கள்ளக்குறிச்சி கலெக்டர் பத்மஜா பற்றி கேட்டதுமே.. உளுந்தூர்பேட்டையில் வன்னி அரசு சொன்னதை பாருங்க

Subscribe to Oneindia Tamil

சென்னை: கள்ளக்குறிச்சி மாவட்ட கலெக்டர் பத்மஜா - தவெக எம்.எல்.ஏ. அருள் விக்னேஷ் இடையிலான சர்ச்சை தொடர்ந்து பேசப்பட்டு வரும் நிலையில், இதுகுறித்து அமைச்சர் வன்னி அரசு முதல் முறையாக செய்தியாளர்களிடம் கருத்து தெரிவித்துள்ளார். பாதிக்கப்பட்ட பெண்கள் பக்கமே விடுதலை சிறுத்தைகள் கட்சி நிற்கும் என்று கூறிய வன்னி அரசு, கலெக்டர் பத்மஜா குறித்தும் சில கருத்துகளை தெரிவித்துள்ளார்.

கள்ளக்குறிச்சி கலெக்டர் பத்மஜாவுக்கு தவெக எம்.எல்.ஏ. அருள் விக்னேஷ் மெசேஜ் அனுப்பியதாகக் கூறப்படும் விவகாரம் கடந்த சில நாட்களாகவே பேசப்பட்டு வருகிறது. இதுதொடர்பாக கலெக்டர் தரப்பில் புகார் அளிக்கப்பட்டதாகவும், அதன் பிறகும் அவருக்கு தொல்லை கொடுக்கப்பட்டதாகவும் சோஷியல் மீடியாவிலும் தகவல்கள் வெளியாகின.

vanni

எம்எல்ஏ அருள் விக்னேஷ்

மேலும், கள்ளக்குறிச்சி மாவட்டத்தின் பொறுப்பு அமைச்சராக இருக்கும் சமூக நீதி துறை அமைச்சர் வன்னி அரசிடம் கலெக்டர் பத்மஜா புகார் அளித்ததாகவும், ஆனால் அந்த புகார் மீது அமைச்சர் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றும், அதன் பின்னரும் எம்எல்ஏ தரப்பில் மீண்டும் தொல்லை கொடுக்கப்பட்டதாகவும் தகவல்கள் பரவின.

இதனிடையே, ஆட்சியரின் கணவர் தவெகவைச் சேர்ந்த முக்கிய அமைச்சர் ஒருவரிடம் புகார் அளித்ததாகவும் கூறப்பட்டது. எனினும், இந்தத் தகவல்கள் எதுவும் அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தப்படவில்லை.

உளுந்தூர்பேட்டை விழா

இந்தச் சூழலில், இன்று நவம்பர் 13-ம் தேதி உளுந்தூர்பேட்டை அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற குழந்தைகள் தின விழாவில் அமைச்சர் வன்னி அரசு, கலெக்டர் பத்மஜா ஆகியோர் பங்கேற்றனர்.
குழந்தைகள் தின விழாவில் கலெக்டர் பத்மஜா

இந்தச் சர்ச்சைக்கு மத்தியில், இன்று நவம்பர் 13-ம் தேதி உளுந்தூர்பேட்டை அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற குழந்தைகள் தின விழாவில் அமைச்சர் வன்னி அரசு, கலெக்டர் பத்மஜா ஆகியோர் பங்கேற்றனர். மாணவிகளுக்கு இனிப்புகளை வழங்கிய கலெக்டர், நிகழ்ச்சி முடியும் வரை அங்கேயே இருந்துள்ளார். ஆனதால், இதே நாளில் காட்டனந்தல் கிராம அரசு ஆரம்பப் பள்ளியில் நடைபெற்ற குழந்தைகள் தின விழாவில் எம்.எல்.ஏ. அருள் விக்னேஷும் பங்கேற்று மாணவர்களுக்கு கேக் வழங்கியுள்ளார்.

அமைச்சர் வன்னி அரசு சொன்னது என்ன?

இந்நிலையில், உளுந்தூர்பேட்டையில் நிகழ்ச்சியை முடித்த அமைச்சர் வன்னி அரசு, கீரனூர் ஏரியில் பனை விதைகள் நடும் பணியைத் தொடங்கி வைத்தார். அப்போது செய்தியாளர்களை சந்தித்த அவரிடம் தமிழக ஆளுநர் மத்திய உள்துறை அமைச்சகத்தைச் சந்தித்து தமிழக சட்டம் ஒழுங்கு குறித்து அறிக்கை அளிப்பது தொடர்பாகக் கேள்வி எழுப்பப்பட்டது.

அதற்கு வன்னி அரசு பதிலளிக்கும்போது, "ஆளுநர் வந்து இந்த மாதிரி போய் பார்க்கிறார். அவர் வெளியிலே வந்து என்ன சொல்கிறார்? சட்டம் ஒழுங்கு தொடர்பாக என்ன சொல்கிறார்? என்பதை பொறுத்துதான் எங்களுடைய பதில் இருக்கும். தமிழ்நாட்டில் என்ன மாதிரியான சட்டம் ஒழுங்கு இருக்கு என்று அவர் என்ன அறிக்கை கொடுக்கிறார் என்பதை பொறுத்து எங்களுடைய பதில் இருக்கும்" என்றார்.

