சோனியா காந்தியிடம் கே.எஸ்.அழகிரி நேரில் பேசியது என்ன? 10 நிமிடங்கள் நடைபெற்ற முக்கியச் சந்திப்பு!
சென்னை: தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி, சோனியாகாந்தியை நேற்று மாலை நேரில் சந்தித்து சுமார் 10 நிமிடங்கள் வரை பேசியிருக்கிறார்.
அப்போது பேரறிவாளன் விடுதலை, திமுக மோடி எதிர்ப்பு, அதிமுகவின் இன்றைய நிலை உள்ளிட்ட விவகாரங்கள் குறித்தெல்லாம் எடுத்துக் கூறியிருக்கிறார்.
தமிழக அரசியல் நிலவரங்களை கடகடவென 10 நிமிடங்களுக்குள் சுருக்கமாக சோனியாவின் கவனத்திற்கு கொண்டு சென்ற கே.எஸ்.அழகிரி, ராஜ்யசபா வேட்பாளர் பற்றியும் பேசியிருக்கிறார்.

நேரில் சந்திப்பு
பேரறிவாளன் விடுதலை என தீர்ப்பு வந்தது முதல் காங்கிரஸ் இடைக்கால தலைவர் சோனியாகாந்தியை நேரில் சந்திக்க நேரம் கேட்டு வந்தார் தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி. இவ்வளவு நாட்களாக இழுத்தடிக்கப்பட்டு வந்த நிலையில் நேற்று மாலை 4.30 மணி முதல் 4.40 வரை கே.எஸ்.அழகிரிக்கு சோனியாகாந்தி நேரம் ஒதுக்கித் தந்தார். இதையடுத்து டெல்லிக்குச் சென்ற கே.எஸ்.அழகிரி சோனியாவுடனான சந்திப்பின் போது பேரறிவாளன் விடுதலை விவகாரத்தை திமுக கொண்டாடுவது பற்றி வேதனை தெரிவித்திருக்கிறார்.

மோடி எதிர்ப்பு
மேலும், பேரறிவாளன் விடுதலையை எதிர்த்து தமிழக காங்கிரஸ் சார்பில் நடத்தப்பட்ட அறப்போராட்டம் பற்றியும் எடுத்துக் கூறியிருக்கிறார். இது தொடர்பாக சோனியாவிடம் இருந்து பதிலுக்கு பெரியளவில் எந்த ரியாக்ஷனும் வரவில்லை எனத் தெரிவிக்கிறார்கள் உள் விவரம் அறிந்தவர்கள். மேலும், மோடி எதிர்ப்பில் திமுக உறுதியாக இருப்பதையும் தமிழக சட்டமன்றத்தில் மத்திய அரசின் சட்டங்களுக்கு எதிராக நிறைவேற்றப்பட்ட 3 தீர்மானங்கள் பற்றியும் கூறியிருக்கிறார்.

சோனியா ஆர்வம்
அப்போது மட்டும் அது தொடர்பாக ஆர்வமுடன் பதில் கேள்வி ஒன்றை கேட்டிருக்கிறார் சோனியா. அதிமுகவின் இன்றைய நிலை குறித்தும் அதற்கு பாஜக தான் காரணம் என்றும் கே.எஸ்.அழகிரி சோனியாவிடம் தெரிவித்திருக்கிறார். இதையும் ஆர்வமுடன் உன்னிப்பாக கவனித்து கேட்டறிந்திருக்கிறார் சோனியா. மற்றபடி கே.எஸ்.அழகிரியிடம் பொதுவான ஒரிரு கேள்விகளை கேட்டிருக்கிறார் சோனியாகாந்தி. இறுதியாக ராஜ்யசபா சீட் குறித்தும் பேச்சு நடந்திருக்கிறது.

ராஜ்யசபா சீட்
ஆனால் வேட்பாளர் விவரம் குறித்த தகவல் எதுவும் நமக்கு கிடைக்கவில்லை. இன்றோ நாளையோ முறைப்படி காங்கிரஸ் மேலிடத்தில் இருந்து தமிழக ராஜ்யசபா வேட்பாளர் விவரம் வெளியாகும் என்பது மட்டும் உறுதி எனத் தெரிவிக்கப்படுகிறது. பல மாதங்களுக்கு பிறகு சோனியாவை கே.எஸ்.அழகிரி நேரில் சந்தித்து பேசியிருப்பது குறிப்பிடத்தக்கது.
-
175 தொகுதிகளில் உதயசூரியன் சின்னத்தில் போட்டி! திமுக கூட்டணியில் எந்த கட்சிக்கு எத்தனை சீட்? லிஸ்ட்! -
அடித்து ஆடிய எடப்பாடி.. திமுக கேம்பில் எதிர்பார்க்காத குளறுபடி.. ஸ்டாலின் மனதில் என்ன இருக்கிறது?.. -
ஶ்ரீபெரும்புதூரை குறிவைத்த விசிக.. தொகுதி மாறும் செல்வப்பெருந்தகை.. எங்கு தெரியுமா -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம் -
பெட்ரோல் இல்லை.. ஆசிய நாடுகளுக்கு ‘நோ’ சொன்ன அராம்கோ? உலக அரசியலே தடம் புரள போகுது? -
பாரதத்தின் நிரந்தர பிரதமர்.. வட இந்தியாவில் திமுக சிலிண்டர் விளம்பரம் ஹிட்.. தர்ம சங்கடத்தில் பாஜக












Click it and Unblock the Notifications