அரசரை கேள்வி கேட்கும் தளபதியின் காலமடி! பாடலை கேட்டதும் புஸ்ஸி ஆனந்த் கண்ணீர்! விஜய் ரியாக்ஷன் என்ன?

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் நடிகர் விஜய் இன்று அவருடைய கட்சிக் கொடியை அறிமுகப்படுத்தினார். அத்துடன் கொடி பாடலும் ஒளிபரப்பப்பட்ட போது புஸ்ஸி ஆனந்த் கண்ணீர் விட்டு அழுதார். அப்போது பக்கத்தில் இருந்த விஜய் என்ன ரியாக்ஷன் கொடுத்தார் தெரியுமா?

நடிகர் விஜய், தமிழக வெற்றிக் கழகம் என்ற அரசியல் கட்சியை தொடங்கியுள்ளார். இந்த கட்சி கடந்த பிப்ரவரி மாதம் தொடங்கப்பட்டது. தனது கட்சி வரும் 2026 ஆம் ஆண்டு சட்டசபை தேர்தலில் போட்டியிடும் என விஜய் அறிவித்துள்ளார்.

Vijay TVK Tamilaga Vetri kalagam

இந்த நிலையில் கட்சியை எப்போது தொடங்குவார், என்ன பெயர் இருக்கும் என எதிர்பார்த்த நிலையில் கட்சியின் பெயர் தொடங்கப்பட்டுவிட்டது. ஆனால் கட்சியின் கொடி என்ன என தெரியாமல் இருந்தது. இந்த நிலையில் இன்றைய தினம் கட்சிக் கொடியையும் நடிகர் விஜய் அறிமுகப்படுத்தினார்.

இந்த விழாவுக்காக நடிகர் விஜய் தனது நீலாங்கரை வீட்டிலிருந்து பனையூரில் உள்ள கட்சி அலுவலகத்திற்கு வருகை தந்தார். அவரை புஸ்ஸி ஆனந்து வரவேற்றார். இந்த விழாவில் கட்சியின் பொருளாளர், கொள்கை பரப்புச் செயலாளர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

விஜய்யின் கொடி அறிமுக விழாவிற்கு அவருடைய தாய் ஷோபாவும், தந்தை சந்திரசேகரும் வருகை தந்தனர். இதையடுத்து உறுதிமொழி ஏற்கப்பட்டது. பின்னர் விஜய் கட்சிக் கொடியை அறிமுகப்படுத்தினார். அதில் சிவப்பு , மஞ்சள் நிறத்தில் கொடியிருந்தது. நடுவே வெற்றிக்கு அடையாளமான வாகை மலரும், இரு போர் யானைகளும் இருந்தன.

இந்த கொடியை பனையூர் கட்சி அலுவலகத்திலும் அவர் ஏற்றி வைத்தார். இதை தவெக நிர்வாகிகள் கைதட்டி வரவேற்றார். பிறகு கொடி பாடலும் அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த விழாவுக்கு 5000 பேர் வருவார்கள் என கூறி போலீஸ் பாதுகாப்பு கேட்கப்பட்டது. ஆனால் வெறும் 300 பேருக்கு மட்டுமே அனுமதி கொடுக்கப்பட்டது.

கொடி பாடலில் இடம்பெற்றுள்ள வரிகளை விவேக் எழுதியிருந்தார். இந்த பாடலை இசையமைத்தவர் தமன் என தெரிகிறது. இந்த பாடலில் இடம் பெற்றுள்ள வரிகள் என்னென்ன என்பதை பார்க்கலாம்:

வெற்றிக்கழக கொடியேறுது.. மக்கள் ஆசை நிஜமாகுது...
தமிழன் கொடி பறக்குது.. தலைவன் யுகம் பொறக்குது..
மூணெழுத்து மந்திரத்தை மீண்டும் காலம் ஒலிக்குது..
தலைவன் கொடி பறக்குது.. தமிழன் யுகம் பொறக்குது..
சிறுசும் பெருசும் ரசிக்குது... சிங்க பெண்கள் சிரிக்குது....
மக்களோட தொப்புள் கொடியில், மொளச்ச கொடியும் பறக்குது...
மனசில் மக்களை வைக்கும்.. தலைவன் வரும் நேரம் இது..

மக்களும் அவன மனசில் வச்சு ஆடிப்பாடி கூப்புடுது..
சிகரம் கெடச்ச பின்னும் இறங்கி வந்து சேவை செஞ்சு..
நீங்க கொடுத்த எல்லாத்துக்கும் நன்றி காட்டும் காலமிது..
தமிழா தமிழா நாம வாழப்போறோமே...
ஒரு கறை இல்லாத கையை புடிச்சி போக போறோமே...
தமிழன் கொடி தரும கொடி... வீர கொடி, விஜய கொடி...
ஆதிய குடிய காக்கும் கொடி..
ரத்த சிவப்பு நிறமெடுத்தோம்..
ரெட்டை யானை பலம் குடுத்தோம்.. நரம்பில் ஓடும்..
தமிழுணர்வை உருவிக் கொடியின் உருக்கொடுத்தோம்..

மஞ்சள் எடுத்து அலங்கரிச்சோம்..
பச்ச நீல, திலகம் வச்சோம்...
பரிதவிக்கும் மக்கள் பக்கம் சிங்கம் வர்றதை பறையடிச்சோம்..
தூரம் நின்னு பார்க்கும் தலைவன் காலமெல்லாம் மாறுது..
தோளில் வந்து கையை போடும் தலைவன் கொடி ஏறுது..
அரசரை கேள்வி கேட்கும் தளபதியின் காலமடி...
அன்னைக்கே சொன்னோமே இது ஆளப்போற தமிழன் கொடி..

இவ்வாறு இந்த பாடல் வரிகள் உள்ளன. இந்த வீடியோ பாடல் வெளியான போது அதில் உள்ள வரிகளை கேட்டு புஸ்ஸி ஆனந்தின் கண்களில் மாலை மாலையாக கண்ணீர் வந்து கொண்டிருந்தது. அப்போது அருகே உட்கார்ந்திருந்த விஜய் எந்த ரியாக்ஷனையும் கொடுக்காமல் பாடலை கவனித்துக் கொண்டிருந்தார். புஸ்ஸியே கண்களில் கண்ணீருடன் விஜய்யிடம் பேசிய போது கூட விஜய் எந்த சலனமும் இல்லாமல் வீடியோ பாடலை பார்த்துக் கொண்டிருந்தார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+