பார்ச்சூனர் Vs இன்னோவா! புதிய மேயர்களுக்கு என்ன கார்? தொலைநோக்கு பார்வையில் நடந்த பரிசீலனை!
சென்னை: தமிழகத்தின் 21 புதிய மேயர்களுக்கும் அரசு வாகனமாக டொயோட்டா இன்னோவா கார் கொடுக்கப்பட்டுள்ளது.
முதலில் பார்ச்சூனர் கார் பரிசீலிக்கப்பட்டதாகவும் அதன் விலைப்பட்டியலும் இன்னோவின் விலைப்பட்டியலும் பெரியளவில் வேறுபட்டதால் இன்னோவா காரையே அரசு தரப்பில் டிக் அடிக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.
மழைகாலங்களில் வெள்ளப்பாதிப்புகளை மேயர்கள் மற்றும் துணை மேயர்கள் ஆய்வு செய்ய செல்ல வேண்டியிருக்கும் என்பதால் தண்ணீர், பள்ளம் மேடான சாலை என அனைத்திற்கும் உகந்த வகையில் இன்னோவா கார் திகழும் என நம்பிக்கை தெரிவிக்கப்படுகிறது..

புதிய மேயர்கள்
தமிழகத்தில் உள்ள 21 மாநகராட்சிகளிலும் புதிய மேயர்கள் நேற்று முறைப்படி பொறுப்பேற்றுக்கொண்டனர். இதையடுத்து கடந்த 6 ஆண்டுகாலமாக அரசியல்வாதிகள் நடமாட்டமின்றி வெறிச்சோடிக் காணப்பட்ட மாநகராட்சி அலுவலகங்கள் நேற்று முதல் பரபரப்பாக இயங்கத் தொடங்கிவிட்டன. இந்நிலையில் புதிய மேயர்கள் மற்றும் துணை மேயர்களுக்கு அரசு வாகனமாக என்ன ரக காரை கொடுப்பது என பரிசீலிக்கப்பட்டதில் இன்னோவா கார் தேர்வாகி இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.

இன்னோவா கார்
சென்னை மட்டுமட்டுமல்லாமல் தமிழகத்தில் உள்ள 21 மாநகராட்சிகளிலும் மழைக்காலங்களில் மேயர்கள் ஆய்வுக்கு செல்ல வேண்டியிருக்கும் என்பதால் பார்சூனர் கார் கொடுப்பது பற்றியும் ஆராயப்பட்டதாக கூறப்படுகிறது. ஆனால் அதன் விலைப்பட்டியலும், அதிலுள்ள ஆடம்பர சொகுசு வசதிகளும் மாநகராட்சி நிர்வாகத் தரப்பை யோசிக்க வைத்ததால் வழக்கம் போல் இன்னோவா காரையே மேயர்களுக்கு அரசு வாகனமாக கொடுப்பது என முடிவெடுக்கப்பட்டதாம்.

புதிய கார்
இதனிடையே தற்போது சென்னை மேயர் மற்றும் துணை மேயருக்கு புதிய இன்னோவா கார்கள் கொடுக்கப்பட்டுள்ளன. இதேபோல் மற்ற மாநகராட்சிகளின் மேயர்களுக்கும் புதிய கார்கள் விரைவில் வழங்கப்பட்டவுள்ளனவாம். அதுவரை ஏற்கனவே அரசு பயன்பாட்டில் இருந்து வரும் இன்னோவா கார்களை அவர்கள் உபயோகம் செய்வார்கள் எனத் தெரிவிக்கிறார்கள் உள்விவரம் அறிந்தவர்கள். இதேபோல் நகராட்சி தலைவர்களுக்கு பொலிரோ வாகனம் அரசுத் தரப்பில் வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்படுகிறது.

அரசு வாகனம்
ஜீப், அம்பாசிடர் கார், டாடா சுமோ ஜீப், பொலிரோ, இன்னோவா, என காலத்திற்கேற்ப அரசுப் பயன்பாட்டு வாகனங்கள் மாறி வருவது கவனிக்கத்தக்கது. தற்போது அமைச்சர்கள் அனைவரும் அரசு தரப்பில் கொடுக்கப்பட்ட டொயோட்டா நிறுவனத்தின் இன்னோவா கிரிஸ்டா ரக காரை பயன்படுத்தி வருவது குறிப்பிடத்தக்கது.
-
வங்கியில் இருக்கும் மக்களின் தங்கத்தை டார்கெட் செய்யும் மத்திய அரசு? அவசர அவசரமாக அனுப்பப்பட்ட உத்தரவு! -
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
"தவெகவா? அண்ணாமலையா? தனி கட்சியா?"... லாரன்ஸ் அரசியல் என்ட்ரி சஸ்பென்ஸ்.. அந்தணன் சொன்ன சீக்ரெட் -
தலைமை செயலகத்தில் மர நாற்காலிக்கு பதிலாக சொகுசு நாற்காலிக்கு மாறிய விஜய்! விலையை கேட்டால் அதிருதே! -
"திருமணமாகாதவர்கள் உறவு கொள்வது தப்பில்லை! அதை தடுக்க சட்டத்தில் இடமில்லை!" உச்ச நீதிமன்றம் தீர்ப்பு -
வளர்த்த கடா..மார்பில் பாய்ந்ததடா! முதுகில் குத்திய கூட்டணி! மு.க.ஸ்டாலின் எடுத்த மிகப் பெரிய முடிவு! -
அதிமுக எம்எல்ஏக்கள் தகுதி நீக்க நடவடிக்கை.. சபாநாயகருக்கு அப்பாவு எழுப்பிய மூன்று கேள்விகள் -
டிரான்ஸ்பார்மர் முறைகேடு வழக்கு.. செந்தில் பாலாஜி மீது இறுகும் பிடி.. வழக்குப்பதிவு செய்தது சிபிஐ! -
ஆட்சிக்கு வந்த 1 மாதத்திற்குள்.. இன்ஸ்ட்டா முழுக்க தவெக எதிர்ப்பு அலை.. அப்படியே தலைகீழாக இருக்கே! -
முதல்வர் விஜய் ஆட்சி எப்படி இருக்கு? ஒரே வார்த்தையில் பதில் சொன்ன பாடகர் வேடன்.. இதிலும் சர்ச்சையா? -
Maridhas: நள்ளிரவில் யூடியூபர் மாரிதாஸ் ஜாமீனில் விடுதலை.. அவதூறு வழக்கில் நீதிபதி பிறப்பித்த முக்கிய உத்தரவு












Click it and Unblock the Notifications