாம் என்பதே அவரது கருத்து.
நோட் பண்ணுங்க: அதேபோல அவர் தனது மற்றொரு வீடியோவில், "தங்கம் விலை குறையத் தொடங்கினாலும் அதிகபட்சம் 200 அல்லது 300 ரூபாய் தான் குறையும்.. அதற்கு மேல் தங்கம் விலை பெரியளவில் குறைய வாய்ப்பு இல்லை. அதைவிடப் பெரியளவில் தங்கம் குறைய வேண்டும் என்றால் வரியைத் தான் குறைக்க வேண்டும். தங்கத்தின் மீது மொத்தம் 15% வரி இருக்கிறது. அதைக் குறைத்தால் தங்கம் விலை குறையலாம்.
மேலும், 1979இல் தான் மும்பை பங்குச்சந்தை தொடங்கியது. அப்போது தங்கம் விலையும் 10 கிராம் ரூ. 100இல் இருந்தது. இரண்டும் கிட்டதட்ட ஒரே அளவு தான். இன்று இரண்டும் மின்னல் வேகத்தில் அதிகரித்துள்ளது. தங்கம் 17-18% லாபம் கொடுத்துள்ளது. பங்குச்சந்தை 30% லாபத்தைக் கொடுத்துள்ளது. பங்குச்சந்தைக்கு மிகப் பெரிய லாபத்தைக் கொடுத்தது 1991இல் நாம் ஓபன் பொருளாதாரமாக மாறியது தான். அதுபோன்ற நிகழ்வு மீண்டும் நடக்காது.
முக்கியம்: நீண்ட கால நோக்கில் பங்குகள் நல்ல லாபம் தரும் என்பது உண்மை தான். ஆனாலும் தங்கம் முக்கியம். ஏனென்றால் நீங்கள் ஊரை விட்டு ஓடினாலும் கூட இந்த நிறுவனங்களின் பங்குகளை வேறு நாட்டில் விற்க முடியாது. ஆனால், தங்கத்தை எங்கு வேண்டுமானாலும் விற்கலாம். நமது நாட்டிலேயே கூட தங்கத்திற்குத் தான் உடனடியாக கடன் கிடைக்கும். இதுதான் மேட்டரே.. எனவே, குறைந்தது அனைவரும் 200 கிராம் தங்கத்தை வாங்குங்கள்" என்றார்.
இது ஒரு செய்தி மட்டுமே. இதை நிச்சயமாக முதலீடு ஆலோசனையாக எடுத்துக் கொள்ளக் கூடாது. முதலீடு சார்ந்த முடிவுகளை எடுக்கும் முன்பு உங்கள் பொருளாதார ஆலோசகரிடம் உரிய ஆலோசனை கேட்ட பிறகு உங்களுக்கு ஏற்ற முடிவை எடுக்க வேண்டும்.












Click it and Unblock the Notifications