Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

வருமான வரி தாக்கல் செய்ய போறீங்களா! ஒரு நிமிஷம் இதை படிங்க.. வரியை சேமிக்க இத்தனை வழிகள் இருக்கா

Subscribe to Oneindia Tamil

டெல்லி: வருமான வரி தாக்கல் செய்ய வேண்டிய காலம் வந்துவிட்ட நிலையில், இதில் எவ்வளவு தூரம் நம்மால் சேமிக்க முடியும் என்பது குறித்து பொருளாதார வல்லுநர் ராஜேஷ் தனது எக்ஸ் பக்கத்தில் சில முக்கிய தகவல்களைப் பகிர்ந்துள்ளார்.

ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் மாதம் நாம் வருமான வரியைத் தாக்கல் செய்ய வேண்டும் அப்படி வருமான வரி தாக்கல் செய்யும் போது அதில் நாம் எப்படி வருமான வரி விலக்கைப் பெற முடியும் என்பதே பலருக்கும் இருக்கும் கேள்வி.. இது குறித்து பொருளாதார வல்லுநர் கே ராஜேஷ் தனது எக்ஸ் பக்கத்தில் மிகத் தெளிவாக விளக்கியுள்ளார்.

What are the ways to get tax exemption on income tax explains economic expert Rajesh

அவர் தனது எக்ஸ் பக்கத்தில், "Tax Planning - FY 2024-25 ஆண்டுக்கான வருமான வரி திட்டமிடல்.. ஏப்ரல் மாதத்தில் நீங்கள் செய்யவேண்டிய மற்றுமொரு முக்கிய கடமை - Tax Planning. இதற்கான வழிமுறைகள் என்ன? எப்படி செய்வது? எந்தெந்த வழிகளில் முதலீடு செய்வது? மேற்கண்ட கேள்விகளுக்கான விடைகள் - இந்த இழையில்.

To begin, நீங்கள் செய்யவேண்டியது - உங்கள் அலுவலகத்தில். 1. New/Old Regime - Select 2. Declaration - எந்தெந்த இடங்களில், எவ்வளவு முதலீடு செய்யப்போகிறீர்கள் என்கிற விவரங்கள் பதியப்பட வேண்டும்.. Declaration செய்வதற்கு எந்தெந்த section உங்களுக்கு exemptions அளிக்கும் என்கிற விவரங்கள்:

Section 80C

Exemption category யில், அனைவருக்கும் மிக பரிச்சயமான ஒன்று Section 80C (முதலீடுகள்). என்னென்ன முதலீட்டு வாய்ப்புகள் உள்ளன? அவைகளில் எவ்வளவு முதலீடு செய்யலாம்? இந்த sectionல் உங்களுக்கு அதிகப்படியாக ஒன்றரை லட்சம் வரையில் exemption கிடைக்கும்.

Section 80

Exemption category யில், மிக சிலருக்கே பரிச்சயமான ஒன்று Section 80 (செலவினங்கள்). இதில் நமக்கு ஏற்படும் செலவுகளை காண்பித்து அதற்கு exemption பெறலாம். எந்தெந்த செலவுகள் வரி சேமிப்பு categoryல் வரும்? அவைகளில் அதிகப்படியாக எவ்வளவு claim செய்யலாம்?

Section 24

வரி சேமிப்பில் மற்றுமொரு section க்கு நிறைய பங்குண்டு. அது Section 24 (வீட்டுக்கடன் வட்டி). நீங்கள் வீட்டுக்கடன் வாங்கி, அந்த வீட்டை நீங்கள் வேறொருவருக்கு வாடகைக்கு விட்டிருந்தால், நீங்கள் வீட்டுக்கடனுக்கான வட்டி முழுவதற்கும் tax exemption பெறலாம்.

National Pension System - NPS

கடைசியாக, 80CCD ல் கூடுதலாக ருபாய் 50,000 க்கு NPS ல் நீங்கள் முதலீடு செய்யும் பட்சத்தில் உங்களுக்கு வரிவிலக்கு அளிக்கப்படும். இந்த 50,000 நீங்களாகவோ, அல்லது உங்கள் அலுவலகத்திலோ (சம்பளத்தில் பிடித்தம் செய்து) முதலீடு செய்யலாம் .. 80C & 80CCD மூலம் அதிகபட்சமாக 2 லட்சம் வரை வரி விலக்கு பெறலாம்.

உங்கள் அலுவலகத்தில், உங்கள் சம்பளத்தில் (Basic மட்டும்) 10% வரை இருந்து எடுத்து, NPS ல் நேரடியாக முதலீடு செய்தால், அப்படி முதலீடு செய்கிற மொத்த தொகைக்கும் வரிவிலக்கு உண்டு. மேற்கண்ட வழிகளில் நீங்கள் வரி சேமிக்கலாம். இந்த ஆண்டு Tax Slabs ல் எந்தவொரு மாற்றமும் கொண்டுவரப்படவில்லை" என்று அவர் பதிவிட்டுள்ளார்.

இது ஒரு செய்தி மட்டுமே. இதை நிச்சயமாக முதலீடு ஆலோசனையாக எடுத்துக் கொள்ளக் கூடாது. முதலீடு சார்ந்த முடிவுகளை எடுக்கும் முன்பு உங்கள் பொருளாதார ஆலோசகரிடம் உரிய ஆலோசனை கேட்ட பிறகு உங்களுக்கு ஏற்ற முடிவை எடுக்க வேண்டும்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+