தமிழ்நாட்டில் எங்கெல்லாம் வந்தே பாரத் இயங்குகிறது? இனி எங்கெல்லாம் கொண்டு வரப்படும்? இதை படிங்க

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழ்நாட்டில் எங்கெல்லாம் வந்தே பாரத் ரயில் சேவை இயங்குகிறது, இனி எங்கெல்லாம் இயங்கும் என்பது தொடர்பான விவரங்கள் வெளியாகி உள்ளன.

இந்திய ரயில்வேயில் வந்தே பாரத் ரயில் புதிய புரட்சியை ஏற்படுத்தி உள்ளது. இந்த வந்தே பாரத் ரயில் மக்கள் இடையே கவனத்தை ஈர்த்து உள்ளது. இருக்கிற ரயிலை விட "கொஞ்சம்" கூடுதல் வேகம், சுத்தமான உட்புறம், சரியான நேர பராமரிப்பு என்று வந்தே பாரத் ரயில்கள் சிறப்பாக இயங்க தொடங்கி உள்ளன.

What are the upcoming Vande Bharat train services for Tamil Nadu?

இந்தியாவில் வந்தே பாரத் ரயில் அதிக கவனத்திற்கு உள்ளாகி வருகிறது. இந்த ரயிலை பயன்படுத்தும் மக்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் உயர்ந்து வருகிறது.

ஏற்கனவே உள்ள சேவைகள்: கடந்த சில வாரங்களுக்கு முன் சென்னையில் இருந்து கோயம்புத்தூருக்கு வந்தே பாரத் ரயிலை பிரதமர் மோடி திறந்து வைத்தார். சென்னை முதல் பெங்களூர் வழியாக மைசூர் வரை ஏற்கனவே வந்தே பாரத் சேவை உள்ளது. முதல்முறையாக தமிழ்நாடு உள்ளேயே வந்தே பாரத் ரயில் சென்னை - கோவை இடையே திறக்கப்பட்டது. இதன் மூலம் 6 மணி நேரத்தில் கோவை செல்ல முடியும்.

இனி வர இருக்கும் ரயில்கள்:

ரயில் 1: வந்தே பாரத் ரயில்களுக்கு பெரிய அளவில் வரவேற்பு கிடைத்து வரும் நிலையில் மதுரை - பெங்களூர் இடையே ரயில் சேவை தொடங்கப்பட உள்ளது. இதற்கான பரிந்துரை தென்னக ரயில்வே மூலம் கொடுக்கப்பட்டு உள்ளது. 10 மணி நேரத்தில் மதுரை டூ பெங்களூர் செல்லும் விதமாக இந்த சேவை தொடங்கப்பட உள்ளது.

ரயில் 2 : இன்னொரு பக்கம் திருநெல்வேலி மற்றும் சென்னை இடையே வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில் இயக்கப்பட உள்ளது. அக்டோபர் மாதம் தொடங்கப்படுவதாக இருந்தது. ஆனால் இதற்காக டிராக்கை சரி செய்ய வேண்டும்.

குறுகிய வளைவுகளை நீக்க வேண்டும். இந்த பணிகள் நடந்து வந்த நிலையில் எதிர்பார்த்ததை விட வேகமாக பணிகள் முடிந்துள்ளன. இதனால் இந்த மாதம் சென்னை - திருநெல்வேலிக்கு 7 மணி நேர ரயில் சேவை தொடங்கப்படும் என்கிறார்கள்.

ரயில் 3: இது போக சென்னை - விஜயவாடா இடையே புதிய சேவை அக்டோபர் பிரதமர் நரேந்திர மோடியால் காணொளி காட்சி மூலம் தொடங்கப்படும்.

இது குண்டூர், ரேணிகுண்டா, காட்பாடி வழியாக சென்னைக்கு வந்து அதே வழியில் திரும்பும். விஜயவாடா மற்றும் சென்னை இடையே நகரங்களுக்கு இடையேயான ரயிலின் பயண நேரம் கிட்டத்தட்ட ஆறரை மணி நேரம் ஆகும். வந்தே பாரத் ரயிலால் 20 நிமிடங்கள் பயணம் குறையும். சென்னை டூ திருப்பதிக்கு ரயில் வரப்போவதாக செய்திகள் வந்த நிலையில்தான் இந்த விஜயவாடா ரயில் குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது.

படுக்கை வசதி: இதேபோல் இந்தியா முழுக்க பல மாவட்டங்களில், மாநிலங்களில் வந்தே பாரத் ரயில் தொடங்கப்பட்டு உள்ளது. வந்தே பாரத் ரயிலில் பயணம் செய்பவர்கள் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில், விரைவில் படுக்கை வசதிகளுடன் கூடிய 'வந்தே பாரத்' ரயில் அமலுக்கு வர போவதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.

தற்போது வெறும் இருக்கை வசதி கொண்ட வந்தே பாரத் ரயில்கள் மட்டுமே உள்ளன. நாட்டில் இயக்கப்படும் வந்தே பாரத் மொத்த ரயில்களின் எண்ணிக்கை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. அங்கே ரயில்கள் எண்ணிக்கை 23-ஆக உயர்ந்தது. இந்த நிலையில் தற்போது படுக்கை வசதி கொண்ட ரயில் உருவாக்கப்பட்டு வருகிறது. இதனால் விரைவில் படுக்கை வசதிகளுடன் கூடிய 'வந்தே பாரத்' ரயில் அமலுக்கு வர போவதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.

முக்கியமாக திருநெல்வேலி - சென்னை இடையே இயக்கப்படும் வந்தே பாரத் ரயில்கள் படுக்கை வசதியுடன் இருக்கும் என்றும் கூறப்படுகிறது.

ரயில் 4: கடந்த சில வாரங்களுக்கு முன் சென்னையில் இருந்து கோயம்புத்தூருக்கு வந்தே பாரத் ரயிலை பிரதமர் மோடி திறந்து வைத்தார். சென்னை முதல் பெங்களூர் வழியாக மைசூர் வரை ஏற்கனவே வந்தே பாரத் சேவை உள்ளது. இதேபோல் கோவை - பெங்களூர் இடையிலும் வந்தே பாரத் ரயில் சேவை தொடங்கப்பட உள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+