அந்த 35 நிமிடம்.. 27 பேர்.. அண்ணாமலை காட்டிய லிஸ்ட்.. "அதுமட்டும்" வேண்டாம்.. அமித் ஷா தந்த அட்வைஸ்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: சமீபத்தில் டெல்லி சென்ற பாஜக தலைவர் அண்ணாமலை பாஜகவினர் அமித் ஷாவை சந்தித்து என்ன பேசினார் என்பது தொடர்பான தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்த சந்திப்பு 35 நிமிடங்கள் நடந்ததாக பாஜக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

சமீபத்தில் பாஜக கூட்டத்தில் நடைபெற்ற சம்பவங்கள் தமிழ்நாடு அரசியலில் பெரிய விவாதத்தை ஏற்படுத்தி உள்ளது. அதில், பாஜகவை எப்படி வளர்க்க வேண்டும் என்று எனக்கு தெரியும். அதற்கான திட்டம் என்னிடம் உள்ளது. ஆனால் அதை நிறைவேற்ற எனக்கு சுதந்திரம் வேண்டும். எனக்கு உரிய சுதந்திரம் அளிக்கப்பட வேண்டும்.

அதனால்தான் நான் ஒன்னும் மேனேஜர் இல்லை தலைவர் என்று கூறினேன். தமிழ்நாட்டில் நாம் வளர வேண்டும் என்றால் கூட்டணி வைக்க கூடாது. அதிமுகவை நம்பி இருக்க கூடாது. அதிமுகவுடன் கூட்டணி வைக்க வேண்டும் என்று தேசிய தலைவர் சொன்னால் நான் பதவியை ராஜினாமா செய்து விடுவேன்.

சர்ச்சை

சர்ச்சை

இந்த விவகாரம் சர்ச்சையான நிலையில்தான் பாஜக தலைவர் அண்ணாமலை இரண்டு நாட்களுக்கு முன் டெல்லியில் அமித் ஷாவை சந்தித்தார். இந்த சந்திப்பில் அதிமுக - பாஜக மோதல், கூட்டணி உள்ளிட்ட விஷயங்கள் பற்றியே அண்ணாமலை பேசியதாக கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அதிமுகவுடன் கூட்டணி வைத்தால் தலைவர் பதவியை ராஜினாமா செய்வேன் என்று அதிரடி காட்டிய அண்ணாமலை திடீரென, கடந்த 23-ந்தேதி டெல்லிக்கு பறந்தார். மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை சந்தித்தார். அந்த சந்திப்பில், கூட்டணி வேண்டாம் என்பது என் முடிவல்ல.

பாஜகவின் உணர்வு

பாஜகவின் உணர்வு

தமிழக பாஜக தொண்டர்களின் உணர்வு. தொண்டர்கள் அதைதான் நினைக்கிறார்கள். தொண்டர்கள் எண்ணத்தைதான் நான் வெளியே சொன்னேன். அதைத்தான் கூட்டத்தில் வெளிப்படுத்தினேன்'' என்று ஆரம்பித்து அதற்கான பின்னணிகளையும் விவரித்திருக்கிறார். கூட்டணி இருந்தால் நாம் இரண்டாம் இடத்தில்தான் இருப்போம். முதல் இடத்திற்கு வரவே மாட்டோம். நாம் பெரிய கட்சி ஆக வேண்டும் என்றால் தனியாக போட்டியிட்டு வெல்ல வேண்டும், என்றுள்ளார்.

கூட்டணி வேண்டாம்

கூட்டணி வேண்டாம்

அப்போது, ''பாஜகவின் வலிமையை உணர்த்துவது போல பேசலாம். ஆனால், கூட்டணி கூடாது என வெளிப்படையாக பேசுவதை குறைத்துக் கொள்ள வேண்டும்''என்றெல்லாம் அட்வைஸ் செய்துள்ளார் அமித் ஷா. அதாவது இப்போதைக்கு முடிவு எடுப்பது போல எதையும் பேச வேண்டாம். கூட்டணி பற்றி பேசாமல் பாஜகவின் பலத்தை பற்றி பேசுங்கள். ஆளும் தரப்பிற்கு எதிராக போராட்டங்களை மேற்கொள்ளுங்கள். தொடர் போராட்டங்களை முன்னெடுங்கள் என்று அறிவுரை வழங்கி உள்ளாராம். இந்த விவகாரம் கிட்டத்தட்ட 35 நிமிடங்கள் ஓடியிருக்கிறது.

என்ன சொன்னார்?

என்ன சொன்னார்?

இதனை அடுத்து, திமுக ஆட்சியில் கடந்த 2 ஆண்டுகளில் அமைச்சர்கள், ஸ்டாலின் குடும்பத்தின் அதிகார மையங்கள், அந்த அதிகார மையத்துக்கு நெருக்கமானவர்கள் என 27 நபர்களைப் பற்றிய ஊழல் புகார்கள், உள்நாடு-வெளிநாடு முதலீட்டு விவகாரங்கள் என பல விசயங்களை தயாரித்து எடுத்துச் சென்ற கோப்புகளை அமித் ஷாவிடம் தந்திருக்கிறார். அதனை மேலோட்டமாக பார்வையிட்ட அமித் ஷா எந்த கேள்வியையும் கேட்கவில்லை. ஆனால்,''இது குறித்து பொதுவெளியில் பேசலாமா?'' என அண்ணாமலை கேட்டிருக்கிறார். அதற்கு க்ரீன் சிக்னல் தந்துள்ளாராம் அமித் ஷா.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+