மேயர் பிரியா முகத்தில் ஒரே குஷி.. அதுவும் காலங்காத்தாலயே.. "பச்சை கொடி" வேற.. சென்னை மாணவர்கள் ஹேப்பி
சென்னை: சென்னை மேயர் பிரியாவுக்கு, பள்ளி மாணவர்கள் உற்சாகத்துடன் கையசைத்து செல்லும் வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.. என்ன நடந்தது?
2023-24ம் நிதியாண்டிற்கான சென்னை மாநகராட்சியின் நிதிநிலை அறிக்கையின்போது, மேயர் உரையில், சென்னை மாநகராட்சியின் கீழ் இயங்கும் சென்னை பள்ளிகளில் 11ம் வகுப்பு பயிலும் மாணவ, மாணவிகள் கல்விச் சுற்றுலா அழைத்துச் செல்லப்படுவார்கள் என்று அறிவிக்கப்பட்டது.

15 கட்டங்கள்: அதன்படியே, 11ம் வகுப்பு படிக்கும் கிட்டத்தட்ட 5200 மாணவர்களை, பிர்லா கோளரங்கம், பெரியார் அறிவியல் மற்றும் தொழிற்நுட்ப மையம், அண்ணா நூற்றாண்டு நூலகம், அம்பத்தூர், மாதவரம், சோழிங்கநல்லூரில் உள்ள ஆவின் பால் தொழிற்சாலைகள், சென்னை, எண்ணூர் துறைமுகங்கள், தக்ஷினா சித்ரா அருங்காட்சியகம் போன்ற இடங்களை சுற்றிப்பார்க்க, ஜூலை மாதம் முதல் நவம்பர் மாதம் வரையிலான 5 மாதங்களில் 15 கட்டங்களாக அழைத்து செல்ல திட்டமிடப்பட்டது.
10 பஸ்கள்: இதில் முதற்கட்டமாக, இன்று 521 பள்ளி மாணவர்கள் கிளம்பினார்கள்.. டிஎச்சாலை மேல்நிலைப்பள்ளியை சார்ந்த 270 மாணவர்கள், பட்டேல் நகர் மேல்நிலைப்பள்ளியில் இருந்து 100 மாணவர்கள், கல்யாணபுரம் மேல்நிலைப்பள்ளியில் இருந்து 50 மாணவர்கள், அப்பாசாமி லேன் மேல்நிலைப்பள்ளியைச் சார்ந்த 101 மாணவர்கள் என 521 மாணவர்கள், மொத்தம் 10 பஸ்களில் கிளம்ப தயாரானார்கள்..
இவர்கள் அனைவருமே இன்று பிர்லா கோளரங்கம், பெரியார் அறிவியல் தொழிற்நுட்ப மையம், அண்ணா நூற்றாண்டு நூலகத்தினைப் பார்வையிட அழைத்து செல்லப்படுகிறார்கள்.. முன்னதாக மாணவர்கள் அனைவரும், ரிப்பன் மாளிகை வளாகத்திற்கு வந்து சேர்ந்தனர்.. அதேபோல, மேயர் பிரியாவும் அதிகாரிகளுடன் அங்கு வந்து சேர்ந்தார்.. பள்ளி மாணவர்களை அழைத்து சிறிது நேரம் பிரியா பேசிக் கொண்டிருந்தார்.. அவர்களுக்கு முக்கிய அறிவுரைகளையும் அப்போது கூறினார்.
உற்சாக டூர்: இதையடுத்து, அங்கிருந்த 10 பஸ்களிலும் மாணவர்கள் ஏறி உட்கார்ந்து கொண்டனர்.. மாணவர்களை ஏற்றி செல்லும் பேருந்துகளை கொடியசைத்து வழியனுப்பி வைத்தார் பிரியா. அப்போது, பத்திரமா போய்ட்டு வரணும் என்று பிள்ளைகளிடம் சொன்னார்.. மாணவர்களும், பஸ்ஸிலிருந்தபடியே, மேயர் பிரியாவுக்கு, உற்சாகமாக கையசைத்தார்கள்.. பிரியாவும் பதிலுக்கு கையசைத்து வழியனுப்பி வைத்தார்.

இதற்கு பிறகு, செய்தியாளர்களிடம் பேசிய மேயர் பிரியா, "பட்ஜெட்டில் அறிவித்ததுபோல், முதற்கட்டமாக இன்று மாணவர்கள் கல்வி சுற்றுலாவுக்கு சென்றிருக்கிறார்கள்.. சென்னை மாநகராட்சியில் புதிதாக 139 பள்ளிகள் இணைக்கப்பட்டுள்ளன. இதில், மிகவும் சேதம் அடைந்த 46 பள்ளிகள் கண்டறியப்பட்டு சிங்கார சென்னை திட்டத்தின் கீழ் சீரமைக்க 50 கோடி ஒதுக்கப்பட்டு உள்ளது..
மாமன்னன்: மாமன்னன் படம் பற்றி கேட்கிறீர்கள்.. திமுக கடைப்பிடிக்கும் சமூகநீதி கொள்கைதான் மாமன்னனாக எடுக்கப்பட்டுள்ளது. திமுக ஆட்சியில் உள்ளாட்சி அமைப்புகளின் சரிபாதி இடங்களில் பெண்கள்தான் பொறுப்புகளில் இருக்கிறார்கள்.. கட்சியில் இதுவரைக்கும் நான் எந்தவிதமான ஏற்றத்தாழ்வையும் எதிர்கொண்டதில்லை. திமுகவில் ஏற்றத்தாழ்வுகளே கிடையாது" என்றார்.












Click it and Unblock the Notifications