வந்துவிட்டது கிறிஸ்துமஸ்.. உங்கள் அன்புக்குரியவர்களுக்கான கிப்ட் ஐடியாக்கள்.. கொடுத்து அசத்துங்கள்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: கிறிஸ்துமஸ் என்றாலே கிப்ட்கள் தான் அனைவருக்கும் ஞாபகத்திற்கு வரும். உங்களுக்குப் பிடித்தவர்களுக்கு அட்டகாசமாக கிப்ட் கொடுத்து அசத்த எளிய டிப்ஸ் இதோ.

இன்னும் சில நாட்களில் கிறிஸ்துமஸ் பண்டிகை உலகெங்கும் கோலாகலமாகக் கொண்டாடப்பட உள்ளது. ஒவ்வொரு ஆண்டும் டிச.25ஆம் தேதி கிறிஸ்துமஸ் விழா கோலாகலமாகக் கொண்டாடப்படுகிறது.

இந்தாண்டு வரும் ஞாயிற்றுக்கிழமை கோலாகலமாகக் கொண்டாடப்பட உள்ளது. இதற்காக இப்போதே அனைத்து வீடுகளிலும் நட்சத்திரங்கள், வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளது. கொண்டாட்டங்களுக்கு அனைவரும் பக்காவாக ரெடியாகி வருகின்றனர்.

 கிறிஸ்துமஸ்

கிறிஸ்துமஸ்

கிறிஸ்துமஸ் என்றாலே கிப்ட்கள் தான் அனைவருக்கும் ஞாபகத்திற்கு வரும். கிறிஸ்துமஸ் தினத்தன்று ஒவ்வொருவரும் அவர்களுக்குப் பிடித்தவர்களுக்கு கிப்டுகளை வழங்கி அன்பைப் பரிமாறிக் கொள்வார்கள். நமக்குப் பிடித்தவர்களுக்கு என்ன கிப்ட் தரலாம் என்று உங்களுக்குக் குழப்பம் இருக்கிறதா! கவலை வேண்டாம்.. உங்களுக்கு ஹெல்ப் செய்யவே இந்த கட்டுரை. உங்களுக்குப் பிடித்தவர்களுக்கு கிப்ட் தர அட்டகாசமாக கிப்ட் கொடுத்து அசத்த எளிய டிப்ஸ் இதோ.

 காபி கப்கள்

காபி கப்கள்

காபி கப்கள் என்பது சந்தேகத்திற்கு இடமின்றி ஒரு சிறப்பான பரிசு. பெரும்பாலான மக்கள் தங்கள் தினசரி வாழ்க்கையைக் காபியுடன் தான் தொடங்குவார்கள். அப்படியிருக்கும் போது, அவர்களுக்குக் காபி கப் கொடுப்பது சிறப்பானதாகவே இருக்கும். காபி குடித்துக்கொண்டே அவர்கள் மக்கள் புத்தகங்களைப் படிப்பது போன்ற பிடித்த வேலைகளையும் செய்வார்கள். நீங்கள் யாருக்கு கிப்ட் தருகிறீர்களோ அவர்களின் விருப்பத்திற்கு ஏற்ற வண்ணங்கள் மற்றும் வடிவங்களின் செராமிக் காபி கப்களை நீங்கள் தேர்வு செய்யலாம். சாண்டா முகம் கொண்ட கப் அல்லது அவர்களின் படத்தைக் கொண்ட காபி கப்பை கூட நீங்கள் தரலாம்.

 கீ பைன்டர்

கீ பைன்டர்

சமீப ஆண்டுகளில் அதிகம் டிரெண்டாகும் ஒன்று கீ ஃபைன்டர். நீங்கள் கிப்ட் வாங்கி தரப்போகும் நபர் பொருட்களைத் தொலைப்பதை வாடிக்கையாகக் கொண்டவர் என்றால், அவருக்கு இந்த கிப்ட் மிகப் பொருத்தமானதாகவே இருக்கும். இந்த கீ ஃபைன்டரை நீங்கள் சாவி உட்பட எதில் வேண்டுமானாலும் மாட்டிவிடலாம். இதை நாம் மொபைல் செயலி வளியே சின்க் செய்து விடுவோம். இதன் மூலம் அந்த பொருளை நாம் தொலைத்தால், எளிதாக அதைக் கண்டுபிடிக்க முடியும். இந்த கீ பைன்டர்களை நமக்குப் பிடித்த போட்டோ அல்லது பெயரைக் கொண்டு கூட வடிவமைக்கலாம் என்பதால் தனிப்பட்ட முறையிலும் இதை நம்மால் கிப்டாக தர முடியும்.