அருள் விக்னேஷ் விவகாரம்

தொடர்ந்து, தவெக எம்.எல்.ஏ. அருள் விக்னேஷ் கலெக்டர் பத்மஜாவுக்கு குறுஞ்செய்தி அனுப்பியதாகக் கூறப்படும் விவகாரம் குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.

இதற்கு பதிலளித்த அமைச்சர் வன்னி அரசு , "தவெக எம்.எல்.ஏ ஆட்சியருக்கு மெசேஜ் அனுப்பியதாக சொன்னார்கள். எனக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டதாக சொல்கிறார்கள். நான் இன்றைக்குதான் இங்கு வந்திருக்கிறேன். நேற்று முன்தினம் நீலகிரி மாவட்டம் மசினகுடியில் பழங்குடி மக்களுக்கான FRA வனச்சான்று உரிமம் தருவது தொடர்பான நிகழ்ச்சிக்கு போகும்போதுதான் அந்த செய்தியை பார்த்தேன். இனிமேல்தான் அது குறித்து விசாரிக்கணும்.

பொது வாழ்க்கைக்கு வரும் பெண்கள் மீது அல்லது அரசு பணியில் இருக்கிற பெண்களை பாதுகாக்க வேண்டிய பொறுப்பு இருக்கு. விடுதலை சிறுத்தைகளை பொறுத்த அளவு Victim பக்கம்தான் நிற்போம். பாதிக்கப்பட்டவர்கள் பக்கம்தான் நிற்போம். அந்த அடிப்படையில் நாங்கள் எப்பவுமே நீதியின் பக்கம் நிற்கக்கூடியவர்கள்.

இது குறித்து முதல்வரோ அல்லது சம்பந்தப்பட்டவர்களோ எனக்கு அறிக்கை கொடுங்கள் என்று சொன்னால் நான் அதைப்பற்றி பேசுவேன். ஏனென்றால் இதுவரை யாருமே அது குறித்து என்னிடம் பேசவும் இல்லை.

பெண்கள் தொடர்பாக இது மாதிரியான செய்தியை பரப்புவது, பெண்களை பாதிப்புக்குள்ளாக்குவது, அச்சுறுத்துவது, வேலை செய்ய விடாமல் சீர்குலைப்பது என்பது எப்போதுமே தொடர்ந்து நடப்பதுதான்.

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் மிகச்சிறப்பான ஆட்சியராக செயல்பட்டு கொண்டிருப்பவர் மரியாதைக்குரிய பத்மஜா அவர்கள். அவருடைய செயல்பாடுகள் எந்த ஆளுங்கட்சிக்கோ, எதிர்க்கட்சிக்கோ கட்டுப்படாமல் முழுமையாக சட்டத்திற்கு கட்டுப்பட்டு செயல்படுத்துகிறார்கள்.

எங்கள் தோழர்களே இந்தந்த பொறுப்புகளுக்கு பரிந்துரை செய்கிறார்கள், அதையெல்லாம் செய்வது இல்லை. எனக்கு ஆட்சி நிர்வாகத்தில் என்ன சொல்லி கொடுக்கிறார்களோ அதை செய்கிறோம் என்று சொல்கிற நேர்மையான ஆட்சியர் அவர்கள். அதனால் அவர்கள் மீதான அவதூறுகள் பரப்புவது, அவர்களுடைய ஒழுக்கத்தை கேள்விக்குள்ளாக்குவது என்பது பொது வாழ்க்கையில் இருக்கிற பெண்களை மேலும் செயல்பட விடாமல் செய்வதுதான்.

நாங்கள் எப்பவுமே பெண்கள் பக்கம், பாதிக்கப்பட்டோர் பக்கம், Victim பக்கம் நிற்கக்கூடியவர்கள் விடுதலை சிறுத்தைகள்" என்றார்..

குழந்தைகள் தினம்

இதையடுத்து, குழந்தைகள் கடத்தல் மற்றும் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் குறித்த செய்திகளைத் திசைதிருப்புவதற்காகத்தான் குழந்தைகள் தின விழா நடத்தப்படுகிறதா என்று எழுப்பப்பட்ட கேள்விக்கும் அமைச்சர் வன்னி அரசு பதிலளித்தார்.

"சிறுமிகள், குழந்தைகள் கஷ்டப்படுவதை டைவர்ட் செய்வதற்காகத்தான் குழந்தைகள் தின விழா. பெண்களுக்கு எதிரான குற்ற சம்பவங்கள் அதிகரிக்கிறது என்பதெல்லாம் மிக மோசமான மனநிலையிலிருந்து கேட்கக்கூடிய கேள்வி, பரப்பப்படுகின்ற செய்தி.

குழந்தைகளுக்கான நாள் என்றால் என்ன என்று ஐக்கிய நாடுகள் சபை வரையறுக்கிறது. இதை படித்து தெரிந்தவர்கள் இதை பற்றி பேச மாட்டார்கள். ஒவ்வொரு நாளும் ஐக்கிய நாடுகள் சபை அதற்கான வெவ்வேறு தேதியில் அறிவிக்கிறார்கள். அதை பூக்கள் தினம் என்று சொல்கிறார்கள். அந்த குழந்தைகளை நல்ல மனநிலையில் வளர்க்கணும், நல்ல ஆரோக்கியமாக வளர்க்கணும், அச்சம் இல்லாமல் வளர்க்கணும் என்று சொல்கிறார்கள். அதைத்தான் நாங்கள் கடந்த காலங்களில் விடுதலை சிறுத்தைகள் செய்து கொண்டிருக்கிறோம்" என்றார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+