கர்நாடக சீக்ரெட்! அண்ணாமலை பதவியே காலியாகிடுமாம்! என்ன ஆர்எஸ் பாரதி இப்படி சொல்றாரே! டெல்லி பிரஷர்?
சென்னை: நேற்று பாஜக தலைவர் அண்ணாமலைக்கு கடுமையாக பதில் அளித்த திமுக அமைப்புச் செயலாளர் எம்பி ஆர். எஸ் பாரதி பல முக்கியமான விஷயங்களை தெரிவித்தார். அதிலும் அண்ணாமலைக்கு கட்சிக்கு உள்ளேயே எதிர்ப்பு இருக்கிறது.. அவரின் பதவிக்கும் சிக்கல் என்றெல்லாம் குறிப்பிட்டார். இதெல்லாம் போக அண்ணாமலை பற்றிய ரகசியத்தை வெளியிடுவேன் என்று ஆர். எஸ் பாரதி எச்சரிக்கை விடுத்துள்ளார்.. அது என்ன சீக்ரெட்.. அப்படி என்ன நடந்தது? என்று பார்க்கலாம்!
Recommended Video
தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலினின் அமீரக பயணத்தை பற்றித்தான் பாஜக தலைவர் அண்ணாமலை புகார் மேல் புகார் வைத்து வருகிறார். துபாய், அபுதாபியில் முதல்வர் ஸ்டாலின் பல்வேறு ஆலோசனை கூட்டங்களை நடத்தினார்.
இந்த பயணத்தில் மொத்தமாக 6 நிறுவனங்களுடன் 6100 கோடி ரூபாய்க்கு ஒப்பந்தம்

கேள்வி என்ன?
இந்த நிலையில் இந்த பயணம் குறித்து பாஜக தலைவர் அண்ணாமலை விமர்சனம் வைத்தார். அதில் முதல்வர் ஸ்டாலின் 5 ஆயிரம் கோடி ரூபாய் துபாய்க்கு கொண்டு சென்றுள்ளதாக பாஜக தமிழக தலைவர் அண்ணாமலை குற்றஞ்சாட்டி உள்ளார். துபாயில் நடைபெறும் விழாவில் தமிழகம் சார்பிலான அரங்கைத் திறந்துவைக்க ஏன் இவ்வளவு பணம்? துபாய் பயணத்தின் மர்மம் என்ன? என்று பாஜக அண்ணாமலை கேள்வி எழுப்பி இருந்தார். அதோடு சொந்த முதலீட்டை செய்வதற்காக திமுக இந்த பயணத்தை மேற்கொள்கிறதா என்றும் பாஜக தலைவர்கள் கேள்வி எழுப்பி இருந்தனர்.

நோட்டீஸ்
அண்ணாமலையின் இந்த கருத்துக்கு எதிராக திமுக தரப்பில் உடனே நோட்டீஸ் அனுப்பப்பட்டது. அண்ணாமலை மன்னிப்பு கோர வேண்டும்; இல்லாவிடில் கிரிமினல் வழக்கு தொடரப்படும். அவருக்கு 24 மணி நேரம் மட்டுமே அவகாசம். அதற்குள் மன்னிப்பு கோர வேண்டும். இல்லையென்றால் கிரிமினல் வழக்கு பதிவு செய்யப்படும். அதோடு அவர் 100 கோடி ரூபாய் நஷ்ட ஈட்டு தொகையை தமிழ்நாடு அரசின் நிவாரண நிதிக்கு நஷ்ட ஈடாக கொடுக்க வேண்டும் என்று ஆர்.எஸ்.பாரதி தனது நோட்டீஸில் குறிப்பிட்டுள்ளார். ஆனால் அண்ணாமலை மன்னிப்பு கேட்க மறுத்துவிட்டார்.

ஆடு மாடு
என்னிடம் வயலில் ஆடு மாடுதான் இருக்கிறது. 100 கோடி எல்லாம் இல்லை. என்னை வேண்டுமானால் கைது செய்யுங்கள் என்று அண்ணாமலை குறிப்பிட்டார். மாலை வரை பாஜக அலுவலகத்தில்தான் இருப்பேன் முடிந்தால் வந்து கைது செய்யுங்கள். தொட்டாம்பட்டியில் இருந்து வந்த என்னை தொட்டுப்பார்க்கட்டும் என்று அண்ணாமலை கூறியிருந்தார். இதற்கு ஆர். எஸ் பாரதி அளித்த பதிலில் அண்ணாமலை எப்படி போலீஸ் ஆனார் என்றே தெரியவில்லை.

