என்ன பண்ணிட்டு இருக்கீங்க? டாப் அதிகாரிகளை எல்லாம் மொத்தமாக அழைத்த ஸ்டாலின்.. கூடவே வந்த உளவுத்துறை

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின் நேற்று உளவுத்துறை அதிகாரிகள், டாப் அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டார். இதில் அவர் கண்டிப்பான சில விஷயங்களை குறிப்பிட்டதாக தெரிகிறது.

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நேற்று தலைமைச் செயலகத்தில், சட்டம் ஒழுங்கு குறித்த ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில், தலைமைச் செயலாளர் சிவ் தாஸ் மீனா, உள்துறை முதன்மைச் செயலாளர் பெ. அமுதா, காவல்துறை தலைமை இயக்குநர் சங்கர் ஜிவால், கூடுதல் காவல்துறை இயக்குநர் (சட்டம் மற்றும் ஒழுங்கு) சௌ. டேவிட்சன் தேவாசிர்வாதம், இ.கா.ப., ஆவடி மாநகர காவல் ஆணையர் கி. சங்கர், இ.கா.ப., தாம்பரம் மாநகர காவல் ஆணையர் முனைவர் அ. அமல்ராஜ், இ.கா.ப, சென்னை மாநகர காவல் ஆணையர் ஆ. அருண், இ.கா.ப., மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

MK Stalin

மீட்டிங் சொன்னது என்ன?: இதில் அவர் கண்டிப்பான சில விஷயங்களை குறிப்பிட்டதாக தெரிகிறது.

அதன்படி சட்ட ஒழுங்கில் குறைபாடு இருப்பதாக புகார்கள் வருவது ஏன்? கடந்த வருடத்தை விட இந்த வருடம் கிரைம் அதிகரித்து உள்ளதா? கடந்த 10 வருட கிரைம் ரேட் என்ன? என்று விசாரித்து உள்ளார்.

அதோடு இல்லாமல்.. துறை ரீதியாக காவல் அதிகாரிகள் எடுத்த நடவடிக்கை என்ன? சென்னையில் மட்டும் அதிகாரிகள் எடுத்த நடவடிக்கைகள் என்னென்ன என்று அதிகாரிகளை விசாரணை செய்து உள்ளார். இந்த மீட்டிங்கில் ஸ்டாலின் கொஞ்சம் கோபமாக கேள்விகளை எழுப்பியதாக கூறப்படுகிறது.

அதிகாரிகள் மாற்றம்: இதன் அடிப்படையில்தான் நேற்று தமிழ்நாடு காவல்துறையில் 18 ஐ.பி.எஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டு உள்ளனர். சென்னை மாநகர சட்டம் ஒழுங்கு கூடுதல் ஆணையர் (வடக்கு) அஸ்ரா கர்க் மாற்றப்பட்டு, அப்பொறுப்புக்கு நரேந்திரன் நாயர் நியமனம் செய்யப்பட்டு உள்ளனர்.

சென்னை மாநகர சட்டம் ஒழுங்கு கூடுதல் ஆணையர் (தெற்கு) பிரேம் ஆனந்த் சின்ஹா மாற்றப்பட்டு, அப்பொறுப்புக்கு கண்ணன் நியமனம் செய்யப்பட்டு உள்ளனர். தாம்பரம் மாநகர காவல் ஆணையர் அமல்ராஜ் மாற்றப்பட்டு, அப்பொறுப்புக்கு அபின் தினேஷ் மோதக் நியமனம் செய்யப்பட்டு உள்ளனர்.

வடக்கு மண்டல ஐ.ஜி. நரேந்திரன் நாயர் மாற்றப்பட்டு அப்பொறுப்புக்கு அஸ்ரா கர்க் நியமனம் செய்யப்பட்டு உள்ளனர். தெற்கு மண்டல ஐ.ஜி. கண்ணன் மாற்றப்பட்டு, அப்பொறுப்புக்கு பிரேம் ஆனந்த் சின்ஹா நியமனம் செய்யப்பட்டு உள்ளனர்.

ஸ்டாலின் முடிவு: இந்த விவகாரத்தில் ஸ்டாலின் சுயமாக முடிவெடுத்துள்ளார் என்று கூறப்படுகிறது. அதாவது இவர்களை தேர்வு செய்ய ஸ்டாலின் யாரிடமும் ஆலோசனை செய்யவில்லை. அவராகவே தேர்வு செய்தவர்கள்தான் இவர்கள் எல்லோரும். இவர்களை கைப்பட டிக் அடித்து ஸ்டாலின் பணியிட மாற்றம் செய்துள்ளார் என்று கூறப்படுகிறது. இப்படி இதுவரை தமிழக அரசியலில் பொதுவாக நடக்காத விஷயம் இன்று அதிகாரிகள் மாற்றத்தில் நடந்து உள்ளதாக கூறப்படுகிறது

முன்பே மாற்றம்: சென்னை மாநகர காவல் ஆணையர் சந்தீப் ராய் ரத்தோர் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். அவருக்குப் பதிலாக சென்னை மாநகர புதிய காவல் ஆணையராக சட்டம் - ஒழுங்கு ஏடிஜிபியாக இருந்த அருண் ஐபிஎஸ் நியமிக்கப்படுகிறார் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.

அதேநேரம், சட்டம் ஒழுங்கு ஏடிஜிபியாக டேவிட்சன் தேவாசீர்வாதத்தை நியமித்து தமிழக அரசின் உள்துறை செயலாளர் அமுதா உத்தரவு பிறப்பித்துள்ளார். இவர்கள் இருவரும் திறமையான அதிகாரிகள். அதிலும் அருண் இளமையான துடிப்பான அதிகாரி. இன்னொரு பக்கம் டேவிட்சன் தேவாசீர்வாதம் ஏற்கனவே உளவுத்துறையில் நல்ல பெயர் எடுத்தவர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+