"தலைவலி.!" கிரெடிட் கார்டு அவுட் ஸ்டாண்டிங் இருக்கா.. அதில் இருந்து தப்பிக்க 3 ஈஸியான வழிகள் இருக்கு
சென்னை: கிரெடிட் கார்டு பயன்படுத்தும் நபர்கள் அதில் ஏகப்பட்ட அவுட் ஸ்டேண்டிங் தொகையை வைத்து பிரச்சினையில் சிக்கிக் கொண்டால் அதில் இருந்து தப்பிக்க என்ன செய்ய வேண்டும் என்பதைப் பார்க்கலாம்.
இந்தக் காலத்தில் இளைஞர்கள் பலரும் கிரெடிட் கார்டு வைத்துள்ளனர். கிரெடிட் கார்டுகளை நம்பியே ஒவ்வோரு மாதத்தையும் ஓட்டும் நபர்களும் இங்கு உள்ளனர். எப்போதும் கிரெடிட் கார்டுகளை பயன்படுத்தும் நபர்களை நம்மை சுற்றியே பார்க்க முடியும்.

கிரெடிட் கார்டு என்பது எப்போதும் இருபுறமும் கூர்மையாக இருக்கும் கத்தி போன்றது. அதில் கேஷ்பேக், 45 நாள் கால அவகாசம் உள்ளிட்ட பரிசுகள் இருந்தாலும், அதில் மிகப் பெரிய ஆபத்து ஒன்றும் இருக்கவே செய்கிறது.
கிரெடிட் கார்டு: அதாவது நீங்கள் அந்த 45 நாட்களில் கட்ட வேண்டிய முழு தொகையைச் செலுத்தி விட்டால் பிரச்சினை இல்லை. அதற்கு நீங்கள் ஒரு சதவிகிதம் கூட வட்டி கட்ட தேவையில்லை. ஆனால், அந்த தொகையைச் செலுத்தத் தவறினாலோ, அல்லது முழு தொகையைச் செலுத்தாமல் குறைந்தபட்ச தொகையைச் செலுத்தினாலோ மிகப் பெரிய பிரச்சினை தான். மீதம் இருக்கும் தொகைக்கு நீங்கள் மிகப் பெரிய வட்டியைக் கட்ட வேண்டி இருக்கும்.
இப்படி கிரெடிட் கார்டு கடனில் மாட்டியே அழிந்தவர்கள் பலர் உள்ளனர். இதுபோன்ற நேரங்களில் நாம் என்ன செய்ய வேண்டும், எப்படி கிரெடிட் கார்டு லோனில் இருந்து தப்ப வேண்டும் என்பது குறித்து பொருளாதார நிபுணர் ராஜேஷ் தனது எக்ஸ் பக்கத்தில் விரிவாக விளக்கியுள்ளார்.
என்ன செய்ய வேண்டும்: இது குறித்து அவர் தனது எக்ஸ் பக்கத்தில், "கிரெடிட் கார்டில் ல் ஏகப்பட்ட outstanding இருக்கின்றதா? அதனை அடைக்க மூன்று வழிகள் இருக்கின்றன. என்னவென்று பார்ப்போமா? 1) உங்கள் கிரெடிட் கார்ட் நிறுவனத்திடம் பேசி, அந்த outstanding தொகையை EMI ஆக மாற்றச்சொல்லிக் கேட்கலாம். அந்த EMI கடனுக்கு வட்டி வெறும் 10.5% லிருந்து 13% வரை இருக்கும். கிரெடிட் கார்டுக்கு வருட வட்டி 36% முதல் 46% வரை இருக்கும்போது இந்த முறையில் நிறைய வட்டியை நீங்கள் சேமிக்கலாம்.
2) பர்சனல் லோன் - வேறொரு வங்கியில் உங்கள் கிரெடிட் கார்ட் outstanding க்கு ஈடான தொகையைக் கடனாக வாங்கி, உங்கள் கிரெடிட் கார்ட் outstanding தொகையை முழுவதுமாக கட்டிவிட்டு கார்டை க்ளோஸ் செய்து விடலாம். பர்சனல் லோன் வட்டி - 10.50%.. கிரெடிட் கார்டுக்கு வருட வட்டி 36% முதல் 46% வரை.
3) Loan against Assets - நம்மிடம் இருக்கும் FD, Shares, Mutual Funds, Gold இவைகளுக்கு ஈடான கடனை வாங்கி உங்கள் கிரெடிட் கார்ட் outstanding தொகையை முழுவதுமாக காட்டிவிட்டு கார்டை க்ளோஸ் செய்து விடலாம். Loan against assetsக்கான வட்டி - 13.50%.. 🔹கிரெடிட் கார்டுக்கு வருட வட்டி 36% முதல் 46% வரை. மேற்சொன்ன முறைகள் அனைத்தும் நீங்கள் ஒரே ஒரு முறை (அதுவே கடைசி முறையாகவும் இருக்க வேண்டும்) மட்டுமே செய்தால் உங்களுக்குப் பலன் தரும்.
வியாதி: மேற்சொன்ன முறைகளில் எதாவது ஒன்றைச் செய்துவிட்டு உடனடியாக உங்கள் கிரெடிட் கார்டை நீங்கள் close செய்யவில்லையென்றால் இந்த முறை உங்களுக்கு ஒரு வழக்கமாகவே மாறி உங்களை மூழ்கடித்து விடும் அபாயம் உண்டு. இவை அனைத்தும் ஒரு பிரச்சனைக்கான தீர்வு. மருந்து கசப்பாகத் தான் இருக்கும். வியாதி குணமாக வேண்டுமென்றால் இந்த கசப்பை நீங்கள் உண்டே ஆக வேண்டும்" என்று அவர் பதிவிட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications