Annamalai Letter: தமிழக பாஜகவில் ஒதுக்கப்பட்டேன்! 5 பக்க கடிதத்தில் குமுறிய அண்ணாமலை
டெல்லி: டெல்லியில் பாஜக தேசிய தலைவர் நிதின் நபினை சந்தித்து அண்ணாமலை கொடுத்த 5 பக்கங்கள் கொண்ட விலகல் கடிதத்தில் அவர் என்னென்ன குறிப்பிட்டுள்ளார் என்பதை பார்க்கலாம்.
தமிழக பாஜகவின் முன்னாள் தலைவர் அண்ணாமலை, டெல்லியில் கட்சியின் தேசிய தலைவர் நிதின் நபினை நேரில் சந்தித்து தனது விலகல் கடிதத்தை சமர்ப்பித்துள்ளது அரசியல் வட்டாரத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. அதில் தமிழக பாஜக குறித்து அந்த கடிதத்தில் அவர் குற்றச்சாட்டுகளையும் முன் வைத்துள்ளார் என்பது பாஜகவினருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அடிமட்ட அளவில் கட்சியை வளர்த்த தனக்கு, தற்போதைய தலைமை முக்கியத்துவம் அளிக்காததே அண்ணாமலையின் இந்த அதிரடி முடிவுக்குக் காரணம் எனத் தெரிகிறது.
தமிழகத்தில் பாஜகவை பட்டித்தொட்டியெங்கும் கொண்டு சேர்த்ததில் அண்ணாமலைக்கு முக்கியப் பங்குண்டு. அவரது 'என் மண் என் மக்கள்' நடைபயணம், பாஜகவை வட இந்தியக் கட்சி என்ற பிம்பத்திலிருந்து மாற்றி, தமிழகத்திலும் அதற்கென ஒரு பெரிய வாக்கு வங்கியை உருவாக்கிக் காட்டியது.
2021 தேர்தல் வெற்றி: கடந்த 2021 சட்டசபை தேர்தலின் போது அண்ணாமலையின் தீவிரப் பிரச்சாரத்தால் 4 பாஜக எம்.எல்.ஏக்கள் சட்டசபைக்குள் நுழைந்தனர்.
அண்ணாமலையின் பதவிக்காலம் முடிந்த சூழலில், 2026 சட்டசபை தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி அமைக்க டெல்லி தலைமை விரும்பியது. இதற்கு அண்ணாமலை முட்டுக்கட்டையாக இருந்ததால், அவரை விடுவித்துவிட்டு நயினார் நாகேந்திரனை தமிழக பாஜக தலைவராக்கியது டெல்லி மேலிடம்.
தேர்தல் சறுக்கல்: ஆனால், நயினார் நாகேந்திரனின் தலைமையில் சந்தித்த 2026 தேர்தலில், பாஜக வெறும் ஒரே ஒரு தொகுதியில் மட்டுமே வெற்றி பெற்று கடுமையான வீழ்ச்சியைச் சந்தித்தது.
நிபுணர்களின் கருத்து: தமிழகத்தில் மீண்டும் தாமரையை மலர வைக்க வேண்டுமானால், அண்ணாமலையைத் தவிர வேறு சிறந்த ஆப்ஷன் பாஜகவுக்கு இல்லை என்று அரசியல் பார்வையாளர்கள் தற்போதும் சுட்டிக் காட்டி வருகின்றனர்.
நயினாருக்குப் பதவி வழங்கப்பட்ட போது, அண்ணாமலை தேசிய அரசியலுக்குக் கொண்டு செல்லப்படுவார் என மத்திய அமைச்சர் அமித்ஷா உறுதியளித்திருந்தார். ஆனால், நடைமுறையில் அவர் கடுமையான புறக்கணிப்புகளைச் சந்தித்தார்.
அவருக்கு மத்திய அளவில் எந்தவொரு பொறுப்பும், தேர்தலில் போட்டியிட வாய்ப்பும் வழங்கப்படவில்லை. குறைந்தபட்சம் அவரது ஆதரவாளர்களுக்குக் கூட தேர்தலில் போட்டியிட பாஜக தலைமை சீட் கொடுக்க மறுத்துவிட்டது.
இதனால் அண்ணாமலை தொடர்ந்து அதிருப்தியில் இருந்து வந்தார். இடையில் அவர் விவசாயம் செய்யப்போவதாகக் கூறினாலும், தற்போதோ அவரது ஆதரவாளர்கள் "தமிழகத்தைத் தலைமை ஏற்க வா" என ஆங்காங்கே போஸ்டர்களை ஒட்டி புதிய இயக்கத்திற்கான அடித்தளத்தை அமைத்தனர்.
டெல்லி சென்ற அண்ணாமலை தேசிய தலைவர் நிதின் நபினைச் சந்தித்து பாஜகவில் இருந்து அதிகாரப்பூர்வமாக விலகுவதாக அறிவித்துத் தனது கடிதத்தை வழங்கினார். அத்துடன், டெல்லி தலைமை தன் மீது காட்டிய புறக்கணிப்புகள் மற்றும் தமிழக பாஜகவின் தற்போதைய செயல்பாடுகள் குறித்த தனது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளையும், மனக்குறைகளையும் அந்தக் கடிதத்தின் மூலம் அவர் நிதினிடம் வெளிப்படுத்தியுள்ளார்.
