வெற்றியின் விழுப்புண்கள்! சிஎஸ்கே கேப்டன் தோனி.. ஐபிஎல் வெற்றிக்கு பின் என்ன செய்ய போகிறார் தெரியுமா
சென்னை: 2023 ஐபிஎல் சீசன் முடிவடைந்த நிலையில் தோனியின் அடுத்த பிளான் என்ன? அவர் என்ன செய்ய போகிறார்? என்ற விவரங்கள் வெளியாகி உள்ளன.
2023 ஐபிஎல் தொடர் முடிந்ததும் தோனி ஓய்வை அறிவிப்பார். கடைசி மேட்சில் ஓய்வை அறிவிப்பார். அல்லது மேட்ச் முடிந்ததும் ஓய்வு குறித்து போஸ்ட் போடுவார் என்றெல்லாம் கூறப்பட்டது. ஆனால் அப்படி எதுவுமே நடக்கவில்லை.

நேற்று போட்டிக்கு பின் பேட்டி அளித்த தோனி, ஓய்வு பற்றி பேசாமல் மழுப்பலாக பதில் அளித்தார். அதில், சூழ்நிலைபடி பார்த்தால் இதுதான் நான் ஓய்வு பெறுவதற்கு சரியான நேரம். ஆனால் நான் ரசிகர்களிடம் பெறக்கூடிய அன்பை பார்த்தால்.. அதை சொல்வதை விட நன்றி என்று சொல்வதே சரியாக இருக்கும் என்று நினைக்கிறேன்.
எல்லோருக்கும் நன்றி. அடுத்த 9 மாதம் கஷ்டப்பட்டு நான் மீண்டும் கம்பேக் கொடுக்க முடியுமா என்று யோசிக்கிறேன். 1 சீசனுக்காக மீண்டும் கஷ்டப்பட வேண்டுமா என்று நினைக்கிறேன். என் உடல் உள்ளிட்ட பல விஷயங்களை வைத்துதான் நான் அந்த முடிவை எடுக்க முடியும். 6-7 மாதங்கள் அதற்கு உள்ளன. சென்னை மக்கள் முன்னிலையில் மீண்டும் சென்னையில் ஆட வேண்டும் என்றுதான் இருக்கிறது. பார்க்கலாம், என்று தோனி கூறியுள்ளார்.
அடுத்து என்ன? : தோனி ஐபிஎல் தொடரில் இருந்து ஓய்வு பெற போவதாக பேச்சுக்கள் சுற்றி வரும் நிலையில்தான் தோனியின் அடுத்த பிளான் என்ன என்ற விவரங்கள் வெளியாகி உள்ளன.
அவருக்கு முட்டியில் காயம் உள்ளது. அதோடுதான் அவர் இந்த சீசனை ஆடினார். இனி அவர் காயத்தில் இருந்து வந்து மீண்டும் அடுத்த சீசன் ஆட வேண்டும்.
இதற்கு கடினமான பயிற்சிகளை செய்ய வேண்டும். அதோடு அவர் பிட்னஸ் குறித்து மிக வேண்டி இருக்கும். அவருக்கு முட்டியில் மட்டுமின்றி காலிலும் பல இடங்களில் காயம் ஏற்பட்டு உள்ளது. முதுகிலும் சில இடங்களில் காயம் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இந்த காயங்கள் அனைத்திற்கும் மொத்தமாக சிகிச்சை எடுக்க தோனி முடிவு செய்துள்ளார் என்று கூறப்படுகிறது. அவருக்கு காலில் ஏற்பட்டுள்ள காயத்திற்கு இந்த வாரம் ஆபரேஷன் செய்ய முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.
இந்த ஆபரேஷன் முடிந்த பின் உடலில் மற்ற பாகங்களில் சிகிச்சை நடக்கும். சில ஆபரேஷன்களை மேற்கொள்ள அவர் வெளிநாடு செல்வார் என்றும் கூறப்படுகிறது. இதை எல்லாம் வைத்தே அவர் தனது ஓய்வு குறித்து முடிவு எடுப்பார் என்று கூறப்படுகிறது.
ஆபரேஷனுக்கு பின் முழு உடல் தகுதி இருந்தால் அவர் ஆடுவார் இல்லையென்றால் அவர் ஓய்வு பெறுவார் என்று கூறப்படுகிறது.
சிஎஸ்கே பிளான் என்ன? : இன்னொரு பக்கம் சிஎஸ்கே நிர்வாகம் தோனியை இம்பாக்ட் வீரராக வைத்துக்கொண்டு வேறு ஒருவரை கேப்டனாக கொண்டு வர திட்டமிட்டுள்ளதாம். தோனி வெறுமனே அடுத்த சீசனில் கேப்டனுக்கு ஆலோசனை வழங்கவும், புதிய கேப்டனுக்கு பயிற்சி கொடுக்கவும் பயன்படுத்தப்படுவார். அவரின் உடல் நிலை காரணமாக அடுத்த சீசன் ஆடும் பட்சத்தில் அவருக்கு அடிக்கடி ஓய்வுகள் வழங்கப்படும், என்று கூறப்படுகிறது. இதனால்தான் தோனி இந்த சீசனில் ஓய்வு அறிவிக்கவில்லை என்று கூறப்படுகிறது.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது












Click it and Unblock the Notifications