கோட்டை விட்டது அங்கதான்.. அதோட சிதறிப்போச்சு.. ‘ராஜதந்திரி’ சொன்ன பாயிண்ட்! உன்னிப்பாக கேட்ட ஓபிஎஸ்!
ஓபிஎஸ் இன்று நடத்திய ஆலோசனையின்போது, பண்ருட்டி ராமச்சந்திரன் ஒரு விஷயத்தை எடுத்து வைத்துள்ளார்.
சென்னை : உச்ச நீதிமன்றத்தில் எங்கள் தரப்பு நியாயங்களை விளக்க திறமையாக நாங்கள் வாதத்தை வைக்கவில்லையோ என்றுதான் தோன்றுகிறது என அதிமுக ஓபிஎஸ் அணியின் அரசியல் ஆலோசகர் பண்ருட்டி ராமச்சந்திரன் கூறியுள்ளார்.
கடந்த ஆண்டு ஜூலை 11ஆம் தேதி நடைபெற்ற அதிமுக பொதுக்குழுவை எதிர்த்து ஓ.பன்னீர்செல்வம் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்திருந்தார்.
அந்த மேல்முறையீட்டு வழக்கு நீதிபதி தினேஷ் மகேஸ்வரி தலைமையிலான அமர்வில் விசாரணை நடைபெற்று வந்த நிலையில் நேற்று தீர்ப்பு வெளியிடப்பட்டது.
இந்நிலையில், இன்று ஓபிஎஸ் அணியினர் தீவிர ஆலோசனை மேற்கொண்டனர். அதில் முக்கியமான விஷயங்கள் அலசப்பட்டுள்ளன.

ஓபிஎஸ் அணி ஆலோசனை
ஜூலை 11ல் நடந்த அதிமுக பொதுக்குழு செல்லும் என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. இந்த தீர்ப்பு ஓபிஎஸ் தரப்புக்கு பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது. அதேசமயம் எடப்பாடி பழனிசாமி தரப்பினர் இந்த தீர்ப்பை வரவேற்று கொண்டாடி வருகின்றனர். இந்நிலையில் சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள தனது வீட்டில் ஓ.பன்னீர்செல்வம் தனது ஆதரவாளர்களான பண்ருட்டி ராமச்சந்திரன், வைத்திலிங்கம், மனோஜ் பாண்டியன் உள்ளிட்டோருடன் அடுத்த கட்ட நடவடிக்கை தொடர்பாக ஆலோசனை மேற்கொண்டார்.

எங்கே கோட்டை விட்டோம்
அப்போது, உச்ச நீதிமன்றம் வழங்கியுள்ள தீர்ப்பின் முக்கிய அம்சங்கள் பற்றி விவாதித்துள்ளனர். வழக்கு விசாரணை தொடங்கும்போது, நமக்கு சாதகமாகத் தானே நீதிபதிகளின் கருத்து இருந்தது, எங்கே கோட்டை விட்டோம் என்பது பற்றி விவாதித்துள்ளனர். முக்கியமாக, ஈபிஎஸ் அணி வழக்கறிஞர்களின் வாதங்கள் தங்கள் தரப்பை ஓவர்டேக் செய்ததாகப் பேசியுள்ளனர்.

முறையிடுவோம்
மேலும், அடுத்தகட்டமாக என்ன செய்வது? சிவில் கோர்ட்டில் தொடரப்பட்ட பிரதான வழக்கில் இன்னும் தீர்ப்பு வரவில்லை. எனவே, அந்த வழக்கிற்கு முக்கியத்துவம் கொடுக்க ஓபிஎஸ் அணி முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. அந்த சிவில் வழக்கு முடிவு வரும் வரை ஏற்கனவே இருக்கும் நிலையே தொடர வேண்டும் என்று தேர்தல் ஆணையத்தில் மனு கொடுக்கவும் ஓ.பன்னீர்செல்வம் தரப்பு முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.

திறமையாக வாதாடவில்லையோ
பின்னர் ஓபிஎஸ் தரப்பினர் கூட்டாக செய்தியாளர்களைச் சந்தித்தனர். அப்போது பேசிய ஓபிஎஸ் அணியின் அரசியல் ஆலோசகர் பண்ருட்டி ராமச்சந்திரன், "உச்ச நீதிமன்றம் என்ற காரணத்தினால் எங்கள் தரப்பு நியாயங்களை அவர்களுக்கு எடுத்து விளக்க போதுமான அளவு திறமையோடு நாங்கள் வாதத்தை வைக்கவில்லையோ என்றுதான் கருதுகிறோம். எனினும் நீதியும், நியாயமும் எங்களிடம் இருக்கிறது. தர்மம் எங்களிடம் இருக்கிறது. மீண்டும் நீதிமன்றத்தை நாடுவோம்.