சுமார் 5 பக்கங்கள் கொண்ட அந்த கடிதத்தில் தமிழக பாஜகவில் தான் திட்டமிட்டு ஓரங்கப்பட்டதாக குறிப்பிட்டுள்ளார். மேலும் உட்கட்சி மோதல்களில் ஈடுபடுவோர் யார் யார் என்பதையும் அவர் விளக்கியுள்ளார். அத்துடன் சட்டசபை தேர்தலில் ஏற்பட்ட படுதோல்விக்கான காரணங்களையும் அவர் பட்டியலிட்டுள்ளாராம். மேலும் அதிமுகவுடன் கூட்டணி அமைத்தது குறித்தும் அவர் அந்த கடிதத்தில் விளக்கிக் கூறியுள்ளாராம்.
யார் இந்த அண்ணாமலை
முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி அண்ணாமலை, காவல்துறையிலிருந்து விலகி அரசியலில் இணைந்தார். ஆகஸ்ட் 2020-ல் பாஜகவில் சேர்ந்த அவர், ஆகஸ்ட் 2020 முதல் ஜூலை 2021 வரை தமிழக பாஜகவின் மாநிலத் துணைத் தலைவராகப் பதவி வகித்தார். பின்னர், ஜூலை 2021 முதல் ஏப்ரல் 2025 வரை மாநிலத் தலைவராகப் பொறுப்பேற்றார்.
அவரது தலைமையில் 2024 மக்களவைத் தேர்தலில் பாஜக தனித்துப் போட்டியிட்டு 11 சதவீத வாக்குகளைப் பெற்றது. 2026 சட்டமன்றத் தேர்தலுக்கு அதிமுகவுடன் கூட்டணி சேரும் நோக்கில் அண்ணாமலை மாநிலத் தலைவர் பதவியை ராஜினாமா செய்தார். அவருக்குப் பிறகு நயினார் நாகேந்திரன் புதிய மாநிலத் தலைவரானார்.
அண்ணாமலை மாற்றப்பட்ட பிறகு, அதிமுகவுடன் வலுவான கூட்டணி அமைந்தபோதிலும், பாஜகவால் 3 சதவீத வாக்குகளையே பெற முடிந்தது. இதன் காரணமாக பாஜகவின் வாக்குவங்கி முன்பு இருந்ததைவிடக் கணிசமாகச் சுருங்கியது.
-
அமித்ஷா தரும் அந்த 'பவர்ஃபுல்' புதிய ஆஃபர்.. அண்ணாமலை பச்சை கொடி காட்டுவாரா? இன்று என்ன முடிவு? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
அண்ணாமலை மாதிரி இனி ஒருத்தர் வர மாட்டார்.. பாஜகவிலிருந்து விலகியதால்.. கலங்கிய ஆர்எஸ்எஸ்! -
அப்போ ரஜினிக்கு பதில் அண்ணாமலை.. இனி விஜய், உதயநிதிக்கு மாற்றாக மாற முடியுமா? -
பழைய பன்னீர்செல்வமா வாங்க.. அண்ணாமலையை விடாத அமித் ஷா! பாஜக அள்ளிக் கொடுக்கும் ரெண்டு லட்டு! என்ன? -
விஜய்க்கு நேரடி குடைச்சல் தரப்போகும் அண்ணாமலை.. பாஜகவில் இருந்து விலகிய கையோடு போட்ட பிளான்! பின்னணி -
அண்ணாமலைக்கு, விஜய் கொடுத்த நம்பிக்கை! பாஜகவிற்கு ‘குட்பை' கூறி புது கட்சி தொடங்குவது ஏன்? பின்னணி -
ஓரங்கட்டப்பட்ட அண்ணாமலை.. நீண்ட நாள் ரகசிய ஆயுதத்தை கையில் எடுக்க முடிவு! அதிரடி திட்டம் -
அடிச்சு ஆடுங்க ஜி.. இனி உங்க காலம்! சாமியாரைப் பார்த்து ஐடியா கேட்ட அண்ணாமலை.! இது தான் காரணமா? -
கொங்கு மண்டல கணக்கு.. எடப்பாடி மீது குறையும் நம்பிக்கை.. அண்ணாமலை புதிய ரூட் எடுக்கும் பின்னணி -
அண்ணாமலையை பஞ்சராக்கிய பாஜக டபுள் இன்ஜின்.. 5 வருஷம் ஆட்டத்தின் அன்டோல்டு கதை -
ரஜினியின் ஆசி கிடைக்குமா! சிஸ்டத்தை மாற்றும் ‘ஆன்மீக அரசியல்’ முழக்கத்தை கையில் எடுக்கும் அண்ணாமலை?












Click it and Unblock the Notifications