என்னது திமுகவா? டெல்லிக்கு போன ரிப்போர்ட்.. அமித் ஷா கையில் "அந்த" பைல்.. அண்ணாமலை பேசியது என்ன?

Subscribe to Oneindia Tamil

சென்னை: அதிமுகவுடன் கூட்டணி வேண்டாம் என்று பாஜக தலைவர் அண்ணாமலை கூறியதாக சொல்லப்படும் நிலையில்தான் அண்ணாமலை டெல்லிக்கு பயணம்மேற்கொண்டார். இந்த பயணத்தில் அவர் முக்கியமான சில விஷயங்களை பாஜக மூத்த தலைவர் உள்துறை அமைச்சர் அமித் ஷாவிடம் பேசி இருக்கிறாராம்.

அதிமுக பாஜக இடையிலான மோதல் உச்சகட்டத்தை அடைந்து உள்ளது. இரண்டு தரப்பும் மாறி மாறி மோதிக்கொண்டு வருகின்றன.இந்த மோதலின் உச்ச கட்டமாக அதிமுகவுடன் கூட்டணி வைத்தால் பாஜக தலைவர் பதவியில் இருந்தே ராஜினாமா செய்வேன் என்று கூறி உள்ளாராம் அண்ணாமலை. சமீபத்தில் பாஜக கூட்டத்தில் நடைபெற்ற சம்பவங்கள் தமிழ்நாடு அரசியலில் பெரிய விவாதத்தை ஏற்படுத்தி உள்ளது.

அண்ணாமலை பேசியதாக கூறப்படும் இந்த விஷயங்கள் அதிமுக தலைவர்களையும் வெகுவாக அப்செட்டாக்கி உள்ளது.

அண்ணாமலை என்ன சொன்னார்?

அண்ணாமலை என்ன சொன்னார்?

அந்த பாஜக கூட்டத்தில் அதிமுக கூட்டணிக்கு எதிராக அண்ணாமலை பேசினார். அதில், பாஜகவை எப்படி வளர்க்க வேண்டும் என்று எனக்கு தெரியும். அதற்கான திட்டம் என்னிடம் உள்ளது. ஆனால் அதை நிறைவேற்ற எனக்கு சுதந்திரம் வேண்டும். எனக்கு உரிய சுதந்திரம் அளிக்கப்பட வேண்டும். அதனால்தான் நான் ஒன்னும் மேனேஜர் இல்லை தலைவர் என்று கூறினேன். தமிழ்நாட்டில் நாம் வளர வேண்டும் என்றால் கூட்டணி வைக்க கூடாது. அதிமுகவை நம்பி இருக்க கூடாது. அதிமுகவுடன் கூட்டணி வைக்க வேண்டும் என்று தேசிய தலைவர் சொன்னால் நான் பதவியை ராஜினாமா செய்து விடுவேன்.

 குனிய முடியாது

குனிய முடியாது

கட்சியை எப்படி வளர்க்க வேண்டும் என்று எனக்கு தெரியும். அதை செய்ய சுதந்திரம் வேண்டும் என்று பேசி இருக்கிறாராம். திராவிட கட்சிகளுடன் இணைந்து எந்த தேர்தலையும் சந்திக்க பாஜக விரும்பவில்லை. கூட்டணிக்காக இடுப்பில் துண்டை கட்டிக்கொண்டு யாருக்கும் சலாம் போடமாட்டேன். கட்சியின் மாநிலத் தலைவர் என்ற முறையில் கூட்டணி தொடர்பான முடிவை மே மாதம் அறிவிப்பேன். கூட்டணி பற்றிய முடிவை எடுப்பேன்.. மற்றவர்களிடம் நாம் கைகட்டி நிற்க வேண்டியது இல்லை, திராவிட கட்சிகளுடன் இணைந்து எந்த தேர்தலையும் சந்திக்க பாஜக விரும்பவில்லை. தேர்தலின் போது யாருக்கும் சால்வை போட்டும் குனிந்து செல்ல விரும்பவில்லை, என்று அண்ணாமலை கூறி இருக்கிறாராம்.

