ஏதாவது சொல்ல விரும்புறீங்களா? நீதிபதி கேட்ட ஒரு கேள்வி.. சட்டென பொன்முடி கொடுத்த ரியாக்சன்.. பின்னணி
சென்னை: சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி ஜெயசந்திரன் இன்று அமைச்சர் பொன்முடி வழக்கில் தண்டனையை வழங்கும் முன் பொன்முடியிடம் சில கேள்விகளை எழுப்பினார்.
அமைச்சர் பொன்முடிக்கு எதிரான சொத்து குவிப்பு வழக்கில் தீர்ப்பு மற்றும் 3 வருட தண்டனை மற்றும் 50 லட்ச ரூபாய் அபராதம் வழங்கப்பட்டு உள்ளது.
பொன்முடி வழக்கு ஆளும் திமுகவை கிட்டத்தட்ட புரட்டி போட்டுள்ளது. ஏனென்றால் திமுகவில் முதல்முறையாக ஆட்சியில் இருக்கும் போது சிறை செல்லும் அமைச்சர் இவர்தான். அதேபோல் திமுகவில் ஒருவர் குற்றம் செய்ததாக தண்டிக்கப்படுவதும் இதுதான் முதல் முறை. ஆனாலும் இப்போதைக்கு இந்த வழக்கில் தண்டனை 30 நாட்களுக்கு நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளது.

பொன்முடி கொடுத்த ரியாக்சன்: சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி ஜெயசந்திரன் இன்று அமைச்சர் பொன்முடி வழக்கில் தண்டனையை வழங்கும் முன் பொன்முடியிடம் சில கேள்விகளை எழுப்பினார். பொன்முடி உள்ளே வந்ததும்..
நீதிபதி ஜெயசந்திரன்: குற்றவாளிகளுக்கு வழி விடுங்கள்.. அவர்கள் வரட்டும்.
பொன்முடி நீதிபதிக்கு முன் வந்தார். இதை தொடர்ந்து
நீதிபதி ஜெயசந்திரன்: பொன்முடி நீங்கள் ஏதாவது சொல்ல விரும்புகிறீர்களா? கோர்ட் முன்பு தண்டனைக்கு முன் உங்கள் கருத்து எதையும் கொடுக்க விரும்புகிறீர்களா?
வழக்கறிஞர்: பொன்முடி எதுவும் பேசாமல் அமைதியாக ரியாக்சன் கொடுத்துள்ளார். அவர் பேச முயலும் முன் அவரின் வழக்கறிஞர் குறுக்கிட்டு பேசினார்.. ஆனால் பொன்முடி எதுவும் பேசாமல் ரியாக்சன் கொடுக்காமல் இருந்தார். பொன்முடியின் உடல்நிலை பற்றிய அறிக்கை மட்டுமின்றி அவரின் அமைச்சரவை பொறுப்புகள் பற்றிய சில அறிக்கையையும் பெஞ்சில் கொடுத்துள்ளனர்.
நீதிபதி ஜெயசந்திரன்: இந்த வழக்கில் பொன்முடி அமைச்சர் என்பதால் அவருக்கு 30 நாட்கள் கால அவகாசம் கொடுக்கிறேன். அவர் அமைச்சர் என்பதால்.. அதற்கு ஏற்ற நடவடிக்கைகளை.. நடவடிக்கையை நிறைவேற்றுவதற்கு ஏற்ற நடவடிக்கைகளை மேற்கொள்ள 30 நாட்கள் அவகாசம் கொடுக்கிறோம் என்று நீதிபதி அவகாசம் கொடுத்தார்.
நீதிபதி வழக்கின் தண்டனையை அறிவித்த நிலையில் அடுத்த வழக்கிற்காக வழக்கறிஞர்கள் பென்ச் முன் வந்ததால் பொன்முடி மற்றும் அவரின் மனைவி ஆகியோர் வெளியேறினார்கள்.
( 'குற்றவாளி' பொன்முடி- சொத்து குவிப்பு வழக்கில் 3 ஆண்டுகள் சிறை தண்டனை- அமைச்சர் பதவி பறிபோனது!)
வழக்கு பின்னணி: வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கில், அமைச்சர் பொன்முடி, அவரது மனைவி விசாலாட்சி ஆகியோரை விடுதலை செய்து, சிறப்பு நீதிமன்றம் அளித்த தீர்ப்பை சென்னை உயர்நீதிமன்றம் ரத்து செய்தது. 2006 முதல் 2011ம் ஆண்டு வரையிலான திமுக ஆட்சியில் உயர் கல்வித்துறை அமைச்சராகவும், கனிம வளத்துறை அமைச்சராகவும் பதவி வகித்த அமைச்சர் பொன்முடி, வருமானத்துக்கு அதிகமாக ஒரு கோடியே 75 லட்சம் ரூபாய் அளவுக்கு சொத்து சேர்த்ததாக லஞ்ச ஒழிப்புத் துறை தரப்பில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

சொத்து குவிப்பு வழக்கு: இந்த வழக்கை விசாரித்த, விழுப்புரம் மாவட்ட சிறப்பு நீதிமன்றம், வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட பொன்முடி மற்றும் அவரது மனைவி விசாலாட்சி மீதான குற்றச்சாட்டுக்கள் நிரூபிக்கப்படவில்லை எனக்கூறி, இருவரையும் விடுதலை செய்து 2016 ம் ஆண்டு ஏப்ரல் மாதம் தீர்ப்பளித்தது.
இந்த தீர்ப்பை எதிர்த்து லஞ்ச ஒழிப்புத் துறை தரப்பில் 2017 ம் ஆண்டு, சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல் முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கை நீதிபதி ஜி. ஜெயச்சந்திரன் விசாரித்தார். லஞ்ச ஒழிப்பு தரப்பில், இந்த வழக்கில் வருமான வரி கணக்குகள், சொத்து விவரங்கள், வங்கி கணக்கு விவரங்கள் உள்பட, 39 சாட்சிகளிடம் லஞ்ச ஒழிப்புத் துறை மேற்கொண்ட புலன் விசாரணையின் ஆதாரங்களை லஞ்ச ஒழிப்புத்துறை தரப்பு வழக்கறிஞர் பாபு முத்துமீரான் குறிப்பிட்டார். இதில்தான் பொன்முடிக்கு எதிராக தண்டனை வழங்கப்பட்டு உள்ளது.












Click it and Unblock the Notifications