குட்டிபோடும் வட்டி..வீட்டுக்கடன் வாங்குபவர்கள் அவசியம் அறிய வேண்டியவை! லட்சங்களை பிடுங்கும் வங்கிகள்
சென்னை: வீட்டுக் கடன் வாங்கி பலர் புதிய வீடுகளுக்கு குடியேறும் நிலையில், இனி இதன் மூலம் வீடுகளை வாங்க முயற்சிப்போர் தெரிந்துகொள்ள வேண்டிய முக்கிய விசயங்கள் என்னவென்று பார்ப்போம்.
இதுகுறித்து பொருளாதார ஆலோசகர் ராஜேஷ் தெரிவிக்கையில், "பொதுவாகவே, வீட்டுக்கடன் வாங்குபவர்களுக்கு, மாத EMI, வட்டி விகிதம் மற்றும் அசல் தொகைகள் மட்டுமே தெரியும். சற்றே ஆழமாக சென்று பார்த்தல், வேறு சில தகவல்களும் நமக்கு தெரிய வரும். பார்ப்போமா?

இந்த திரட்டிற்கு நான் எடுத்துக்கொண்ட வீட்டுக்கடன்:
கடன் தொகை - ₹50,00,000
கடன் காலம் - 20 வருடங்கள்
கடன் வட்டி - 8.75%
மேற்சொன்ன தகவல்கள், படம் 1'ல் உள்ளது.
உங்களது அசல்: ₹50,00,000 (மாதம் ₹20,833)
நீங்கள் கட்டும் வட்டி: ₹56,04,528 (மாதம் ₹23,352)
வங்கிகள் சொல்லும் complicated calculations (Monthly reducing balance / daily reducing balance) போன்று எதையும் சொல்லி குழப்பாமல், நாம் எளிமையாக இதனை அணுகலாம். அதாவது, உங்களது அசலையும், வட்டியையும் சரிசமமாக 240 மாதங்களுக்குப் பிரித்தால், நீங்கள் மாதா மாதம் கட்ட வேண்டிய EMI தொகை - ₹44,185. இப்பொழுது, நான் சொல்வதை, இந்த படம் கொண்டு பார்க்கவும்.

