இது மட்டும் நடந்தால்.. எடப்பாடிக்கு அது பெரிய சறுக்கல்! அதிமுக அஸ்தமனம்! பாஜகவிற்கு போன நல்ல செய்தி
சென்னை: லோக்சபா தேர்தல் தொடர்பாக வெளியாகி இருக்கும் கருத்து கணிப்பு ஒன்று அதிமுகவிற்கு அதிர்ச்சியாக மாறி உள்ளது. அந்த கருத்து கணிப்பு மட்டும் உறுதியானால் பாஜக தமிழ்நாட்டில் மிகப்பெரிய பாய்ச்சலை நிகழ்த்தி இருக்கிறது என்றுதான் கூற வேண்டும்,
லோக்சபா தேர்தல் தொடர்பாக வரிசையாக சர்வேக்கள் வெளியாகி வருகின்றன. இந்த சர்வேக்கள் பல்வேறு அதிர்ச்சி தரும் சுவாரசியமான விஷயங்களை வெளியிட்டு வருகின்றன. டைம்ஸ் நவ் - மேட்ரைஸ் என்சி இது தொடர்பாக கருத்து கணிப்புகளை மேற்கொண்டு உள்ளன.

கணிப்பு; அதில், திமுக கூட்டணி லோக்சபா தேர்தலில் 59.7 சதவிகிதம் வாக்குகளை பெறும் என்று கணிப்பு வெளியிடப்பட்டு உள்ளது. அதேபோல் பாஜக 20.6 சதவிகிதம் வாக்குகளை பெறும் என்று கணிக்கப்பட்டு இருக்கிறது. மேலும் அதிமுக 16 சதவிகித கருத்து கணிப்புகளை பெறும் என்று கணிக்கப்பட்டு உள்ளது.
அதாவது இந்த முறை பாஜக அதிமுகவை விட அதிக வாக்குகள் பெறும். முதல்முறையாக பாஜகவின் வாக்கு வங்கி அதிமுகவை முந்தும். தமிழ்நாட்டில் பாஜக இரண்டாம் இடத்தை பெறும் என்று கணிக்கப்பட்டு உள்ளது.
எடப்பாடிக்கு அது பெரிய சறுக்கல்: பொதுவாக அதிமுக ஜெயலலிதா மறைவிற்கு பின் ஒரு தேர்தலில் கூட வெற்றிபெறவில்லை. ஆனாலும் வாக்கு சதவிகிதம் 30-40 என்ற அளவில் எடுக்கும். கடந்த சட்டசபை தேர்தலில் கூட 39.72 சதவிகிதம் வாக்குகளை அதிமுக வென்றது. திமுக 45.38% வாக்குகளை வென்றது. அதேபோல் 2019 லோக்சபா தேர்தலில் 30.56% சதவிகிதம் வாக்குகளை அதிமுக வென்றது. திமுக 53.15% வாக்குகளை வென்றது.
ஆனால் இப்போது 2021ல் திமுக கூட்டணி லோக்சபா தேர்தலில் 59.7 சதவிகிதம் வாக்குகளை பெறும் என்று கணிப்பு வெளியிடப்பட்டு உள்ளது. அதேபோல் பாஜக 20.6 சதவிகிதம் வாக்குகளை பெறும் என்று கணிக்கப்பட்டு இருக்கிறது. மேலும் அதிமுக 16 சதவிகித கருத்து கணிப்புகளை பெறும் என்று கணிக்கப்பட்டு உள்ளது.
இதன் மூலம் பாஜக அதிமுகவின் இடத்தை பிடித்து இரண்டாம் இடம் பெறும் என்று கணிப்புகள் தெரிவிக்கின்றன.
லோக்சபா தேர்தல் கணிப்பு; அதுபோக தமிழ்நாட்டில் லோக்சபா தேர்தலில் யார் வெற்றிபெறுவார்கள் என்றும் கணிப்பு வெளியிடப்பட்டு உள்ளது. . தமிழ்நாடு (மொத்த இடங்கள்- 39): லோக்சபா தொகுதி கணிப்புகள் இதோ:
- பாஜக: 1
- திமுகவின் இந்தியா கூட்டணி - 36
- அதிமுக: 2
- மற்றவை: 0
தமிழ்நாட்டில் தோல்வி: அதே சமயம் தமிழ்நாட்டில் பாஜக படுதோல்வி அடையும் என்று கணிக்கப்பட்டு உள்ளது. தமிழ்நாடு (மொத்த இடங்கள்- 39): லோக்சபா தொகுதி கணிப்புகள் படி பாஜக: 1 இடத்தில் மட்டுமே வெல்லும். திமுகவின் இந்தியா கூட்டணி - 36 இடங்களில் வெல்லும். 39 இடங்களில் இருந்து 3 இடங்களை திமுக இழக்கும் என்றாலும், பெரும்பான்மை இடங்களில் திமுகவே வெல்லும். அதிமுக: 2 இடங்களில் வெல்லும். கடந்த முறை ஒரு தொகுதியில் வென்ற அதிமுக இந்த முறை 2 இடங்களில் வெல்லும் என்று கணிக்கப்பட்டு உள்ளது.
மொத்தமாக ரிசல்ட் என்ன: மக்களவையின் ஒட்டுமொத்த கணிப்பு: மொத்த இடங்கள்: 543
பாஜக கூட்டணி: 366
இந்தியா கூட்டணி: 104
மற்றவை: 73
மீண்டும் பாஜக ஆட்சி: இதன் மூலம் பாஜக மீண்டும் முழு பெரும்பான்மை பெற்று ஆட்சி அமைக்கும் என்று கணிக்கப்பட்டு உள்ளது. 3வது முறையாக பாஜக ஆட்சி அமைக்கும் என்று கணிக்கப்பட்டு உள்ளது.












Click it and Unblock the Notifications