தமிழக அரசியலில் சஸ்பென்ஸ் உடைகிறது.. திமுக, அதிமுகவிற்கு காத்திருக்கும் ட்விஸ்ட்
சென்னை: தமிழக அரசியல் வரலாற்றில் 2026 சட்டமன்றத் தேர்தல் என்பது வெறும் ஆட்சியை பிடிக்க வேண்டும் என்பதற்கான களமாக மட்டுமில்லை.. அது அதிகாரப் பகிர்வு மற்றும் இருப்புக்கான போராட்டமாக இருக்கிறது. வழக்கமாக தேர்தல் நெருங்கும் போது தி.மு.க.வும் அ.தி.மு.க.வும் தங்களது கூட்டணிகளை ஓரளவு இறுதி செய்துவிடும். ஆனால், இன்று நிலைமை தலைகீழாக இருக்கிறது. ஒருபுறம் ராமதாஸ், மறுபுறம் பிரேமலதா விஜயகாந்த். இந்த இருவரின் 'சிக்னலுக்காக' அறிவாலயமும், எடப்பாடியார் இல்லமும் காத்திருக்கிறது. இதுதான் தமிழக அரசியலின் தற்போதைய எதார்த்தம்.
தமிழக சட்டசபை தேர்தல் நெருங்கி வருவதால் அரசியல் கட்சிகள் தங்களது களப்பணியை தீவிரப்படுத்தி இருக்கினறன. ஏப்ரல் 3-வது வாரத்தில் சட்டசபை தேர்தல் நடக்கலாம் என்று நம்பப்படுகிறது. இந்த சூழ்நிலையில் தி.மு.க., அ.தி.மு.க., நாம் தமிழர், த.வெ.க. என 4 முனை போட்டி இருக்கலாம் என்ற கருத்து உருவாகியுள்ளது. தி.மு.க. கூட்டணியில் காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள், கம்யூனிஸ்டு கட்சிகள், ம.தி.மு.க., இந்திய யூனியன் முஸ்லிம் லீக், மனிதநேய மக்கள் கட்சி, கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி, தமிழக வாழ்வுரிமை கட்சி உள்ளிட்ட கட்சிகள் இடம் பெற்றுள்ளன.

அதிமுக கூட்டணி
அ.தி.மு.க. கூட்டணியில் பா.ஜனதா, பா.ம.க. (அன்புமணி), அ.ம.மு.க., த.மா.கா. உள்ளிட்ட கட்சிகள் அங்கம் வகிக்கின்றன. புதிதாக களத்துக்கு வந்துள்ள விஜய் தலைமையிலான த.வெ.க.வும் ஒரு கூட்டணியை அமைக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறது. ஆனால் யாரும் இதுவரை கூட்டணியில் இணையவில்லை. நாம் தமிழர் கட்சி தனித்து களம் காண்கிறது.
இத்தகைய சூழ்நிலையில் எந்த கூட்டணியில் சேரலாம் என்ற யோசனையில் தே.மு.தி.க., பா.ம.க. (டாக்டர் ராமதாஸ்), புதிய தமிழகம் ஆகிய கட்சிகள் இருக்கின்றன இந்த கட்சிகள் இன்னும் தங்கள் முடிவை அறிவிக்கவில்லை. முன்னாள் முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வமும் பாஜக கூட்டணியில் சேருவாரா அல்லது என்ன முடிவெடுக்க போகிறார் என்பது தெரியவில்லை.
மறைமுக பேச்சுவார்த்தை
தே.மு.தி.க., பா.ம.க. (டாக்டர் ராமதாஸ்) ஆகிய கட்சிகளை தங்கள் அணியில் இணைத்துக்கொள்ள மறைமுக பேச்சுவார்த்தையை தி.மு.க., அ.தி.மு.க., த.வெ.க. ஆகிய கட்சிகள் தொடங்கி இருக்கின்றன. டாக்டர் ராமதாசும், பிரேமலதாவும் தங்களது நிலைப்பாட்டை அறிவிக்காததால், இருபெரும் கட்சிகளாக தி.மு.க.வும், அ.தி.மு.க.வும் தங்களது கூட்டணியை இறுதி செய்யாமல் இருந்து வருகின்றன.
கூட்டணி கணக்கு
தேர்தல் அறிக்கை குழு, பிரசார குழுக்களை தி.மு.க., அ.தி.மு.க. அறிவித்தபோதிலும் கூட்டணியை இறுதி செய்யவில்லை. மேற்கண்ட அந்த கட்சிகள் எடுக்கும் முடிவை பொறுத்து கூட்டணியை இறுதி செய்ய தி.மு.க, அ.தி.மு.க. திட்டமிட்டுள்ளது.
ராமதாஸ் நிலைப்பாடு
இதில் பா.ம.க.வைப் பொறுத்தவரை, கடந்த காலங்களில் அவர்கள் எடுத்த முடிவுகள் தேர்தலின் திசையையே மாற்றி இருக்கின்றன. 2026-ல் பா.ம.க.வின் பலம் என்பது வன்னியர் வாக்கு வங்கி மட்டுமல்ல, வட மாவட்டங்களின் வெற்றி-தோல்வியை நிர்ணயிக்கும் சக்தியாக இருந்து வருகிறது. அன்புமணி அதிமுக கூட்டணியில் இருப்பதால், அவர் திமுக கூட்டணியில் இணைவாரா என்ற கேள்வி எழுத்ள்ளது. ராமதாஸ் இன்னும் மௌனம் காக்கிறார். அவரது முடிவு காரணமாக திமுக இன்னும் கூட்டணியை இறுதி செய்ய முடியாமல் இருக்கிறதாம்.