நமது கணக்கின்படி, EMI, வருடத்திற்கு - ₹5,30,220
வங்கியின் கணக்குப்படி, EMI, வருடத்திற்கு - ₹5,30,226
இங்கேதான் இரண்டிற்குமான ஒற்றுமைகள் முடிவடைகின்றன.
வருடம் - 1
நமது கணக்கின்படி, அசல் தொகை, வருடத்திற்கு - ₹2,49,996
வங்கியின் கணக்குப்படி, அசல் தொகை, வருடத்திற்கு - ₹96,537
நமது கணக்கின்படி, வட்டித் தொகை, வருடத்திற்கு - ₹2,80,224
வங்கியின் கணக்குப்படி, வட்டித் தொகை, வருடத்திற்கு - ₹4,33,689
- அதாவது, வெறும் 12 மாதங்களில், உங்களிடமிருந்து அவர்கள் 18.5 மாதங்களுக்கான வட்டியை வாங்கி விடுகிறார்கள்.
இப்பொழுது நீங்கள் prepayment செய்து கடனை முடிக்கிறீர்கள் என்று வைத்துக் கொள்வோம். அப்பொழுது, நீங்கள் கூடுதலாக செலுத்திய வட்டித்தொகையான ₹1,53,465 உங்களுக்குத் திருப்பித் தர மாட்டார்கள். கட்டியது கட்டியது தான். மேற்சொன்னதுபோல், முதல் ஐந்து வருடங்களுக்கு கணக்கிட்டுப் பார்த்துக் கொள்ளுங்கள். உங்களிடமிருந்து எவ்வளவு கூடுதலாக பணம் வசூலிக்கப் படுகிறதென்று உங்களுக்குத் தெரியும். எதற்கு உங்களுக்கு சிரமம். நானே சொல்லிவிடுகிறேன்.
வருடம் - 5
நமது கணக்கின்படி, அசல் தொகை, ஐந்து வருடங்களுக்கு - ₹12,49,980
வங்கியின் கணக்குப்படி, அசல் தொகை, ஐந்து வருடங்களுக்கு - ₹5,79,009
நமது கணக்கின்படி, வட்டித் தொகை, ஐந்து வருடங்களுக்கு - ₹14,01,120
வங்கியின் கணக்குப்படி, வட்டித் தொகை, ஐந்து வருடங்களுக்கு -₹20,72,123 - அதாவது, வெறும் 60 மாதங்களில், உங்களிடமிருந்து அவர்கள் 88.75 மாதங்களுக்கான வட்டியை வாங்கி விடுகிறார்கள்.
இப்பொழுது நீங்கள் முன்கட்டணம் செய்து கடனை முடிக்கிறீர்கள் என்று வைத்துக் கொள்வோம். அப்பொழுது, நீங்கள் கூடுதலாக செலுத்திய வட்டித் தொகையான ₹6,71,003 (அசலில் 13%) உங்களுக்குத் திருப்பித் தர மாட்டார்கள். கட்டியது கட்டியது தான். ஆகையால்தான் சொல்கிறேன், வீட்டுக்கடன் வாங்குவது, உங்களுக்கு எந்தவிதத்திலேயும் லாபமில்லை. நீங்கள் குடியேற தாராளமாக வீட்டுக்கடன் வாங்குங்கள். அது உங்கள் மனம் சார்ந்த விஷயம். ஆனால், முதலீடு செய்கிறேனென்று வீட்டுக்கடன் வாங்கி, பணத்தை இழக்காதீர்கள். எந்தவொரு வங்கியின் கடனோ, இன்சூரன்ஸோ அல்லது எந்தவொரு பொருளோ, உங்களின் நலனிற்காக வழங்கப்படுவதில்லை. அது அவ்வளவும், அவர்களின் நலனிற்காக மட்டுமே.
-
அமெரிக்கா மீது இடியை இறக்கிய ஈரான்! டிரம்ப் மீது மக்கள் அதிருப்தி! இதுக்கு சும்மாவே இருந்திருக்கலாம் -
திருப்பூரில் இப்படியும் ஒரு புருஷன்.. எந்த கணவனும் செய்யக்கூடாத காரியம்.. ஆடிப்போன மனைவி -
பிரதமர் மோடி ராஜினாமா செய்ய நேரிடும்.. எனக்குத் தெரிந்த தகவல்களை சொன்னால்..சுப்பிரமணியன் சுவாமி பதிவு -
சீனியர் பெண்ணுடன் உறவில் இருக்கும் இஷான் கிஷன்.. அகமதாபாத் மைதானத்தில் காதலை அறிவித்த பாக்கெட் டைனமோ -
தப்பா எடுத்துக்காதீங்க.. விஜயிடம் சொன்ன ராகுல்.. பாஜக பக்கம் தவெக போக.. இப்படி ஒரு ஷாக் காரணமா? -
ரொம்ப ஓவர்.. டி20 உலகக்கோப்பை வெற்றிக்கு பின்.. மைதானத்தில் காதலியுடன் எல்லை மீறிய ஹர்திக் பாண்டியா! -
இந்தியன் வங்கியின் சூப்பர் தங்க நகைக்கடன் திட்டம்.. 3 லட்சம் வரை ஆவணங்களின்றி அரை மணி நேரத்தில் பணம் -
நியூசிலாந்து தொடரால் உடைந்துவிட்டேன்.. கிரிக்கெட் கடவுள் செய்த அட்வைஸ்.. நெகிழும் சஞ்சு சாம்சன்! -
வருது "செயற்கை" தங்கம்.. கோல்ட் விலை தாறுமாறாக சரிய இதுதான் காரணமா? வெளியான மிக முக்கிய தகவல் -
சமையல் எரிவாயு சிலிண்டர் வாங்க புதிய ரூல்ஸ் .. மக்கள் அறிய வேண்டிய 25 நாட்கள் விதிமுறை -
கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு.. கோவை அன்னபூர்ணா ஹோட்டலில் குறைக்கப்பட்ட உணவுகள் -
மக்கள் நீதி மய்யம் இப்படி கேட்கும்ன்னு நினைக்கவே இல்லையே.. ஒரு செகண்ட் ஸ்டன் ஆன திமுக.. என்னாச்சு?












Click it and Unblock the Notifications