Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

சென்னை வந்ததுமே உற்சாகமாக பேசிய முதல்வர் ஸ்டாலின்.. இன்னும் பல பயணங்கள் செய்ய பிளானாம்! எப்போ?

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழ்நாட்டை தொழில் துறையில் முன்னணி மாநிலமாக மாற்றும் முயற்சிக்கு ஸ்பெயின் பயணம் மிக மிகப் பயனுள்ளதாக உள்ளது. இதுபோன்ற அடுத்த பயணங்கள் திட்டமிடப்படும் என ஸ்பெயின் சுற்றுப் பயணம் முடிந்து திரும்பியுள்ள தமிழக முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

தமிழ்நாட்டுக்கு முதலீடுகளை ஈர்க்க தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அரசு முறை பயணமாக கடந்த ஜனவரி மாதம் 27ஆம் தேதி ஸ்பெயின் சென்றார். ஸ்பெயின் நாட்டில் உள்ள பல்வேறு தொழில் நிறுவனங்களின் நிர்வாகிகளை சந்தித்து முதலமைச்சர் ஆலோசனை நடத்தினார். ஸ்பெயினில் நடந்த முதலீட்டாளர்கள் மாநாட்டில் பங்கேற்ற முதலமைச்சர் தமிழ்நாட்டில் முதலீடு செய்ய அழைப்புகள் விடுத்தார்.

What did CM Stalin said in press meet after return from Spain

சரக்குகளை கையாளும் பூங்காக்களை அமைப்பதில் உலக அமைப்பில் முன்னணி நிறுவனமாக திகழக்கூடிய ஹபக் லாய்டு நிறுவனத்துடன் ரூ.2,500 கோடி முதலீடுக்கு முதலமைச்சர் முன்னிலையில் ஒப்பந்தமானது. சாலை கட்டமைப்பு மேம்பாட்டு நிறுவனம் அபர்ட்டி நிறுவன அதிகாரியுடன் முதலமைச்சர் ஆலோசனை நடத்தினார். தமிழ்நாடு மாநில நெடுஞ்சாலை கட்டமைப்பில் முதலீடு செய்ய அபர்ட்டி நிறுவனம் விருப்பம் தெரிவித்தது.

மேட்ரிட் நகரில் முதலீட்டாளர்கள் மாநாடு நடத்தி பல்வேறு நிறுவனங்களின் அதிகாரிகளை சந்தித்து முதலமைச்சர் உரையாற்றினார். ரோக்கா நிறுவனம் ரூ.400 கோடி முதலீடு செய்வதாக முதலமைச்சர் மு.க ஸ்டாலினிடம் உறுதியளித்தது. ஆக்சியானா, அம்போ வால்வ்ஸ் உள்ளிட்ட நிறுவன அதிகாரியிடம் முதலமைச்சர் ஸ்பெயினில் ஆலோசனை மேற்கொண்டார். இந்த நிறுவனங்களுடன் விரைவில் புரிந்துணர் ஒப்பந்தம் கையெழுத்தாக உள்ளது.

இந்நிலையில், ஸ்பெயின் சுற்றுப்பயணத்தை முடித்துக் கொண்டு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று சென்னை திரும்பினார். 8 நாட்கள் சுற்றுப் பயணத்தை முடித்துவிட்டு இன்று காலை 8 மணி அளவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னை விமான நிலையம் வருகை தந்தார். சென்னை திரும்பிய முதல்வர் ஸ்டாலினுக்கு அமைச்சர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். ஆளுயர மாலை அணிவித்து வரவேற்பு அளிக்கப்பட்டது.

அதைத் தொடர்ந்து, சென்னை விமான நிலையத்தில் முதல்வர் ஸ்டாலின் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய முதலமைச்சர் ஸ்டாலின், “ஸ்பெயில் தமிழ்நாட்டிற்கு பல்வேறு முதலீடுகளை ஈர்த்துவிட்டு திரும்பியுள்ளேன். மிகப்பெரிய சாதனைப் பயணமாக இது அமைந்துள்ளது. தமிழ்நாட்டில் தொழில் தொடங்குவதற்கான உகந்த சூழல் பற்றி எடுத்துரைத்தேன். ஸ்பெயின் நாட்டின் முன்னணி தொழில் நிறுவனத்தினரை தனித்தனியாக சந்தித்தேன். ஸ்பெயின் நிறுவனங்களை தமிழ்நாட்டில் முதலீடு செய்ய அழைப்பு விடுத்தேன்.

தமிழ்நாட்டில் தொழில் முதலீடுகளை மேற்கொள்ள ஆர்வம் தெரிவித்துள்ளனர். ரூ.3,440 கோடி முதலீடு செய்வதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்படுள்ளன. மேலும் பல நிறுவனங்களும் எதிர்காலத்தில் தமிழ்நாட்டில் முதலீடு செய்வார்கள். ரோக்கா, ஹபக் லார்ட் உள்ளிட்ட பல்வேறு நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளது. ஸ்பெயினில் வசிக்கும் தமிழர்களையும் நான் சந்தித்தேன்.

தமிழ்நாட்டின் தொழில் வளர்ச்சியைப் புகழ்ந்து நியூயார்க் டைம்ஸ் செய்தி வெளியிட்டது. உற்பத்தி துறையில் முன்னணி மாநிலமாக தமிழ்நாடு முன்னேறி வருகிறது. தமிழ்நாட்டை தொழில் துறையில் முன்னணி மாநிலமாக மாற்றும் முயற்சிக்கு ஸ்பெயின் பயணம் மிக மிகப் பயனுள்ளதாக உள்ளது. இதுபோன்ற அடுத்த பயணங்கள் திட்டமிடப்படும்.” எனத் தெரிவித்துள்ளார்.

எப்போது அடுத்த பயணம் துவங்கும் என செய்தியாளர் எழுப்பிய கேள்விக்கு, “நாடாளுமன்றத் தேர்தல் வரவிருப்பதால், தேர்தல் முடிந்தபிறகு முதலீடுகளை ஈர்ப்பதற்கான அடுத்தடுத்த வெளிநாட்டு பயணங்கள் திட்டமிடப்படும்” என முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+