 நண்பர்களுக்கான கிப்ட்

நண்பர்களுக்கான கிப்ட்

வாசனை மெழுகுவர்த்திகள் அனைவருக்கும் பிடித்த ஒரு கிப்ட் தான்.. இந்த மெழுகுவர்த்திகள் அரவணைப்பின் சின்னமாக அறியப்படுகின்றன.. மேலும், அவை வீடுகளில் மகிழ்ச்சியைப் பரப்பும் என நம்பப்படுகிறது. எனவே, நண்பர்கள், உடன் வேலை செய்வோர், ஆசிரியர்களுக்கு இது சரியானதாக இருக்கும். இது தவிர Wall arts இப்போது சில ஆண்டுகளாகப் பிரபலமடைந்து வருகிறது. திரைப்படங்கள் அல்லது விளையாட்டுத் துறையில் ஆர்வம் கொண்டவர்களுக்கு அதற்கேற்ப Wall arts தர முடியும். இவை நண்பர்களுக்கு ஏற்ற ஒரு கிப்டாக இருக்கும்.

 நண்பர்களுக்கான கிப்ட்

நண்பர்களுக்கான கிப்ட்

வாசனை மெழுகுவர்த்திகள் அனைவருக்கும் பிடித்த ஒரு கிப்ட் தான்.. இந்த மெழுகுவர்த்திகள் அரவணைப்பின் சின்னமாக அறியப்படுகின்றன.. மேலும், அவை வீடுகளில் மகிழ்ச்சியைப் பரப்பும் என நம்பப்படுகிறது. எனவே, நண்பர்கள், உடன் வேலை செய்வோர், ஆசிரியர்களுக்கு இது சரியானதாக இருக்கும். இது தவிர Wall arts இப்போது சில ஆண்டுகளாகப் பிரபலமடைந்து வருகிறது. திரைப்படங்கள் அல்லது விளையாட்டுத் துறையில் ஆர்வம் கொண்டவர்களுக்கு அதற்கேற்ப Wall arts தர முடியும். இவை நண்பர்களுக்கு ஏற்ற ஒரு கிப்டாக இருக்கும்.

 புத்தகம் படிக்கும் நண்பர்

புத்தகம் படிக்கும் நண்பர்

புத்தகம் படிக்கும் நண்பர் என்றால், அவர்களுக்கு புக்மார்க் கிப்டாக தரலாம். இணையத்தில் பல வித்தியாசமான புக்மார்க்குகள் உள்ளன. ஒருவரின் ரசனைக்கு ஏற்ப கிப்டாக தரலாம். இதுதவிர Personalised plannerஉம் கூட ஒருவருக்குச் சிறந்த கிப்டாக அமையும். இது விடுமுறைகளைத் திட்டமிட மட்டுமின்றி ஒருவருக்கு நேரத்தை ஒழுக்கமாகவும் சரியாகவும் பயன்படுத்த உதவும்.

செடிகள்

செடிகள்

அதேபோல செடிகளைக் கூட கிறிஸ்துமஸ் கிப்டாக நாம் வழங்கலாம். வீடுகளிலேயே வளர்க்கும் சின்ன சின்ன செடிகளையும் கூட நாம் அவர்களுக்கு கிப்ட்டாக தரலாம். இவை அதிக இடத்தை பிடிக்காது. அதேநேரம் வீட்டில் ஒரு பசுமையான உணர்வை இவை தரும். இவை எல்லாம் நிச்சயம் ஒரு சிறப்புக் கிறிஸ்துமஸ் தின கிப்ட்டுகளாக இருக்கும். நீங்கள் யாருக்கு கிப்ட் தர போகிறீர்களோ.. அவர்களுக்கு என்ன பிடிக்கும் என்பதை அறிந்து அன்புடன் சின்ன கிப்ட் கொடுத்தால் கூட அது பல காலம் நீடிக்கும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+