'டேபிள் துடைக்க'.. கொந்தளிக்கும் வட இந்தியர்கள்.. அமைச்சர் எம்ஆர்கே பன்னீர்செல்வம் என்ன பேசினார்?
சென்னை: வடக்கே உள்ளவர்கள் இந்தி பேசுவதால், இந்தியை மட்டும் அவர்கள் படிச்ச காரணத்தாலே வேலைவாய்ப்பு இல்லாமல் கட்டிடத் தொழிலாளியாக, டேபிள் துடைக்கிறவர்களாக, பானிபூரி விற்கிறவர்களாக இங்கு வருகிறார்கள். ஆனால் நம்ம பசங்க எல்லாம் எங்க போயிருக்காங்க? வெளிநாட்டுக்கு போகிறார்கள். அங்க வெளிநாடுகள்ல போய் கோடி கோடியாக சம்பாதிக்கக்கூடிய ஒரு வாய்ப்பு கிடைச்சது.. ஏன்னா இருமொழிக் கொள்கையில் ஆங்கிலம் படித்ததுதான் என்று அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் கூறினார். இது வட இந்திய ஊடகங்கள் சர்ச்சையாக்கி உள்ளன. வட இந்திய தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்து வருகிறார்கள்.
வட இந்தியர்களை தமிழக அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் இழிவாகப் பேசிவிட்டதாக வட இந்திய ஊடகங்கள் கடந்த சில நாட்களாக தீவிரமாக வீடியோக்களை பரப்பி வருகின்றன. அதற்கு கடும் எதிர் வினையும் வட இந்தியாவில் உள்ள அரசியல் கட்சிகளிடம் இருந்து வந்த வண்ணம் உள்ளது. எம்ஆர்கே பன்னீர்செல்வம் என்ன தான் பேசினார். ஏன் அப்படி சர்ச்சையானது என்பதை பார்ப்போம்.

செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகத்தில் நடைபெற்ற திமுக கூட்டத்தில் அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் பேசுகையில், வடக்கே உள்ளவர்கள் இந்தி பேசுவதால், இந்தியை மட்டும் அவன் படிச்ச காரணத்தாலே வேலைவாய்ப்பு இல்லாமல் கட்டிடத் தொழிலாளியாக, டேபிள் துடைக்கின்றவனாக, பானிபூரி விற்பவர்களாக வருகிறார்கள்.
நமது பிள்ளைகள் எல்லாம் எங்க போயிருக்காங்க? வெளிநாட்டுக்கு போயிருக்கார்கள். அங்கே வெளிநாடுகளில் போய் கோடி கோடியாக சம்பாதிக்கக்கூடிய ஒரு வாய்ப்பு கிடைத்தது.. ஏனெனில் இருமொழிக் கொள்கையில் ஆங்கிலம் படித்ததுதான். எல்லா கிராமத்தைச் சார்ந்தவர்களும் வெளிநாடு சென்று வேலைவாய்ப்பு பெறக்கூடிய கம்ப்யூட்டர் படிக்கும் வாய்ப்பை கலைஞர் உருவாக்கிக் தந்தார்.
அவர் கிராமம் தோறும் மின்சாரத்தைக் கொடுத்தார். இப்ப கிராமம் தோறும் மின்சார வசதி பெற்றிருக்கிறோம் என்றால் நம்முடைய கலைஞர் முதல்வராக இருந்த காலத்திலிருந்துதான். பாதுகாக்கப்பட்ட குடிநீர் குடிக்கிறோம் என்றால் கலைஞர் வாட்டர் டேங்க் கட்டிக் கொடுத்தது. முன்னெல்லாம் குளம், குட்டைகளிலே குடிப்பாங்க, வயசானவங்களுக்குத் தெரியும். குளம் குட்டையில உள்ள தண்ணியைதான் முதல் நாள் புடிச்சு வெச்சுட்டு மறுநாள் குடிப்போம். மாடும் குளிக்கும், மனுஷனும் குளிப்பான் எல்லாம் செய்வாங்க. ஆனா பாதுகாக்கப்பட்ட குடிநீரைக் கொடுத்தது கலைஞர்தான்.
இப்ப நம்முடைய முதல்வர் மு.க. ஸ்டாலின், ஒவ்வொரு கிராமம் தோறும் 1 கோடியே 34 லட்சம் குடும்பத்திற்கு மாதம் மாதம் பணம் வருகிறது. பல திட்டங்கள் மூலமாக கிட்டத்தட்ட 2 கோடியே 14 லட்சம் குடும்பத்திற்கு மாதம் மாதம் பணம் போய்க்கொண்டு இருக்கிறது. அந்த சாதனையை புரிந்தது நம்முடைய முதலமைச்சர்தான். இவ்வாறு அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் பேசியிருந்தார்.
இதில் வடக்கே உள்ளவர்கள் இந்தி பேசுவதால், இந்தியை மட்டும் அவன் படிச்ச காரணத்தாலே வேலைவாய்ப்பு இல்லாம கட்டிடத் தொழிலாளியாக, டேபிள் துடைக்கின்றவனாக, பானிபூரி விற்பவர்களாக வருகிறார்கள் என்று எம்ஆர்கே பன்னீர்செல்வம் பேசியதை மட்டும் தனியாக எடுத்து வட இந்திய ஊடகங்கள் பரப்புரை செய்கின்றன. இது வட இந்தியாவில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது. காங்கிரஸ், பாஜக உள்ளிட்ட பல்வேறு கட்சி தலைவர்கள், அமைச்சர் எம்ஆர்கே பன்னீர்செல்வத்திற்கு கடும் கண்டங்களை தெரிவித்து வருகிறார்கள்.
-
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
"முதலமைச்சருக்கு நன்றி.. ஆனால்! எதிரியின் எதிரி நண்பனா? விஜய் ரசிகர்கள் குறித்து பேசிய அஜித் சகோதரர் -
வீரமணி ஒரே போடு.. திருச்சியில் முதலமைச்சர் விஜய் பேசிய அந்த பேச்சால் மொத்த பேருக்கும் முகச்சுளிப்பு? -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம் -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
கோவையில் அருவியாக மாறிய மேம்பாலம் .. மேட்டுப்பாளையம் ஊட்டி செல்லும் வழியில் மாறிய காட்சி -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
அரசியல் மோதலை விடுங்க.. 'கலைஞர்' கருணாநிதி பிறந்தநாளுக்கு முதல்வர் விஜய் போட்ட பதிவு! -
விஜய்க்கு அரசு பாதுகாப்பு மேல நம்பிக்கை இல்லையா? தனி பாதுகாவலரோடு வருவது ஏன்? லாக் செய்த அதிமுக -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக












Click it and Unblock the Notifications