சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

கூட்டத்தை கூட்டினா அப்பாவுக்கு சிக்கல்தான்.. மருத்துவர்கள் சொன்னதும் ஐஸ்வர்யா கண்முன் நிழலாடிய 2011

Google Oneindia Tamil News

சென்னை: அரசியலுக்கு வர வேண்டாம் என ரஜினிகாந்த் முழுக்கு போடும் அளவுக்கு ஹைதராபாத்தில் நடந்தது என்ன?

அண்ணாத்த படப்பிடிப்புக்கு தனது மகள் ஐஸ்வர்யாவுடன் ரஜினிகாந்த் ஹைதராபாத்திற்கு சென்றிருந்தார். அங்கு படக்குழுவினர் சிலருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது. இதையடுத்து ரஜினிக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது.

ஆனால் அவருக்கு கொரோனா இல்லை என முடிவுகள் வந்தது. எனினும் அவருக்கு ரத்த அழுத்தத்தில் மாறுதல்கள் இருந்ததால் அவர் ஹைதராபாத்தில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

தலைவர் இல்லாத களமா?.. வேண்டாம்! எங்கள் ஓட்டு நோட்டாவுக்கே.. வேதனையுடன் ரஜினி ரசிகர்கள் தலைவர் இல்லாத களமா?.. வேண்டாம்! எங்கள் ஓட்டு நோட்டாவுக்கே.. வேதனையுடன் ரஜினி ரசிகர்கள்

ரஜினிகாந்த்

ரஜினிகாந்த்

மூன்று தினங்கள் மருத்துவமனையில் இருந்த ரஜினிகாந்துக்கு மன அழுத்தம் அதிகம் இருப்பதை மருத்துவர்கள் அறிந்தனர். பின்னர் அவரது ரத்த அழுத்தத்தை கட்டுக்குள் கொண்டு வந்து அவரை டிஸ்சார்ஜ் செய்தனர். ஆனால் டிஸ்சார்ஜ் சம்மரியில் ரஜினிக்கு மருந்து மாத்திரைகளை விட அறிவுரைகள்தான் அதிகம் இருந்தது.

சிறுநீரகம்

சிறுநீரகம்

அவர் கட்டாயம் 10 நாட்களுக்கு ஓய்வில் இருக்க வேண்டும். அதுவும் பெட் ரெஸ்ட். அவர் கொரோனா அதிகம் பரவும் சூழலில் இருப்பதை தவிர்க்க வேண்டும். ஏற்கெனவே ரஜினிக்கு சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்யப்பட்டிருப்பதால் கொரோனா வந்தால் நேரடியாக சிறுநீரகத்தைதான் பாதிக்கும். எனவே அவர் கூட்டமான இடங்களுக்கு செல்வதை தவிர்க்க வேண்டும்.

போயஸ் தோட்டம்

போயஸ் தோட்டம்

மேலும் தற்போது நடைபெறும் படப்பிடிப்புகளையும் சில நாட்களுக்கு ஒத்தி வைக்க வேண்டும் என தெரிவித்துவிட்டார்கள். இதனால் ஐஸ்வர்யா கலங்கியதாகவும் கூறுகிறார்கள். மேலும் 2011-ஆம் ஆண்டு போரூர் ராமச்சந்திராவில் அனுமதிக்கப்பட்ட ரஜினி, சிறுநீரக பிரச்சினைக்காக சிங்கப்பூர் சென்று மறுஜென்மம் எடுத்த சம்பவங்கள் ஐஸ்வர்யாவின் முன் நிழலாடியதாகவும் கூறப்படுகிறது. இதையடுத்து அப்பாவை பார்த்துக் கொள்கிறேன் என கூறி டிஸ்சார்ஜ் செய்துவிட்டு போயஸ் தோட்டத்திற்கு அழைத்து வந்தார் ஐஸ்வர்யா.

ரஜினி

ரஜினி


பின்னர் மருத்துவர்கள் கூறியது குறித்து தனது தாய் லதாவிடமும், தங்கை சவுந்தர்யாவிடமும் ஐஸ்வர்யா கூறிவிட்டார். இதையடுத்து மூவரும் சேர்ந்து ரஜினிகாந்திற்கு யதார்த்தங்களையும் பாதிப்புகளையும் எடுத்துக் கூறி, ஏற்கெனவே சென்னை மருத்துவர்களும் அரசியலுக்கு வருவதை தற்போது ஒத்தி போடுங்கள் என அறிவுறுத்தியதை சுட்டிக் காட்டி அவர்களது அன்பால் ரஜினியை கட்டி போட்டுவிட்டதாக தகவல்கள் கூறுகின்றன. இதனால்தான் அவர் இந்த கடின முடிவை எடுத்தார் என்றும் கூறுகிறார்கள்.

English summary
What did Doctors say to Iswarya Rajinikanth? This is the main reason that forced Rajini to take this hard step.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X