அரசியல் கட்சி ஆரம்பிப்பது OK! விஜய்க்கு காத்திருக்கும் சவால்கள் என்னென்ன?
சென்னை: இதோ வருகிறார், அதோ வருகிறார் என காலம் முழுவதும் ரசிகர்களையும், மக்களவையும் ஏமாற்றாமல் ''எண்ணித் துணிக கருமம்'' என துணிச்சலாக அரசியலில் குதித்து பல அரசியல்வாதிகளின் தூக்கத்தை தொலைக்க வைத்திருக்கிறார் விஜய்.
தமிழக வெற்றி கழகம் என்ற பெயரில் அரசியல் கட்சி தொடங்குவது சரி, இனி வரும் காலங்களில் விஜய்க்கு காத்திருக்கும் சவால்கள் என்னென்ன என்பதை பார்க்கலாம்.

*சினிமா வசீகரத்தால் திரண்ட கூட்டத்தை ஓட்டாக மாற்ற வேண்டிய பெரும் பொறுப்பு விஜய்க்கு உள்ளது. ரசிகர்கள் கூட்டம் மட்டுமே முதலமைச்சர் ஆவதற்குரிய கருவி கிடையாது என்பதால் மக்கள் மன்றத்தில் தொடர்ந்து விஜய் பயணிக்க வேண்டிய கட்டாயம் உள்ளது.
* விஜய் முன்பு இருக்கும் மற்றொரு முக்கிய சவால் மக்களின் நம்பகத்தன்மையை பெறுவது. இதற்காக இன்னும் தீவிரமாக களப்பணிகளை கிராம அளவில் அவர் முன்னெடுக்க வேண்டும்.
* விமர்சனங்கள், அவதூறுகள், கேலி கிண்டல்கள் என எல்லா விதமான தாக்குதல்களையும் ஏற்றுக்கொள்ளும் மனப் பக்குவத்தை வளர்த்துக் கொள்ள வேண்டும். அண்ணா சொன்னது போல் எதையும் தாங்கும் இதயத்துடன் விஜய் இருக்க வேண்டும். அதேபோல் தனது ரசிகர் பட்டாளத்தையும் உணர்ச்சிவசப் படக்கூடாது எனக் கட்டுப்படுத்த வேண்டிய கடமையும் விஜய்க்கு உண்டு.
*நாடாளுமன்றத் தேர்தலுக்கு பிறகு, இன்னும் குறிப்பாக 2026 சட்டமன்றத் தேர்தலுக்கு 1 வருடத்திற்கு முன்பாக பல்வேறு அரசியல் கட்சிகளை சேர்ந்த முக்கிய பிரமுகர்களும், முன்னாள் எம்.எல்.ஏ.க்களும் விஜய் கட்சியில் ஐக்கியமாகி சீட் வாங்கிவிட துடிக்கக் கூடும். அந்த தருணத்தில் விஜய் சந்தர்ப்பவாதிகளை அடையாளம் கண்டு அவர்களிடமிருந்து சற்று தள்ளி நின்று கொள்ள வேண்டும்.
*அதேபோல் அரசியல் செய்ய முடியாத அளவுக்கு நாலாபுறமும் இருந்து குடைச்சல்கள் வரக்கூடும். அதனை மனச்சோர்வின்றி எதிர்கொள்ளும் ஆற்றலை விஜய் அதிகப்படுத்திக் கொள்ள வேண்டும். விஜயை பொறுத்தவரை அதிகம் பேசாதவர் என்ற பிம்பம் ஒன்று உண்டு. இது சினிமாவுக்கு வேண்டுமானால் பொருந்தியிருக்கலாம். ஆனால் அரசியலுக்கு வந்துவிட்டால் அவர் பேசியே ஆகவேண்டும்.
*தமிழக வாழ்வாதார பிரச்சனைகள் குறித்து விஜய் அறிந்துகொள்ள வேண்டியது அவசியம். மீத்தேன், ஷேல் கேஸ், ஹைட்ரோ கார்பன், மேகேதாது அணை, நியூட்ரினோ, கூடங்குளத்தில் கூடுதல் அணு உலை, என விஜய் தெரிந்துகொள்ள வேண்டிய விவகாரங்கள் ஏராளமாக உள்ளன.
* தமிழகத்தின் எந்த விவகாரம் குறித்தும் சரியான தரவுகள், புள்ளி விவரங்களை விஜய் விரல் நுனியில் வைத்துக்கொண்டால் மட்டுமே அவரால் வரும் காலத்தில் மக்களையும், செய்தியாளர்களையும் எதிர்கொள்ள முடியும். இதனால் இதற்கு தனி டீமை களமிறக்கி டேட்டா அப்டேட் செய்துகொள்ள வேண்டும்.
-
அதிமுக பெயரையே தவிர்க்கும் விஜய்?.. தவெக வியூகத்தால் அதிருப்தியில் தொண்டர்கள்! -
விஜய் விதித்த 6 மாத கெடு.. உடனே வேலையை முடிங்க.. அதிகாரிகளுக்கு பறந்த அந்த உத்தரவு.. பின்னணி -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
இன்ஸ்டாவில் பொய் செல்லி.. ஆட்சிக்கு வந்துட்டாரு விஜய்! யாரும் கலங்க வேண்டாம்.. ஆறுதலாக பேசிய கேடிஆர் -
விஜய் ‘இன்னும் மாறவில்லை’.. சீறும் திமுக, அதிமுக! திருச்சியில் வெடித்த அடுத்தகட்ட அரசியல் போர்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
ஐடி அலுவலகம் போல் மாறும் அரசு அலுவலகம்.. ஆதவ் அர்ஜுனா சொன்ன 40 வருட திட்டம்! -
மதசார்பற்ற கொள்கை.. மாநில உரிமைகளில் சமரசமே கிடையாது.. மீண்டும் அழுத்தமாக சொன்ன முதல்வர் விஜய் -
இதாம்லே ட்விஸ்டு.. துண்டை போட்ட உடன்பிறப்புகள்! நழுவிய தவெக நிர்வாகிகள்! விஜய் காதுக்கு போன மேட்டர்! -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா -
5,000 பேர் மட்டும் தான்.. திருச்சி கிழக்கில் விஜய் நன்றி தெரிவிக்கும் நிகழ்ச்சிக்கு கட்டுப்பாடு -
"விஜய் தலைமையில் எதிர்க்கட்சி இல்லாத ஆட்சி அமையும்".. உணர்ச்சி பொங்க பேசிய அமைச்சர் ரமேஷ்












Click it and Unblock the Notifications