சுற்றி வளைத்து
நான் கேட்பதெல்லாம் ஒரே கேள்விதான். அடிப்படை உறுப்பினர்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவி உண்டா இல்லையா என்பது தான். அதற்கு சென்னையில் உள்ள உயர் நீதிமன்றமும் சரி, டெல்லியில் உள்ள உச்ச நீதிமன்றமும் சரி இறுதியான தீர்ப்பை வழங்காமல் இவர்களும் பொதுக்குழு செல்லும் என்று சொல்கிறார்கள். அவர்களும் பொதுக்குழு செல்லும் என்று சொல்கிறார்கள்.

நல்ல தீர்ப்பை பெறுவோம்
இந்த தீர்ப்பு சுற்றி வளைத்துச் சொல்வதாக இருக்கிறதே தவிர நேரான பதில் இல்லை. பொதுக்குழு செல்லும் ஆனால், அதன் தீர்மானம் பற்றி பேச மாட்டோம் என்பது, உச்ச நீதிமன்றம் பொறுப்பை தட்டிக்கழிக்கிறதோ என எண்ண வைக்கிறது. பொதுக்குழு செல்லுமா செல்லாதா என்று மட்டும்தான் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது, அதன் தீர்மானங்கள் குறித்து எந்த வரியும் இல்லை. எனவே இதனைச் சுட்டிக்காட்டி எங்கள் வழக்கறிஞர்கள் மீண்டும் நல்ல தீர்ப்பினை பெறுவார்கள் என்று நம்புகிறோம்." எனத் தெரிவித்துள்ளார்.
-
எல்லாத்தையும் நான் பாத்துக்குறேன்..நீங்க ஒத்துழைப்பு மட்டும் கொடுங்க! ர.ர.க்களுக்கு எடப்பாடி மெசேஜ்! -
“EPS மாலையிட்டால்தான் என் ஆத்மா சாந்தியடையும்”.. அதிமுக தொண்டனின் உடலுக்கு அஞ்சலி செலுத்திய எடப்பாடி -
அதிமுக பெயரையே தவிர்க்கும் விஜய்?.. தவெக வியூகத்தால் அதிருப்தியில் தொண்டர்கள்! -
இபிஎஸ் வர்றதுக்குள்ள இப்படியா.. எஸ்.பி.வேலுமணி முகத்துக்கு நேராக துரோகின்னு கத்திய அதிமுக நபர் இவரா? -
தொண்டர்களுக்கு மதிப்பு கொடுங்க.. அதிமுக தலைவர்கள் திருத்தி கொள்ளணும்.. செல்லூர் ராஜூ ஒரே போடு! -
ஒரு உயிர் போயிருச்சு..விஜய் வைத்திருக்கும் கைக்கூலி! அதிகாரம் எப்பவுமே இருக்காது! உதயகுமார் வார்னிங் -
எடப்பாடி பழனிசாமிக்கு நிம்மதி.. IT விசாரணை கோரிய வழக்கை தள்ளுபடி செய்தது சென்னை உயர் நீதிமன்றம் -
விஜய்க்கு அரசு பாதுகாப்பு மேல நம்பிக்கை இல்லையா? தனி பாதுகாவலரோடு வருவது ஏன்? லாக் செய்த அதிமுக -
இதுவும் பெரிய திமிங்கலம் தான்.. அதிமுகவுக்கு அடுத்த ஆப்பு வைத்த விஜய்! சி.விஜயபாஸ்கரின் திடீர் மூவ்! -
“எனது கடைசி ஆசை..” வீடியோவில் பேசிவிட்டு உயிரை மாய்த்துக்கொண்ட அதிமுக தொண்டர்! கட்சியினர் அதிர்ச்சி! -
இன்ஸ்டாவில் பொய் செல்லி.. ஆட்சிக்கு வந்துட்டாரு விஜய்! யாரும் கலங்க வேண்டாம்.. ஆறுதலாக பேசிய கேடிஆர் -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா












Click it and Unblock the Notifications