சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

சசிகலா இணைப்பு.. அந்த 3 மணி நேரம்.. அதிமுகவுடன் அமித் ஷா பேசியது என்ன? பின்னணியை உடைத்த முருகன்!

Google Oneindia Tamil News

சென்னை: அதிமுக தலைவர்களுடன் பாஜக மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா நடத்திய மீட்டிங்கில் என்ன பேசினார்?, அவர் வைத்த கோரிக்கைகள் என்ன?, இந்த மீட்டிங் 3 மணி நேரம் நடந்தது ஏன்? என்ற தகவல்கள் வெளியாகி உள்ளது.

தமிழக சட்டசபை தேர்தலில் அதிமுக கூட்டணியில் பாஜக எத்தனை இடங்கள் போட்டியிடும் என்பது இன்னும் புரியாத புதிராக இருக்கிறது. 40 இடங்கள் வரை கேட்டு பாஜக பிடிவாதம் பிடிப்பதால் அதிமுகவின் கூட்டணி பேச்சுவார்த்தையில் தொய்வு ஏற்பட்டுள்ளது.

முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கூட்டணி பேரங்களில் மிகவும் கறாராக, சரியான திட்டமிடலுடன் செயல்பட்டு வருகிறார். இவரின் முறையான வியூகம் காரணமாக பாஜக அதிக இடங்களை பெற முடியாமல் கொஞ்சம் திணறிப்போய் உள்ளது.

சிக்கல்

சிக்கல்

அதே சமயம் இந்த கூட்டணி பேச்சுவார்த்தை தொய்விற்கு பாஜகவின் அதிக தொகுதி கோரிக்கை மட்டும் காரணம் இல்லை. இதற்கு வேறு காரணமும் இருக்கிறது என்றும் தகவல்கள் வந்தது. அதிமுக கூட்டணியில் அமமுகவை இணைக்க வேண்டும் என்று பாஜக வைத்த கோரிக்கைதான் இந்த இழுபறிக்கு காரணம். ஓபிஎஸ் - இபிஎஸ் இதனால் கோபம் அடைந்த காரணத்தால் பேச்சுவார்த்தையில் சுணக்கம் ஏற்பட்டுள்ளது என்று செய்திகள் வந்தன.

பாஜக பிளான்

பாஜக பிளான்

அதாவது அதிமுக கூட்டணியில் பாஜக அதிக இடங்களை கேட்டதாகவும், அதில் சில இடங்களை அமமுகவிற்கு வழங்க பாஜக திட்டமிட்டதாகவும் செய்திகள் வந்தன. கடந்த முறை பாஜகவை சேர்ந்த மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தமிழகம் வந்த போது இதைத்தான் அதிமுகவுடன் பேசினார், அவர் அதிமுகவுடன் இது பற்றித்தான் ஆலோசனை நடத்தினார் என்றும் செய்திகள் வெளியாகின.

மூன்று மணிநேரம்

மூன்று மணிநேரம்

இந்த நிலையில் அந்த அமித் ஷா - ஓபிஎஸ் - இபிஎஸ் இடையே நடந்த மீட்டிங்கில் என்ன பேசப்பட்டது என்று தமிழக பாஜக தலைவர் எல். முருகன் விளக்கம் அளித்துள்ளார். அதில், உள்துறை அமைச்சர் அமித் ஷாவிற்கும் அதிமுக தலைவர்களுக்கும் இடையே மூன்று மணி நேரம் மீட்டிங் நடந்தது. இதில் கூட்டணி குறித்து பேசப்பட்டது. போட்டியிடும் தொகுதிகள் குறித்து பேசப்பட்டது.

சசிகலா

சசிகலா

இதில் சசிகலா குறித்தோ, அமமுக குறித்தோ பேசவில்லை. அமமுக இணைப்பு, சசிகலா இணைப்பு குறித்து நாங்கள் பேச முடியாது. இதை பற்றி அதிமுகதான் முடிவு எடுக்கும். இது அதிமுகவின் உட்கட்சி விவகாரம். அதனால் அமித் ஷா இதில் எதுவும் கருத்து கூறவில்லை. அவர் கூட்டணி குறித்து மட்டுமே பேசினார், என்று எல். முருகன் விளக்கம் அளித்து இருக்கிறார்.

விளக்கம்

விளக்கம்

சசிகலா இணைப்பு தொடர்பாக அதிமுகவை பாஜக நெறுக்கியதாக நிறைய தகவல்கள் வந்த நிலையில் முருகன் அதை முற்றிலுமாக மறுத்துள்ளார். அமமுக இணைப்பு பற்றி எதுவுமே சொல்லவில்லை என்கிறார். இதனால் அதிமுக - அமமுக இணைப்பு தேர்தலுக்கு முன் சாத்தியமே இல்லை என்று அரசியல் வல்லுநர்கள் கருதுகிறார்கள்.

English summary
What did Amit Shah talk about with AIADMK leaders? : TN BJP chief L Murugan explains about the 3 hours meeting.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X