Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ஆர்.என். ரவி வெளியே போற நேரம் பார்த்து.. பாஜக எம்எல்ஏக்கள் சொன்னதை கவனிச்சீங்களா.. ஆஹா.. இது வேறயா?

Subscribe to Oneindia Tamil

சென்னை: ஆளுநர் ஆர். என். ரவி இன்று சட்டசபையில் இருந்து வெளிநடப்பு செய்த போது பாஜகவினர் எழுப்பிய கோஷங்கள் கவனம் பெற்றுள்ளது.

தமிழ்நாடு சட்டசபையில் இருந்து ஆளுநர் ஆர். என் ரவி இன்று வெளியேறிய சம்பவம் பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இன்று முதல் நாள் கூட்டத்தொடரில் ஆளுநர் ஆர். என் ரவி தமிழ்நாடு அரசு தயாரித்த உரையை வாசிக்காமல், சுயமாக சில வார்த்தைகளை சேர்த்து, தமிழ்நாடு அரசின் முக்கியமான சில பத்திகளை பேசாமல் தவிர்த்தது பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

ஆளுநர் ஆர். ரவி தமிழ்நாடு அரசு எழுதிக்கொடுத்த உரையை வாசிக்காமல் விட்டது கடும் விமர்சனங்களை சந்தித்து உள்ளது. தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலினும் இதற்கு கண்டனம் தெரிவித்து அவையில் இன்று தீர்மானம் நிறைவேற்றினார்.

தீர்மானம்

தீர்மானம்

அந்த தீர்மானத்தில், ஆளுநர் அவர்களுக்கு வரைவு உரையானது, தமிழ்நாடு அரசாங்கத்தால் ஏற்கெனவே அனுப்பப்பட்டு, அவரால் ஏற்பளிக்கப்பட்டு அதன்பின்னர் அச்சடிக்கப்பட்டு இன்றைக்கு அனைத்து உறுப்பினர்களுக்கும் கணினியிலும், தேவைப்படும் உறுப்பினர்களுக்கு அச்சிட்ட பிரதிகளாகவும் வழங்கப்பட்டுள்ளன. நம்முடைய திராவிட மாடல் கொள்கைகளுக்கு முற்றிலும் மாறாக செயல்பட்டு வரும் மாண்புமிகு ஆளுநர் அவர்களுடைய செயல்பாடுகள் முற்றிலும் ஏற்றுக்கொள்ள இயலாத நிலையில், அரசின் சார்பாக இருக்கின்ற காரணத்தால் நாங்கள் சட்டமன்றப் பேரவை விதிகளைப் பின்பற்றி, ஆளுநர் உரையைத் தொடங்குவதற்கு முன்னர் எங்களது எதிர்ப்பு எதனையும் நாங்கள் பதிவு செய்யவில்லை.
பேரவையிலே மிகவும் கண்ணியத்தோடு, அரசமைப்புச் சட்டத்தின்கீழ் உரையாற்ற வந்துள்ள மாண்புமிகு ஆளுநர் அவர்களுக்கு முழு மரியாதை அளிக்கும் வகையில் நாங்கள் நடந்து கொண்டோம்.

விதி மீறல்

விதி மீறல்

ஆனாலும், எங்களது கொள்கைகளுக்கு மாறாக மட்டுமல்ல - அரசின் கொள்கைகளுக்கே கூட அவர் மாறாக நடந்து கொண்டு, தமிழ்நாடு அரசு தயாரித்து, மாண்புமிகு ஆளுநர் அவர்களால் இசைவளிக்கப்பட்டு, அச்சிடப்பட்ட உரையை முறையாக, முழுமையாகப் படிக்காதது மிகவும் வருந்தத்தக்கது மட்டுமல்ல, சட்டமன்ற மரபுகளை மீறிய ஒன்றும் ஆகும். ஆகவே, சட்டமன்றப் பேரவை விதி 17-ஐத் தளர்த்தி, இன்றைக்கு அச்சிடப்பட்டு, மாண்புமிகு உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்டுள்ள ஆங்கில உரை மற்றும் மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களால் படிக்கப்பட்ட தமிழ் உரை ஆகியன மட்டும், அவைக்குறிப்பில் ஏற வேண்டும் எனும் தீர்மானத்தையும், அதேபோல, இங்கே அச்சிட்ட பகுதிகளுக்கு மாறாக மாண்புமிகு ஆளுநர் அவர்கள் இணைத்து, விடுத்து படித்த பகுதிகள் இடம்பெறாது என்னும் தீர்மானத்தையும் முன்மொழிகிறேன். இத்தீர்மானத்தை பேரவை ஒருமனதாக நிறைவேற்ற வேண்டுமென்று கேட்டுக் கொள்கிறேன், என்று முதல்வர் ஸ்டாலின் தீர்மானத்தை முன் மொழிந்தார்.

வெற்றி

வெற்றி

இந்த தீர்மானம் ஒரு மனதாக நிறைவேற்றப்பட்டது. இந்த தீர்மானம் நிறைவேற்றப்படும் போதே ஆளுநர் ஆர். என் ரவி அவையில் இருந்தே வெளியேறினார். முதல்வர் ஸ்டாலின் பேச தொடங்கியதும் ஆளுநர் ரவி அவையில் இருந்து வெளிநடப்பு செய்தார். இதை திமுக எம்எல்ஏக்கள், அமைச்சர்கள் அமைதியாக பார்த்துக்கொண்டு இருந்தனர். காங்கிரஸ் எம்எல்ஏக்கள் உட்பட பலர் தமிழ்நாடு வாழ்க என்று கோஷம் எழுப்பினர். ஆளுநர் ஆர்.என் ரவி வெளிநடப்பு செய்ததும் அவருக்கு ஆதரவாக.. பாஜகவினர் பாரத் மாதா கீ ஜே என்றனர். அதேபோல் ஜெய் ஹிந்த் என்றும் கோஷம் எழுப்பினர்.

வானதி

வானதி

இதையடுத்து சட்டசபைக்கு வெளியே பேசிய வானதி சீனிவாசன், அரசு சித்தாந்தத்தை புகழ் பாடக்கூடிய ஒருவராக ஆளுநர் இருக்க முடியாது. ஆளுநர் அப்படி இருக்க வேண்டும் என்று ஆளும் அரசு நினைக்க முடியாது. ஆளுநரை கூப்பிட்டுவச்சு அசிங்கப்படுத்துறீங்களா? நீங்கள் சொல்வதைத்தான் பேச வேண்டுமா? இல்லையென்றால் ஆளுநரை அவமானப்படுத்துவீர்களா? என்று குறிப்பிட்டு இருக்கிறார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+