பொறுத்தது போதும்.. இன்றே தமிழ்நாடு அமைச்சரவையை மாற்றும் ஸ்டாலின்? ஆளுநரை சந்திக்கும் துரைமுருகன்?

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழ்நாடு அமைச்சரவையில் இன்று முக்கியமான மாற்றங்கள் செய்யப்படலாம் என்று தலைமை செயலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இன்று அமைச்சர் துரைமுருகன் ஆளுநர் ஆர். என் ரவியை சந்திக்க உள்ளார்.

இதில் அமைச்சரவை மாற்றம் தொடர்பான ஆலோசனைகள் செய்யப்பட உள்ளதாக கூறப்படுகிறது.

தமிழ்நாடு அமைச்சரவை மாற்றம் செய்யப்பட உள்ளதாக கடந்த சில நாட்களாகவே செய்திகள் வந்த வண்ணம் இருக்கின்றன. இந்த நிலையில்தான் முதல்வரின் வெளிநாட்டு பயணத்தை முன்னிட்டு இன்று அல்லது நாளை அமைச்சரவை மாற்றம் செய்யப்படலாம் என்று கூறப்படுகிறது.

What cabinet changes are expected from CM Stalins shuffle and How the new cabinet will look?

தமிழ்நாடு அமைச்சரவையில் பெரும் எதிர்பார்ப்பிற்கு இடையில் கடந்த வருடம் டிசம்பர் மாதம் பல்வேறு மாற்றங்கள் செய்யப்பட்டன. முதல்வர் ஸ்டாலினின் ஒரு இலாக்காவையும் சேர்த்து மொத்தமாக 11 அமைச்சர்களின் இலாக்காக்கள் மாற்றப்பட்டன. உதயநிதி ஸ்டாலினுக்கு இளைஞர் நலன், விளையாட்டுத்துறை வழங்கப்பட்டது. அதேபோல் சிறப்பு திட்ட செயலாக்கம் துறை வழங்கப்பட்டு உள்ளது.

உதயநிதி ஸ்டாலின் அமைச்சர் ஆனது மட்டுமின்றி மட்டுமின்றி பல சீனியர் அமைச்சர்களின் துறைகளும் மாற்றப்பட்டன. ஐ பெரியசாமி, ராஜகண்ணப்பன், முத்துசாமி, பெரியகருப்பன், சேகர் பாபு, ராமசந்திரன், காந்தி, பிடிஆர், மெய்யநாதன், மதிவேந்தன் ஆகியோரின் இலாக்காக்கள் மாற்றப்பட்டன.

விளையாட்டுத்துறை அமைச்சராக இருந்த மெய்யானாதன், சுற்றுசூழல் துறை கூடுதலாக ஒதுக்கீடு செய்யப்பட்டது. அமைச்சராக பதவியேற்ற உதயநிதி ஸ்டாலினுக்கு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை சிறப்பு அமலாக்கத்துறை ஒதுக்கீடு செய்யப்பட்டது.

அதே சமயம் டாப் இலாக்கா எதிலும் மாற்றம் செய்யப்படவில்லை. அமைச்சர்கள் துரைமுருகன், கே என் நேரு, அன்பில் மகேஷ், பிடிஆர் பழனிவேல் தியாகராஜன், தங்கம் தென்னரசு, ஏவ வேலு, எம்ஆர்கே பன்னீர்செல்வம், ரகுபதி, செந்தில் பாலாஜி, மா சுப்பிரமணியன், சேகர் பாபு ஆகிய 11 அமைச்சர்களின் பதவிகளில் எந்த மாற்றமும் இல்லை.

அவர்களின் துறைகள் மாற்றப்படவில்லை. இது போன்ற டாப் இலாக்காக்களை மாற்றுவது பொதுவாக பெரிய அளவில் சர்ச்சையாகும். அந்த அமைச்சர் சரியாக செயல்படவில்லையா என்ற பெயர் ஏற்படும். இந்த நிலையில்தான் டாப் இலாக்கா எதுவும் மாற்றம் செய்யப்படவில்லை.

What cabinet changes are expected from CM Stalins shuffle and How the new cabinet will look?

இன்று அல்லது நாளை மாற்றம்:இந்த நிலையில்தான் தற்போது தமிழ்நாடு அமைச்சரவை மாற்றம் செய்யப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன. சமீபத்தில் நடந்த அமைச்சரவை கூட்டத்திற்கு பின் இந்த முடிவு எடுக்கப்பட்டது. இன்று அல்லது நாளை அமைச்சரவையில் மாற்றம் இருக்கும் என்று கூறப்படுகிறது.

இந்த வாரம் முதலீடுகளை ஈர்ப்பதற்காக முதல்வர் ஸ்டாலின் பல்வேறு நாடுகளுக்கு பயணம் மேற்கொள்கிறார்.

இதற்கு முன்பாக தமிழ்நாடு அமைச்சர்கள் எல்லோரும் அமைச்சரவை கூட்டத்தில் கலந்து கொள்ள வேண்டும் என்று அழைப்பு விடுக்கப்பட்டது. அதன்படியே அமைச்சரவை கூட்டத்தில் அமைச்சரவையில் மாற்றம் செய்வது பற்றியும் ஆலோசனை செய்யப்பட்டது.

