Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

இதை மட்டும் பண்ணி கொடுங்க! எடப்பாடி சொன்ன தகவல்.. அதெல்லாம் நாங்க பார்த்துப்போம்! அமித் ஷா ஒரே போடு?

Subscribe to Oneindia Tamil

சென்னை: அமித் ஷாவை சந்தித்த எடப்பாடி பழனிசாமி, திமுக மீது நடவடிக்கை எடுக்க வேண்டும், வேகமாக திமுகவிற்கு அழுத்தம் கொடுக்க வேண்டும் என்று கூறி இருக்கிறார் என்று மூத்த பத்திரிகையாளர் குபேந்திரன் தெரிவித்துள்ளார்.

கடந்த 3 நாட்களுக்கு முன்பு டெல்லியில் அண்ணாமலை - அமித் ஷா - எடப்பாடி பழனிசாமி இடையில் நடந்த மீட்டிங் அரசியல் வட்டாரத்தில் புயலை கிளப்பி உள்ளது. தமிழ்நாடு அரசியலில் மீண்டும் பாஜக - அதிமுக கூட்டணி அமைவதற்கான சூழ்நிலையை இந்த மோதல் ஏற்படுத்தி உள்ளது.

What did Amit Shah tell to Edappadi Palanisamy in the explosive Delhi meeting against DMK?

அந்த சந்திப்பில் சுமார் 50 நிமிடங்கள் இவர்கள் நீண்ட ஆலோசனை மேற்கொண்டு இருக்கின்றனர். இந்த மீட்டிங்கிற்கு பின் மாநில பாஜக தலைவர் அண்ணாமலையுடன் எங்களுக்கு எந்தவித தகராறும் இல்லை, என்று எடப்பாடி பழனிசாமி புதிய நிலைப்பாட்டை எடுத்துள்ளார்.

இவர்கள் மூவரும் நடந்திய டெல்லி மீட்டிங்கில் என்ன நடந்தது என்று மூத்த பத்திரிகையாளர் குபேந்திரன் ஒன்இந்தியா அரசியலுக்கு பேட்டி அளித்துள்ளார்.

ரவீந்திரநாத்: அமித் ஷாவை எடப்பாடி சந்தித்த போது ஒருங்கிணைந்த அதிமுக வேண்டும் என்று அமித் ஷா கேட்டு இருக்கிறார். ஓபிஎஸ்ஸை கட்சியில் சேர்த்துக்கொள்ளுங்கள் என்று கூறி உள்ளார்.

ஆனால் எடப்பாடி ஏற்றுக்கொள்ளவில்லை. அதற்கு ஓபிஎஸ் இல்லை என்றால் உங்களுக்கு வாக்கு வங்கி குறையும். அவர்கள் இல்லை என்றால் உங்களுக்கு வாக்கு வங்கி மேலும் சிதறும் என்று எடப்பாடியிடம் அமித் ஷா கூறி உள்ளார்.

இதனால் ஓ பன்னீர்செல்வத்திற்கு தான் சிக்கல். ஓ பி ரவீந்திரநாதன் எங்கே செல்வார் என்று பலரும் யோசிக்கிறார்கள். அதிமுகவில் இடம் கிடைக்கவில்லை என்றால் அவர் பாஜக சார்பாக நிற்பார். பாஜக சின்னத்தில் அவர் தேனியில் போட்டியிடுவார்.

ஆனால் இதற்கு எடப்பாடி பழனிசாமி கண்டிப்பாக பிரச்சாரம் செய்ய மாட்டார். இதனால் ரவீந்திரநாத் வெற்றி எண்ணிக்கை பெரிய அளவில் சரிந்துவிட்டது.

What did Amit Shah tell to Edappadi Palanisamy in the explosive Delhi meeting against DMK?

அண்ணாமலை: அண்ணாமலைக்கு பாஜகவின் முழு சப்போர்ட் உள்ளது. அவரை பற்றி புகார் வாசிக்க எடப்பாடி சென்ற போதும் கூட அங்கே அண்ணாமலையை அழைத்து வந்து அமர வைத்து உள்ளனர்.

அதிமுகவுடன் கூட்டணி வைத்தால் ராஜினாமா செய்துவிடுவேன் என்றெல்லாம் அண்ணாமலை கூட பேசிக்கொண்டு இருந்தார். இப்போது அண்ணாமலை - எடப்பாடி இடையில் இருக்கும் மோதலில் சின்னதாக பஞ்சர் ஒட்டி இருக்கிறார்கள். ஆனால் இது அப்படியே இருக்குமா என்பது சந்தேகம்தான்.

அண்ணாமலைக்கு டெல்லி சப்போர்ட் இருக்கிறது.. ஆனால் அவரை டெல்லி அடக்கி வைத்து உள்ளது. அவரை அமைதியாக இருக்கும்படி கூறி உள்ளனர்.

திமுகவை அண்ணாமலை கடுமையாக தாக்குகிறார். இதனால் அண்ணாமலை - அதிமுக இடையிலான உறவு கொஞ்சம் வலிமை அடையும்.

ஆனால் தொண்டர்கள் இதை எல்லாம் ஏற்றுக்கொள்வார்களா? பாஜகவிற்கு என்று அதிமுகவினர் தேர்தல் பணிகளை செய்வார்களா என்பது சந்தேகம்தான்.

What did Amit Shah tell to Edappadi Palanisamy in the explosive Delhi meeting against DMK?

திமுக மீது நடவடிக்கை: அமித் ஷாவை சந்தித்த எடப்பாடி பழனிசாமி, திமுக மீது நடவடிக்கை எடுக்க வேண்டும், வேகமாக திமுகவிற்கு அழுத்தம் கொடுக்க வேண்டும் என்று கூறி இருக்கிறார். இதற்கு முன்பே கவர்னரிடம் இதேபோல் அதிமுக சார்பாக புகார் கொடுக்கப்பட்டு உள்ளது.

அதற்கு நீங்கள் கொடுக்கும் புகாரை வைத்து எல்லாம் நடவடிக்கை எடுக்க முடியாது. மத்திய அரசு அதிகாரிகளிடம் உள்ள தகவலை வைத்து நடவடிக்கை எடுப்போம். எங்களிடம் இருக்கும் ஆதாரங்களை வைத்து நடவடிக்கைகளை எடுப்போம் அதை பற்றி நீங்கள் கவலைப்பட வேண்டாம் என்று அமித் ஷா கூறியுள்ளார், என்று மூத்த பத்திரிகையாளர் குபேந்திரன் தெரிவித்துள்ளார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+