அந்த 6 விஷயங்கள் என்ன? மயிலாப்பூர் தொகுதி குறித்து தமிழிசை முன்வைக்கும் ஆச்சரியமான புள்ளி விவரங்கள்
சென்னை: பாஜக வேட்பாளர் தமிழிசை சவுந்தரராஜன் பற்றி, கடந்த வாரம் உதயநிதி கூறும்போது, "அக்கா இதுவரை எங்குப் போட்டியிட்டாலும் மக்கள் அவர்களை நிராகரித்தே வந்துள்ளனர். இதுவரை அக்கா 6 தோல்வி.. அவருக்கு கவர்னர் போன்ற 'ரப்பர் ஸ்டாம்ப்' பதவிகள்தான் சரியாக இருக்கும். மக்கள் சேவையில் ஈடுபட மக்கள் அவர்களை அனுமதிக்கப் போவதில்லை" என்று பிரச்சாரத்தில் பேசியிருந்தார்.. இதற்கு மயிலாப்பூர் தொகுதி வேட்பாளரான தமிழிசை, தற்போது பதிலடி தந்துள்ளார்.
மயிலாப்பூர் தொகுதியானது பாரம்பரியம் மிக்க கலாச்சாரப் பின்னணி மற்றும் பல்வேறு தரப்பட்ட மக்கள் வசிக்கும் பகுதியாக விளங்குகிறது. கடந்த 2021 தேர்தலில் 20 ஆண்டுகளுக்குப் பிறகு தி.மு.க சார்பில் வெற்றி பெற்ற த. வேலு, மீண்டும் இந்த தொகுதியில் போட்டியிடுகிறார்.

இவரை எதிர்த்து பா.ஜ.க சார்பில் முன்னாள் தெலுங்கானா ஆளுநரும், கட்சியின் மூத்த தலைவருமான தமிழிசை சௌந்தரராஜன் களம் இறங்கியுள்ளதால் இத்தொகுதி மிகுந்த நட்சத்திர அந்தஸ்தைப் பெற்றுள்ளது.
பாஜக - திமுக
இவர்களுடன் நாம் தமிழர் கட்சி சார்பில் ஆர்.எல். அருண் மற்றும் விஜய்யின் தமிழக வெற்றி கழகம் சார்பில் பி. வெங்கடரமணன் ஆகியோரும் போட்டியில் இருப்பதால், வாக்குகள் சிதறும் சூழலில் தி.மு.க மற்றும் பா.ஜ.க இடையே மிகக் கடுமையான போட்டி நிலவுகிறது.
இதில், பாஜக வேட்பாளர் தமிழிசை சௌந்தரராஜன், மயிலாப்பூர் தொகுதியில் போட்டியிடுவது இந்தத் தேர்தலை மிகுந்த எதிர்பார்ப்புக்கு உள்ளாக்கியுள்ளது. கடந்த எம்பி தேர்தலில் போட்டியிட்டு 2ம் இடத்தை பெற்றார்.. அப்போது பாஜக தனித்து போட்டியிட்ட நிலையில் கணிசமான ஓட்டுக்களையும் மயிலாப்பூர் மக்களிடம் பெற்றிருந்தார்
சென்னை மயிலாப்பூர் தொகுதி
தெலுங்கானா மற்றும் புதுச்சேரியின் ஆளுநராகப் பணியாற்றிய அனுபவத்துடன் மீண்டும் களம் இறங்கியுள்ள அவர், மயிலாப்பூர் தொகுதியின் வளர்ச்சிக்காகப் பல்வேறு வாக்குறுதிகளை முன்வைத்து வருகிறார்.
குறிப்பாக, தொகுதியின் முக்கியப் பிரச்சினைகளான போக்குவரத்து நெரிசலைக் குறைத்தல், பக்கிங்காம் கால்வாயைத் தூய்மைப்படுத்துதல் மற்றும் கழிவுநீர் மேலாண்மை போன்ற அடிப்படை வசதிகளை மேம்படுத்துவதில் அதிக கவனம் செலுத்தி வருகிறார்.
இந்த தொகுதியில் கணிசமாக உள்ள பிராமண சமூகத்தினர் மற்றும் உயர்தட்டு மக்களின் வாக்குகளைப் பெறுவதில் அவர் உறுதியாக உள்ளார். ஆளுநர் பதவியைத் துறந்துவிட்டு மீண்டும் தீவிர அரசியலில் ஈடுபட்டுள்ள தமிழிசைக்கு, கட்சித் தொண்டர்கள் மத்தியில் பலத்த வரவேற்பு இருப்பதாகவும், இது தி.மு.க-விற்கு இணையான கடும் போட்டியை உருவாக்கும் என்றும் அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர்.
தமிழிசை சவுந்தரராஜன்
இந்நிலையில், சென்னை கமலாலயத்தில் தமிழிசை செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.. அப்போது, "தமிழகத்திலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட பெண் நாடாளுமன்ற உறுப்பினர்களே, பெண்களுக்கான இடஒதுக்கீட்டை எதிர்த்து வாக்களிப்பது மிகுந்த வேதனையளிக்கிறது. பெண்களுக்கு கிடைக்க இருந்த அதிகாரம் வழிமறித்து தடுக்கப்பட்டுள்ளது.
பெண்கள் சட்டமியற்றும் இடத்திலும், முடிவெடுக்கும் அதிகாரத்திலும் அமர வேண்டும் என்பது பிரதமர் மோடியின் கனவு. தொகுதிகளும் குறையாது, உரிமையும் பறிபோகாது என ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா நாடாளுமன்றத்திலேயே மிகத் தெளிவாக உறுதி அளித்துவிட்டார்.
6 தோல்வி அக்கா
உதயநிதி என்னை "6 தோல்வி அக்கா" என எள்ளி நகையாடுகிறார். அதற்கு மயிலாப்பூர் மக்கள் வரும் தேர்தலில் தகுந்த பதிலடி கொடுப்பார்கள். நாங்கள் யாரிடமும் சரணடைந்து, யாருடைய தோள் மீதும் ஏறி நின்று எங்கள் தோல்விகளை மறைக்கவில்லை" என்று நறுக்கென கூறியிருக்கிறார்..
திமுகவுக்கு இணையான கடும் போட்டியை மயிலாப்பூரில் பாஜக உருவாக்கும் என்றும் அரசியல் நோக்கர்கள் கருதிவரும் நிலையில், மயிலாப்பூர் எம்எல்ஏ தன்னுடைய தொகுதியில் செய்ய தவறியவற்றை பாஜக எடுத்து சொல்லி வரும் நிலையில், தமிழிசையின் தற்போதைய இந்த காரசார பதிலடி மயிலாப்பூரில் பெரும் அதிர்வலையை உண்டுபண்ணி வருகிறது.












Click it and Unblock the Notifications