"குட்".. உடனே ரிப்போர்ட் வேண்டும்.. மீட்டிங்கில் பறந்த உத்தரவு.. எம்எல்ஏக்களுக்கு முதல்வர் டாஸ்க்!
சென்னை: தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின் நேற்று திமுக எம்எல்ஏக்களுடன் முக்கியமான ஆலோசனை கூட்டம் ஒன்றை நடத்தினார். இந்த ஆலோசனை கூட்டத்தில் திமுக எம்எல்ஏக்களுக்கு பெரிய டாஸ்க் ஒன்று கொடுக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு சட்டசபை கூட்டத்தொடர் தொடங்கி உள்ள நிலையில் நேற்று ஆளுநர் உரை நடைபெற்றது. இதையடுத்து இனி வரும் நாட்களில் கூட்டத்தொடரில் விவாதங்கள் அனல்பறக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த கூட்டத்தொடரிலேயே நீட்டிற்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றப்பட்டு சட்டமாக்கப்படும் திட்டங்களும் உள்ளன.
இந்த நிலையில்தான் நேற்று அண்ணா அறிவாலயத்தில் திமுக எம்எல்ஏக்கள் அமைச்சர்களுடன் முதல்வர் ஸ்டாலின் முக்கியமான ஆலோசனை கூட்டம் ஒன்றை நடத்தினார். திமுக எம்எல்ஏக்கள் எல்லோரும் கூட்டத்திற்கு அழைக்கப்பட்டுஇருந்தனர் .

பாராட்டு
இதில் பேசிய முதல்வர் ஸ்டாலின், அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் என்று எல்லோரின் செயல்பாட்டையும் பாராட்டி உள்ளார். முதல் 40 நாட்கள் நன்றாகவே செயல்பட்டுள்ளீர்கள்.. குட்.. கொரோனா காலத்தில் எல்லோரும் களத்தில் வேலை பார்த்ததற்கு நன்றி. தொடர்ந்து இப்படியே செயல்பட வேண்டும் என்று முதல்வர் ஸ்டாலின் எம்எல்ஏக்களுக்கு உத்தரவிட்டுள்ளார்.

சிலர்
அதே சமயம் சில எம்எல்ஏக்களின் பெயர்களை குறிப்பிடாமல், கொஞ்சம் துரிதமாக செயல்பட வேண்டும். பணிகளில் கொஞ்சம் மாற்றம் வேண்டும் என்று லேசாக கண்டிப்புடணும் பேசி இருக்கிறார். இந்த மீட்டிங்கில் பேசிய முதல்வர் ஸ்டாலின்.. நாம் இந்த தேர்தலில் வென்றுவிட்டோம். பெரும்பான்மை பெற்றுவிட்டோம். ஆனால் இது இமாலய வெற்றி என்று கூற முடியாது.

வெற்றி
அடுத்த தேர்தலில் இதைவிட அதிக இடங்களை பெற வேண்டும். நாம் வென்ற இடங்களில் மட்டுமின்றி, நாம் வெல்லாத இடங்களிலும் மக்களுக்காக உழைத்து நற்பெயர் பெற வேண்டும். நமக்கு வாக்களிக்கத்தவர்களுக்கும் நாம் பணிகளை செய்ய வேண்டும் என்று எம்எல்ஏக்களுக்கு அறிவுரை வழங்கி உள்ளார். அடுத்த தேர்தலில் இமாலய வெற்றி பெற வேண்டும்.

ரிப்போர்ட்
அதோடு சட்டமன்ற உறுப்பினர்கள் தங்கள் பணி குறித்து மாதம்தோறும் அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும். ஒரு மாதத்தில் செய்தது என்ன, அதற்கு மக்கள் அளித்த ரெஸ்பான்ஸ் என்ன, மக்கள் வைக்கும் கோரிக்கை என்ன, தொகுதியில் நிலவும் பிரச்சனை என்ன என்பதை எல்லாம் பட்டியலியிட்டு மாதம் ஒருமுறை கண்டிப்பாக ரிப்போர்ட் கொடுக்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளார்.

மாற்றம்
அதோடு ஜூன் மாதம் ரிப்போர்ட்டை உடனே அளிக்க வேண்டும் என்றும் முதல்வர் ஸ்டாலின் எம்எல்ஏக்களுக்கு உத்தரவிட்டுள்ளார். எம்எல்ஏக்கள் எல்லோரையும் கண்காணிக்கும் வகையில் முதல்வர் ஸ்டாலின் இந்த உத்தரவை போட்டுள்ளார். எல்லா எம்எல்ஏக்களும் 100% உழைக்க வேண்டும், முதல் 40 நாட்களில் தீவிரமாக செயல்பட்டது போல செயல்பட வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளார்.
-
விலகிய 113 ஒன்றிய செயலாளர்கள்.. தவெகவின் ஆபரேஷனால் மிரண்ட அறிவாலயம்! ஸ்டாலின் எடுத்த முக்கிய முடிவு -
ஒதுங்கும் துரைமுருகன்.. திமுகவின் புதிய பொதுச்செயலாளராகிறாரா ஆ.ராசா? உதயநிதி ஸ்டாலினும் ஆதரவாம்! -
நேற்று பெய்த மழையில் இன்று முளைத்த விஷக்காளான் நீங்க! விஜய் குறித்து திமுக ஐடி விங்க் விமர்சனம் -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
“திமுக கூட்டணியில்தான் தொடர்கிறோம்.. தவெக அரசுக்கு வெளியில் இருந்து ஆதரவு”.. CPI வீரபாண்டியன் உறுதி! -
“திமுக தயவில்தான் தவெக ஆட்சி நடக்கிறது.. நான்தான் வழியனுப்பி வைத்தேன்”.. ஸ்டாலின் ஓபன் டாக்! -
உதயநிதியின் தவறுக்கான தண்டனைதான்.. திமுகவின் தோல்வி! ராகுல் காந்தியை இழுக்காதீங்க - மாணிக்கம் தாகூர் -
“தனது தலையில் தானே மண் அள்ளிப் போட்டுக் கொண்டுள்ளார் ராகுல்..” முரசொலி சரமாரி விமர்சனம்! -
“துரோகி.. துரோகி”.. செல்வப்பெருந்தகை வந்தபோது திமுகவினர் கோஷம்.. திடீர் பரபரப்பு! -
"இது அதுல்ல?.. ஜனநாயகத்தை சிதைப்பதில் பாஜகவும் தவெகவும் ஒண்ணு” - திமுக சரமாரி அட்டாக்! -
காங். துரோகம்.. மனக்காயத்தில் தொண்டர்கள்! இந்திய கூட்டணி கூட்டத்தில் பங்கேற்க மாட்டோம்! - திமுக -
“ஒரு இயக்கம்.. இன்னொரு இயக்கத்தின் சின்னத்தில் போட்டியிடக்கூடாது” - துரை வைகோ!












Click it and Unblock the Notifications