உடைந்து போன.. ஆளுமை பிம்பம்? கூட்டணி பேச்சுவார்த்தைகளில் அதிமுக தோல்வி அடைகிறதா? என்னாச்சு?
சென்னை: தமிழ்நாட்டில் லோக்சபா தேர்தலுக்கான பேச்சுவார்த்தைகள் நடந்து வரும் நிலையில் அதிமுக கட்சி கூட்டணி பேச்சுவார்த்தைகளில் சொதப்பி வருகிறது.
ஆளும் திமுக எப்போதும் போல வேகமாக கூட்டணி பேச்சுவார்த்தைகளை முடித்து தற்போது தொகுதிகளை தேர்வு செய்து முடித்துவிட்டது. திமுக கூட்டணி: லோக்சபா தேர்தலுக்கான கூட்டணி பற்றிய அறிவிப்புகளை திமுக வேகமாக வெளியிட்டு வருகிறது. தமிழ்நாட்டில் திமுக பிரம்மாண்ட கூட்டணியை அமைத்துள்ளது. 2024 மக்களவைத் தேர்தல்: திமுக மற்றும் கூட்டணிக் கட்சிகளின் தொகுதிப் பங்கீடு விவரம்.

திமுக - 21
காங்கிரஸ் - 9 + புதுச்சேரி
விசிக - 2
சிபிஐ - 2
சிபிஎம் - 2
மதிமுக -1
இயூமுலீ - 1
கொமதேக - 1
இதற்கான தொகுதிகளும் அறிவிக்கப்பட்டுவிட்டது.
பாஜக கூட்டணி: இன்னொரு பக்கம் பாஜகவும் முக்கியமான சில கட்சிகளை கூட்டணிக்கு இழுத்துவிட்டது. இது போக பாஜக - பாமக கூட்டணி ஒப்பந்தம் கையெழுத்தாகி உள்ளது. 10 தொகுதிகளில் பாமக போட்டியிடப்போவதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. தைலாபுரம் தோட்டத்தில் நடந்த சந்திப்புக்கு பின்னர் ராமதாஸ், அண்ணாமலை ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர். அதிமுகவிற்கு இது ஒரு வகையில் பெரிய பின்னடைவாக மாற போகிறது.
அன்புமணி 10 லோக்சபா சீட் + 1 ராஜ்ய சபா சீட் + ஒரு அமைச்சர் பதவி கேட்க.. 1 ராஜ்ய சபா சீட் + ஒரு அமைச்சர் பதவி கிடையாது. 10 லோக்சபா சீட் தருகிறோம் என்று பாஜக சொல்லி உள்ளதாம்.
இதையடுத்து பாமக இறங்கி வந்து 10 லோக்சபா சீட் + அமைச்சர் பதவி என்றுள்ளதாம். இதையடுத்து 10 லோக்சபா சீட் ஓகே + மத்திய பிரிவுகளில் பெரிய பதவி ஒன்று + பாமகவில் ஒருவர் எம்பி ஆனால் அமைச்சர் பதவி தர முடியாது. ஆனால் பார்க்கலாம் என்று பாஜக கூறியுள்ளதாம். இதை பாமக ஏற்றுக்கொண்டதாக தகவல்கள் வருகின்றன.
இதையடுத்து பாஜக - பாமக கூட்டணி ஒப்பந்தம் கையெழுத்தாகி உள்ளது. 10 தொகுதிகளில் பாமக போட்டியிடப்போவதாக அறிவிக்கப்பட்டு உள்ளது
மற்ற கட்சிகள்: இது போக பாஜக கூட்டணியில் அமமுக-விற்கு 4 தொகுதிகளும், ஓபிஎஸ் அணிக்கு 4 தொகுதிகளும் ஒதுக்க பாஜக முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
சென்னை கிண்டியில் உள்ள நட்சத்திர ஓட்டலில் பாஜக நிர்வாகிகளுடன் ஓபிஎஸ் மற்றும் டிடிவி தினகரன் ஆகியோர் நேற்று முதல்நாள் நள்ளிரவு பேச்சுவார்த்தை நடத்தினர். இந்த பேச்சுவார்த்தையில் இதற்கான முடிவு எடுக்கப்பட்டு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
அதிமுக நிலைமை: ஆனால் அதிமுக தமிழ்நாட்டில் மிக மோசமான நிலையை அடைந்துள்ளது. தமிழ்நாட்டில் லோக்சபா தேர்தலுக்கான பேச்சுவார்த்தைகள் நடந்து வரும் நிலையில் அதிமுக கட்சி கூட்டணி பேச்சுவார்த்தைகளில் சொதப்பி வருகிறது.