பிரேமலதாவின் நிலைப்பாடு
கேப்டன் விஜயகாந்தின் மறைவுக்குப் பிறகு தே.மு.தி.க.வின் எதிர்காலம் கேள்விக்குறியான போது, அதைத் தைரியமாக வழிநடத்தி வருகிறார் பிரேமலதா. விருதுநகர் நாடாளுமன்ற தொகுதியில் அவரது மகன் விஜய பிரபாகரன் வெற்றிக்கோட்டிற்கு அருகில் வந்து தான் தோல்வியை தழுவினார். பல தொகுதிகளில் கணிசமான செல்வாக்கு உள்ளது. அதிக சீட்டை பிரேமலதா கேட்டு வருகிறாராம். அனேகமாக அவர் திமுக உடன் செல்லவே வாய்ப்பு உள்ளதாக சொல்லப்படுகிறது. எனினும் அதிமுகவும் தங்கள் பக்கம் வருவார் என்று நம்புகிறது. இதனால் திமுகவும் கூட்டணியை இறுதிய செய்வதை தாமதம் செய்து வருகிறது.
தொகுதி பங்கீடு பேச்சு எப்போது?
கூட்டணியை இறுதி செய்த பிறகே, தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையை திமுக, அதிமுக நடத்த போகின்றன. தி.மு.க.வில் காங்கிரஸ் கட்சியுடனான தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை தள்ளி போய் கொண்டேஇருக்கிறது. காங்கிரஸ் கட்சிக்கு குறைவான தொகுதிகளே தர வேண்டும் என்று திமுகவினர் போர்க்கொடி உயர்த்தி வருகிறார். மறுபுறம் அதிமுக கூட்டணியை பொறுத்தவரை இந்த முறை நிறைய தொகுதிகளை அதிமுகவிடம் வாங்க வேண்டும் என்று பாஜகவினர் போர்க்கொடி உயர்த்தி வருகிறார்கள். இதனால் இன்னமும் அ.தி.மு.க.விலும் அதிகாரப்பூர்வமாக தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை தொடங்கப்படவில்லை. அனேகமாக அடுத்த வாரம் கூட்டணிகள் முடிவாகிவிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
-
திமுகவில் உதயநிதிக்கு செயல் தலைவர் பதவி? மெல்ல நகரும் திட்டம்.. ஸ்டாலின் மேஜையில் ரிப்போர்ட் -
பொய் சொல்றாங்க..ஸ்டாலின் கூறியதற்கும், திமுக செய்வதற்கும் சம்பந்தமில்லை! வெளுத்துவிட்ட மா.கம்யூ -
சிலுப்பிகிட்டு போகும் சிறுத்தை குட்டிகள்..க்ரீன் சிக்னல் காட்டிய அறிவாலயம்! குறுக்கே நிற்கும் திருமா -
கூட்டணி கட்சிகளுக்குள் வெடித்த கலவரம்: திமுக - விசிக இடையே பயங்கர கல்வீச்சு! தடியடி நடத்திய போலீசார் -
"வாயை மூடி பேசவும்" மாவட்டச் செயலாளர்கள் கண்ட்ரோலில் திமுக குழு.. விரக்தியில் அடிமட்ட தொண்டர்கள்! -
திமுகவின் TAPS தேவாமிர்தம்.. இப்போ OPS வேணுமா? கரைவேட்டி கட்டாத கட்சிக்காரர்கள்.. TNGEA விளாசல்! -
CM Saar.. மாறி மாறி மக்களை ஏமாற்றும் விஜய்.. SCAM செய்யும் தவெக அரசு.. உதயநிதி ஸ்டாலின் அதிரடி! -
சென்னையில் மின்வெட்டின் பின்னணி.. அமைச்சர் கருத்துக்கு திமுக தொழிற்சங்கம் திட்டவட்டமாக மறுப்பு -
தமிழகத்திற்கு நிரந்தர டிஜிபி.. யுபிஎஸ்சி பரிந்துரைக்கு ராமதாஸ் வரவேற்பு.. விஜய்க்கு வைத்த கோரிக்கை -
பயிர் கடன் ரத்துக்கு வரவேற்பு.. முதல்வர் விஜய்க்கு முக்கிய கோரிக்கை வைத்த ராமதாஸ் -
இனிமேலாவது வீரவசனம் பேசாமல் மாற்றத்தைக் கொடுங்கள் CM விஜய் சார்! அன்பில் மகேஷ் பதிவு -
டெல்லியிலும் கொங்கு சமையல் மணக்கப்போகுது.. முதல்வர் விஜய்க்கு சமைக்கும் மாதம்பட்டி ரங்கராஜ்!












Click it and Unblock the Notifications