யார் எல்லாம் மாற்றம் செய்யப்படலாம்?:சில அமைச்சர்கள் பதவி நீக்கம் மற்றும் இலாக்கா மாற்றம் செய்யப்பட வாய்ப்புகள் இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. அதாவது சில அமைச்சர்களிடம் இருக்கும் இலாக்கா குறைக்கப்பட்டு அதில் புதிய அமைச்சர்கள் களமிறக்கப்பட வாய்ப்பு உள்ளதாக கூறப்பட்டது.

அமைச்சர்கள் துரைமுருகன், கே என் நேரு, அன்பில் மகேஷ், ஏவ வேலு, எம்ஆர்கே பன்னீர்செல்வம், செந்தில் பாலாஜி, சேகர் பாபு ஆகிய 11 அமைச்சர்களின் பதவிகளில் எந்த மாற்றமும் இருக்காது. அவர்களின் துறைகள் மாற்றப்பட வாய்ப்புகள் இல்லை என்று கூறப்படுகிறது.

மாற்றப்படும் துறைகள்:பால்வளத்துறை அமைச்சர் ஆவடி நாசர் மற்றும் ஆதி திராவிடர் நலத்துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ் ஆகிய இருவர் நீக்கப்பட வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.

அதேபோல் சுற்றுலாத்துறை அமைச்சர் ராமசந்திரன் மீதும் நடவடிக்கை எடுக்கப்படலாம் என்று கூறப்படுகிறது. இதற்கு பதிலாக மன்னார்குடி எம்எல்ஏ டி ஆர் பி ராஜா மற்றும் தென் மாவட்டங்களை சேர்ந்த மேலும் ஒருவருக்கு அமைச்சர் பதவி அளிக்கப்படலாம் என்று கூறப்படுகிறது.

மேலும் அமைச்சர்கள் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன், தங்கம் தென்னரசு, ரகுபதி, மா சுப்பிரமணியன் ஆகியோரின் இலாக்கா மாற்றம் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இன்று அமைச்சர் துரைமுருகன் ஆளுநர் ஆர். என் ரவியை சந்திக்க உள்ளார்.

இதில் அமைச்சரவை மாற்றம் தொடர்பான ஆலோசனைகள் செய்யப்பட உள்ளதாக கூறப்படுகிறது.

What cabinet changes are expected from CM Stalins shuffle and How the new cabinet will look?

எப்படி மாற்றம்?:முதல்வர் ஸ்டாலின் கையில் அமைச்சர்கள் குறித்த பர்பார்மன்ஸ் ரிப்போர்ட் உள்ளது. பொதுவாக அமைச்சர்களின் செயல்பாடுகள், குறைகள் பற்றி ரிப்போர்ட் முதல்வர் கைக்கு குறிப்பிட்ட மாத இடைவெளியில் செல்வது வழக்கம். எல்லா மாநிலங்களிலும் இது வழக்கத்தில் உள்ளது.

அந்த வகையில் தமிழ்நாடு அமைச்சர்கள் பற்றிய ரிப்போர்ட்டை வைத்து அமைச்சர்களின் நிறை, குறைகளை முதல்வர் ஸ்டாலின் பேச உள்ளார் என்று கூறப்படுகிறது. சில அமைச்சர்களுக்கு டோஸ் விடப்பட வாய்ப்பு உள்ளதாகவும் கூறப்படுகிறது.

அமைச்சரவை மாற்றம் பற்றிய பேச்சுக்கள் மீண்டும் எழுந்துள்ளன. அமைச்சர்களின் செயல்பாடு, அவர்கள் மீது உள்ள புகார், 2024 லோக்சபா தேர்தல் என்று பல விஷயங்களை மனதில் வைத்து இந்த அமைச்சரவை மாற்றங்கள் இருக்கலாம் என்று கூறப்பட்டது.

2024 லோக்சபா தேர்தலுக்கு தயாராக திமுக தீவிரம் காட்டி வருகிறது. தேர்தலை கருத்தில் கொண்டு நிர்வாகிகள் மாற்றப்பட்டு உள்ளனர். இதையடுத்து தற்போது அமைச்சர்களின் பர்பார்மன்ஸ் அடிப்படையில், அமைச்சரவை மாற்றம் செய்யப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

அதாவது அமைச்சர்களின் செயல்பாடு, அவர்கள் மீது உள்ள புகார், 2024 லோக்சபா தேர்தல் என்று பல விஷயங்களை மனதில் வைத்து இந்த அமைச்சரவை மாற்றங்கள் இருக்கலாம் என்று கூறப்பட்டது.

இது தொடர்பான ரிப்போர்ட் ஒன்று முதல்வர் ஸ்டாலினிடம் வழங்கப்பட்டு உள்ளதாம். உளவுத்துறை மூலமாக வழங்கப்பட்ட பர்பார்மன்ஸ் ரிப்போர்ட் மூலம் இந்த அமைச்சரவை மாற்ற முடிவுகள் எடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+