தேமுதிகவுடன் அந்த கட்சியின் பேச்சுவார்த்தை இன்னும் வெற்றிபெறவில்லை. பாமகவுடன் நடந்த பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்து.. தற்போது பாமக பாஜக பக்கம் சென்றுவிட்டது. நேற்று மதியம் அதிமுக கூட்டணி கைகூடாத நிலையில் மாலையில் பாஜக - பாமக கூட்டணி உறுதி ஆனது. இன்று காலை பாமக - பாஜக ஆகிய இரண்டு கட்சிகளுக்கும் இடையில் கூட்டணி ஒப்பந்தம் கையெழுத்தாகி உள்ளது கைக்கு வந்த வாய்ப்பை நழுவவிட்டுள்ளார் எடப்பாடி. காங்கிரஸ், விசிகவை கூட்டணிக்கு இழுக்க முடியவில்லை.
இதனால் வேறு வழியின்றி மன்சூர் அலிகானின் இந்திய ஜனநாயக புலிகள் கட்சி உடன் எல்லாம் எடப்பாடி பேச்சுவார்த்தை நடத்தும் நிலை ஏற்பட்டு உள்ளது. அதிலும் கூட நாடாளுமன்றத் தேர்தலில் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தைக்கு அதிமுக அழைப்பு விடுத்ததன் பேரிலேயே நான் அங்கு சென்றேன் என நடிகரும் இந்திய ஜனநாயக புலிகள் கட்சித் தலைவருமான மன்சூர் அலிகான் இன்று தெளிவுப்படுத்தியுள்ளார். அதிமுக கட்சி அலுவலகத்தில் இந்த பேச்சுவார்த்தை நடந்தது.
ஆட்சி காலத்தின் போது எடப்பாடியை கட்சியினர் பலரும் ஆளுமை என்று அழைத்த காலங்கள் உண்டு. ஆனால் அவரே இப்போது கூட்டணி பேச்சுவார்த்தையில் பின்னடைவை சந்தித்து இருப்பது விவாதங்களை ஏற்படுத்தி உள்ளது.
-
பழைய பன்னீர்செல்வமா வாங்க.. அண்ணாமலையை விடாத அமித் ஷா! பாஜக அள்ளிக் கொடுக்கும் ரெண்டு லட்டு! என்ன? -
அண்ணாமலை ராஜினாமா ஏற்பு.. இனி அடிப்படை உறுப்பினர் கூட கிடையாது.. பாஜக அதிகாரப்பூர்வ அறிவிப்பு -
பாஜகவுக்கு ‘குட்பை'.. அண்ணாமலைக்காக ரெடியான ராஜ்யசபா சீட் இப்போ யாருக்கு பாருங்க! -
லாஸ்ட் சான்ஸ்.. பாஜக வேண்டவே வேண்டாம்.. அண்ணாமலையை டெல்லியிலேயே லாக் செய்த மேலிடம்.. ஏன் தெரியுமா? -
முதலில் இயக்கம்.. அடுத்து அரசியல் கட்சி.. உறுதியாக நிற்கும் அண்ணாமலை.. நாளை வெளியாகிறது அறிவிப்பு! -
பாஜகவின் பிளான் 'பி'.. அண்ணாமலை பின்னால் ஆர்எஸ்எஸ்! மாணிக்கம் தாகூர் வார்னிங்! -
திமுக போல தோற்காம இருக்கனும்னா திருப்பரங்குன்றத்தில் தீபம் ஏற்ற விஜய் அரசு ஓகே சொல்லனும்- நயினார் -
அண்ணாமலை என்றால் சும்மாவா.. பாஜக ஆஃபர் தந்தும் ஏற்கலயாமே? உடையும் ஓட்டு? இன்று 12 மணிக்கு என்னாகுமோ -
பாஜக பருப்பு இனி வேகாது.. 6 வருஷத்துக்கு பின் அண்ணாமலைக்குத் தெரிந்த உண்மை! உடைத்த ஜோதிமணி எம்பி! -
மோடியை சந்தித்த அண்ணாமலை! புது கட்சியா? பாஜகவில் புதிய பொறுப்பா? நாளை தெரிந்துவிடும் -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரொம்ப அவசரப்படாதீங்க அண்ணாமலை.. அமித் ஷா போட்ட அன்புக் கட்டளை! இன்னும் தமிழ்நாடு திரும்பாதது ஏன்?










Click it and Unblock the Notifications