நேரம் பார்த்து கோவைக்கு பறந்த முதல்வர்.. விமானத்தில் ஸ்டாலின் கையில் அது என்ன "பேப்பர்"? பரபர போட்டோ
சென்னை: 3 நாள் பயணமாக முதல்வர் ஸ்டாலின் கோவைக்கு சென்றுள்ளார். அவர் கோவை, ஈரோடு, திருப்பூரில் பல்வேறு கூட்டங்களில் கலந்து கொள்ள இருக்கிறார்.
முதல்வர் ஸ்டாலின் ஆட்சிக்கு வந்ததில் இருந்தே ர் கோவை, ஈரோடு, திருப்பூர் உள்ளிட்ட மாவட்டங்கள் மீது அதிக கவனம் செலுத்தி வருகிறார். முக்கியமாக கோவைக்கு அதிக கவனம் செலுத்தி வருகிறார்.
அதிமுகவில் நிலவும் உட்கட்சி பிரச்சனை காரணமாக அக்கட்சி கொங்கு மண்டலத்தில் கவனம் செலுத்தமுடியவில்லை . கட்சிக்கு உள்ளே நிர்வாகிகள் பலர் மாறி மாறி மோதிக்கொண்டு இருக்கிறார்கள்.
இந்த நிலையில்தான் நேரம் பார்த்து கோவை மற்றும் சுற்றுவட்டார மாவட்டங்கள் மீது ஸ்டாலின் கவனம் செலுத்தி வருகிறார்.

கோவை பயணம்
அதன் ஒரு பகுதியாக முதல்வர் ஸ்டாலின் 3 நாள் பயணமாக இன்று கோவை புறப்பட்டார். 7 மணிக்கு விமான நிலையத்தில் இண்டிகோ விமானம் மூலம் அவர் கோவைக்கு புறப்பட்டார். இன்று இரவு கோவை அரசினர் விருந்தினர் மாளிகையில் முதல்வர் ஸ்டாலின் ஓய்வு எடுக்க உள்ளார். நாளை பல்வேறு அரசு நிகழ்ச்சிகளில், மக்களுக்கு நலத்திட்டங்கள் வழங்கும் நிகழ்ச்சிகளில் கலந்து கொள்கிறார். நாளை முழுக்க கோவையில் இருக்கும் முதல்வர் ஸ்டாலின் மாலையில் திருப்பூர் செல்கிறார்.

திருப்பூர்
நாளை மறுநாள் திருப்பூரில் சிறு, குறு நடத்தர நிறுவனங்களுடன் முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை நடத்த உள்ளார். இதில் அவர்களின் தேவைகள், குறைகளை முதல்வர் ஸ்டாலின் கேட்டறிவார். அதன்பின் அங்கிருந்து மாலையில் மாற்று கட்சியினர் திமுகவில் இணையும் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள இருக்கிறார். இந்த நிகழ்ச்சியில் அமைச்சர் செந்தில் பாலாஜியும் உடன் இருப்பார். இதற்கான ஏற்பாடுகள் திருப்பூரில் தீவிரமாக நடந்து வருகிறது. பின்னர் அவர் அன்று மாலையே ஈரோடு செல்கிறார்.

ஈரோடு
ஈரோட்டில் வெள்ளிக்கிழமை பல்வேறு ஆய்வுகளில் கலந்து கொள்கிறார். அங்கு சில கட்சி ரீதியான நிகழ்ச்சிகளில் கலந்து கொள்கிறார். பின்னர் பெருந்துறையில் மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சியில் முதல்வர் ஸ்டாலின் கலந்து கொள்வார். அதன்பின் மீண்டும் பிற்பகல் கோவைக்கு திரும்ப உள்ளார். கோவையில் முதல்வர் ஸ்டாலின் பிஎஸ்ஜி கல்லூரியின் ஆண்டு விழா கலைநிகழ்ச்சியில் கலந்து கொள்ள உள்ளார்.

பேப்பர்
இன்று கோவை புறப்பட்ட முதல்வர் ஸ்டாலின் விமானத்தில் முக்கியமான ஆவணங்களை படித்தபடி வந்தார். நாளை அரசு சார் நிகழ்ச்சிகள் பல நடக்க உள்ளன. இதில் சில அறிவிப்புகளும் கொங்கு மாவட்டங்கள் தொடர்பாக வெளியிடப்பட உள்ளன. இதை முன்னிட்டு முதல்வர் ஸ்டாலின் சில முக்கியமான் ஆவணங்களை எடுத்து கொண்டு, விமானத்தில் படித்தபடி வந்தார். முதல்வர் ஸ்டாலின் விமானத்தில் முக்கியமான ஆவணங்களை படித்த புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.
-
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
எடப்பாடியிடம் சீறிய சிவி சண்முகம்.. மன்னிப்பு கடிதம் எழுதி தரவேண்டுமா? தந்தால் இமேஜ் என்னவாவது? -
வேலுமணி அணி வைத்த டிமாண்ட்.. எடப்பாடி பழனிசாமி என்ன சொன்னார்? அதிமுகவுக்கு குட் நியூஸ்! -
எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்த கையோடு, அமைச்சர்களை சந்தித்து தவெகவில் இணைந்த இசக்கி சுப்பையா! -
“திமுக உதவியுடன் ஆட்சி!” எடப்பாடி பழனிசாமியின் கேம்.. தவெகவில் இணைய காரணத்தை சொன்ன எம்எல்ஏக்கள் -
சிலுப்பிகிட்டு போகும் சிறுத்தை குட்டிகள்..க்ரீன் சிக்னல் காட்டிய அறிவாலயம்! குறுக்கே நிற்கும் திருமா -
தவெகவில் இணைந்த நடிகர் மீசை ராஜேந்திரன்.. விஜயகாந்த் நிழலாகவே பயணித்தவர்.. அதிமுகவில் இருந்து ஜூட்! -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
ஜனநாயக படுகொலை.. எதிர்க் கட்சிகள் ஒன்று சேர்வோம்! விஜய் செய்தது ஒரு மோசடி! அட்டாக் மோடில் அன்புமணி -
"வெறும் 2 எம்எல்ஏக்கள் தான்".. யார் அவர்கள்? மதுரை உள்பட10 தென்மாவட்டங்களில் பரிதாப நிலையில் அதிமுக -
சென்னையில் மின்வெட்டின் பின்னணி.. அமைச்சர் கருத்துக்கு திமுக தொழிற்சங்கம் திட்டவட்டமாக மறுப்பு -
CM Saar.. மாறி மாறி மக்களை ஏமாற்றும் விஜய்.. SCAM செய்யும் தவெக அரசு.. உதயநிதி ஸ்டாலின் அதிரடி!












Click it and Unblock the Notifications