தெரியாதா?
அவதூறு வழக்கில் யாராவது கைது செய்யப்படுவார்களா? இது கூடவா போலீசாக இருந்த அவருக்குதெரியாது? அவர் எப்படி போலீஸ் ஆனார் என்ற சந்தேகம் வருகிறது. இந்திய தண்டனை சட்டம் 500ஆம் பிரிவின் கீழ் யாராவது இதுவரை கைதாகி உள்ளார்களா? அவரை இப்போது கைது செய்து ஜெயிலில் சோறு போட்டு எதற்கு காசை வீணடிக்க வேண்டும். அவரை கைது செய்ய வேண்டிய நேரத்தில் கைது செய்வோம் என்று ஆர். எஸ் பாரதி குறிப்பிட்டு உள்ளார்.

கர்நாடகா
இதில் இரண்டு முக்கியமான குற்றச்சாட்டுகளை ஆர். எஸ் பாரதி வைத்துள்ளார். திமுக வட்டாரத்தில் மட்டுமின்றி பாஜக வட்டாரத்திலும் இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அதன்படி அண்ணாமலையின் கர்நாடக ரகசியத்தை வெளியிட வேண்டி வரும். கர்நாடகாவில் ஆப்ரேஷன் கமலா மூலம் காங்கிரஸ் ஆட்சி கவிழ்க்கப்பட்டது. இதற்கு தமிழ்நாட்டில் இருந்து அன்றைய ஆட்சியாளர்கள் மூலம் பணம் சென்றது. அது எப்படி போனது என்று எங்களுக்கு தெரியும்.

யார் அனுப்பியது
அந்த பணத்தை யார் அனுப்பியது, யார் வாங்கியது என்றும் எங்களுக்கு தெரியும். நீங்கள் அப்போது அங்கே போலீஸ் அதிகாரியாக இருந்ததும் தெரியும். கொஞ்சம் எச்சரிக்கையாக இருங்கள்.. என்று ஆர். எஸ் பாரதி எச்சரிக்கை விடுத்துள்ளார். அதோடு அண்ணாமலை பதவி பறிபோகும் வாய்ப்பு உள்ளதாகவும் ஆர். எஸ் பாரதி தெரிவித்துள்ளார். முதல்வர் ஸ்டாலின் பணம் எடுத்து சென்றதாக அண்ணாமலை பொய் சொல்கிறார். இது தெரிந்த நீங்கள் முதல்வரை தடுத்து இருக்கலாமே ஏன் செய்யவில்லை.

மத்திய பாஜக
மத்திய பாஜக தலைவர்களே அண்ணாமலை மீது அதிருப்தியில் இருக்கிறார்கள். இதை பற்றி எனக்கு தகவல் வந்துள்ளது. அண்ணாமலை பொறுப்பில்லாமல் பேசுகிறார் என்று மத்தியில் அவர் மீது கோபத்தில் உள்ளார்கள். இதனால் ஏதாவது செய்ய வேண்டும் என்று அவர் இப்படி பேசிக்கொண்டு இருக்கிறார். அண்ணாமலை பதவி காலியாக போகிறது என்றே நான் நினைக்கிறன். அவரை பதவியில் இருந்து நீக்க இப்படி எல்லாம் மேலிடத்தில் இருந்து பேச வைக்கிறார்களோ என்று தோன்றுகிறது என்றும் ஆர். எஸ் பாரதி தெரிவித்துள்ளார்.

ஆர். பாரதி அண்ணாமலை
அண்ணாமலை பற்றி ஆர். எஸ் பாரதி தெரிவித்த இந்த இரண்டு விஷயங்கள் தமிழ்நாடு அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கர்நாடகாவில் ஆட்சி மாற்றம் ஏற்பட தமிழ்நாட்டில் இருந்து பணம் அனுப்பியதாகவும் அப்போது அண்ணாமலை அங்கு போலீசாக இருந்தார் என்று ஆர்.எஸ் பாரதி தெரிவித்துள்ளார். அதோடு தமிழ்நாடு பாஜகவின் தலைவர் விரைவில் மாற்றப்படலாம்.. இதற்கு பின் டெல்லி பிரஷர் உள்ளது என்றும் ஆர். எஸ் பாரதி சூசகமாக தெரிவித்துள்ளார். இதற்கு விரைவில் அண்ணாமலை பதில் அளிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications