மன்சூர் அலிகான் வாயில் இருந்து என்ன எடுத்தார்? - வீடியோ தீயாகப் பரவிய நிலையில் அவரே கொடுத்த விளக்கம்
சென்னை: இஃப்தார் நோன்பு திறப்புக்கு முன் நடிகர் மன்சூர் அலிகான் செய்த வித்தியாசமான செயல் சமூக வலைதளங்களில் வைரலாகப் பரவியது. வாயில் இருந்து மன்சூர் அலிகான் என்ன எடுத்தார் எனக் கேள்விகள் எழுந்த நிலையில் அவரே அதுகுறித்து விளக்கம் அளித்துள்ளார்.
நடிகர் மன்சூர் அலிகான், கடந்த 2024 லோக்சபா தேர்தலில் வேலூர் தொகுதியில் சுயேட்சையாகப் போட்டியிட்டார். இந்திய ஜனநாயக புலிகள் என்ற பெயரில் கட்சியை நடத்தி வந்த மன்சூர் அலிகான் அதற்கு தேர்தல் ஆணையம் ஒப்புதல் அளிக்காததால் சுயேச்சையாக போட்டியிட்டார். அவருக்கு பலாப்பழம் சின்னம் ஒதுக்கீடு செய்யப்பட்டது.

தமிழ்நாட்டில் வாக்குப்பதிவு முடிவடைந்ததும், இந்திய ஜனநாயகப் புலிகள் கட்சியின் தலைவர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைய, தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப் பெருந்தகையை சென்னை சத்தியமூர்த்தி பவனில் சந்தித்து கடிதம் அளித்தார். இந்நிலையில், தற்போது சட்டசபை தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், மன்சூர் அலிகான் மீண்டும் லைம் லைட்டுக்குள் வந்துள்ளார்.
சென்னையில் கடந்த மார்ச் 14 ஆம் தேதி வெள்ளிக்கிழமை நடைபெற்ற இஃப்தார் நோன்பு திறக்கும் நிகழ்வில் மன்சூர் அலிகான் பங்கேற்றிருந்தார். அப்போது, இஸ்லாமியர்கள் அணியும் தொப்பியால் மறைத்துக்கொண்டு, வாயில் இருந்து எதையோ எடுத்து சட்டை பாக்கெட்டில் போட்டார் மன்சூர் அலிகான்.
மன்சூர் அலிகானின் இந்தச் செயல் அனைவரையும் கவனிக்க வைத்தது. மன்சூர் அலிகான் தொப்பியால் மறைத்துக்கொண்டு வாயில் இருந்து எதை எடுத்தார் என சமூக வலைதளங்களில் பெரும் விவாதமே நடைபெற்றது. மன்சூர் அலிகான், போதைப் பொருளான குட்காவை எடுத்ததாக நெட்டிசன்கள் பலரும் விமர்சித்தனர்.
இந்நிலையில் இதுதொடர்பாக மன்சூர் அலிகானே விளக்கம் அளித்துள்ளார். செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய மன்சூர் அலிகான், "வெள்ளிக்கிழமை ஒரு இஃப்தார் நோன்பு விழாவில் பங்கேற்றேன். எனது கடவாய்ப் பல்லில் ஷூ போட்டுள்ளேன். அது கழன்றுவிட்ட நிலையில் நேற்று காலையில் தான் மீண்டும் மாற்றிவிட்டு வந்தேன்.
பல் ஷூ கழன்றுவிட்டதால் அதை மறைவாக எடுத்து வைத்தேன். இப்போது அதை பொருத்த 15,000 ரூபாய் ஆகிறது. அதை எடுத்து வைத்ததற்கு, மன்சூர் அலிகான் வாயில் இருந்து என்ன எடுத்தார்? எனக் கேட்கிறார்கள். லிங்கம் எடுக்க நான் என்ன பிரேமானந்தாவா? என்னத்தைச் சொல்வது? என் உடம்பில் போதை வஸ்து எதுவும் இல்லை. அதை பார்த்தது கூட இல்லை.
எனது உடலில் ரத்த மாதிரி சோதனை எடுத்து, அதில் ஏதாவது ஒரு போதைப் பொருள் இருந்தால் நான் இதே இடத்தில் தூக்கில் தொங்குகிறேன். சொல்பவர்கள் சொல்லிவிட்டு போகட்டும். நான் செய்த தவறு அதனை மறைவாக எடுத்து வைத்தது தான்." எனக் கூறியுள்ளார் மன்சூர் அலிகான்.
-
சென்னையில் சிறுவனுக்கு பாலியல் தொல்லை.. காவலரை டிஸ்மிஸ் செய்து அதிரடி உத்தரவிட்ட ஆணையர்! -
விஜய்-க்கு புது சவால்.. 13 மாசமாச்சு.. சென்னை ஏர்போர்ட் - கிளாம்பாக்கம் மெட்ரோ திட்டத்தை மறந்த மத்திய அரசு! -
எபோலா வைரஸ்: உகாண்டாவில் இருந்து பெங்களூர் வந்த பெண்.. மத்திய சுகாதாரத்துறை ரிப்போர்ட்! -
Mayor Priya: சென்னை மேயர் பிரியாவுக்கு உடல்நலக் குறைவு! காலில் என்ன ஆனது? -
பெங்களூர், ஹைதராபாத்-யிடம் தோற்றுப்போகும் சென்னை.. தலையெழுத்தை மாற்றுவாரா விஜய்! -
1700 ஏக்கர் சிப்காட் பூங்கா ஒரு சர்வதேச விமான நிலையத்திற்கு இணையான வளர்ச்சியை கொடுக்குமா?- ஒரு அலசல் -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்!












Click it and Unblock the Notifications