அண்ணாமலை பேச்சு

அண்ணாமலை பேச்சு

அண்ணாமலையின் இந்த பேச்சு தமிழ்நாடு அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியது. பாஜக அதிமுகவினர் இடையே மோதலை ஏற்படுத்தியது. ஏற்கனவே நிர்மல் குமார் பாஜகவில் இருந்து அதிமுகவில் இணைந்த காரணத்தால் இரண்டு தரப்பிற்கும் கடும் மோதல் ஏற்பட்டது. இரண்டு தரப்பு தலைவர்களும் மாறி மாறி தாக்கிக்கொள்ள காரணமாக இருந்தது. தற்போது இந்த மோதல் உச்சத்தை அடைந்து உள்ளது. அண்ணாமலையின் பேச்சு காரணமாக அதிமுக நிர்வாகிகள் பலர் ஏக கடுப்பில் இருக்கிறார்கள். அண்ணாமலை இப்படி வெளிப்படையாக கட்சி கூட்டத்தில் பேசி இருக்க கூடாது. அவரின் பேச்சு அதிமுகவிற்கு எதிராக இருக்கிறது.

டெல்லி பயணம்

டெல்லி பயணம்

அவருக்கு கூட்டணி வேண்டாம் என்றால் எங்களுக்கும் கூட்டணி வேண்டாம். பாஜகவின் கூட்டணிக்காக நாங்கள் ஒன்றும் ஏங்கி நிற்கவில்லை என்று கூறி வருகின்றனர் அதிமுகவினர். அதாவது பாஜக போனால் போகட்டும் என்ற நிலைக்கு அதிமுக தலைகள் வந்துவிட்டதாக கூறப்படுகிறது. இதற்கு இடையில்தான் பாஜக தலைவர் அண்ணாமலை இரண்டு நாட்களுக்கு முன் டெல்லியில் அமித் ஷாவை சந்தித்தார்.

அண்ணாமலை டெல்லி

அண்ணாமலை டெல்லி

கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தல் பணிகள் பற்றி அவர் ஆலோசனை செய்ய செல்வதாக ஒரு பக்கம் கூறப்பட்டது. ஆனாலும் உட்கட்சி விவகாரம், அதிமுக - பாஜக மோதல், கூட்டணி உள்ளிட்ட விஷயங்கள் பற்றியே அண்ணாமலை பேசியதாக கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. முக்கியமாக கூட்டணி குறித்து பேசிய அண்ணாமலை.. தமிழ்நாட்டில் பாஜக எம்பிகளை பெறுவதை விட ஆட்சியை பிடிக்க வேண்டும் என்பதே முக்கியம். 2021 முக்கியம் இல்லை. 2026தான் முக்கியம். 2021ல் அதிமுகவுடன் கூட்டணி வைத்தால் நாம் எப்போதும் 3வது இடத்திலேயே இருப்போம். நாம் இரண்டாம் இடத்திற்கு வர வேண்டும் என்பதே முக்கியம், அதை செய்ய நாம் தனித்து களமிறங்க தயாராக இருக்க வேண்டும் என்று அண்ணாமலை கூறியதாக கூறப்படுகிறது.

அழைக்கப்பட்டார்

அழைக்கப்பட்டார்

அதோடு தமிழ்நாட்டில் 2024 தேர்தலில் திமுகவிற்கு சாதகமான சூழ்நிலை நிலவுவது பற்றியும் ரிப்போர்ட் சென்றுள்ளதாம். அமித் ஷாவிடம் இந்த ரிப்போர்ட் பாஜக நிர்வாகிகள் சார்பாக கொடுக்கப்பட்டு உள்ளதாம். இதை எல்லாம் மனதில் வைத்து டெல்லி ஆலோசனைகளை மேற்கொண்டு வருகிறதாம். கூட்டணி வைத்தாலும் தோல்வி அடைவோம் என்றால்.. கூட்டணி வைக்காமல் குறைந்தது துணிச்சலாக போட்டியிட்டு கட்சியையாவது வளர்க்கலாமே என்று திட்டத்தில் பாஜக இருப்பதாக கூறப்படுகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+