அண்ணே.. 5 வருஷத்துக்கு சிக்கல்! ஓடி வந்த தலைகள்! ஓபிஎஸ் வீட்டில் விடிய விடிய பேச்சு! அப்போ எடப்பாடி?
சென்னை: அதிமுக பொதுக்குழுவிற்கு தடை விதிக்க வேண்டும் என்று ஓ பன்னீர்செல்வம் தீவிரமான சட்ட போராட்டங்களை முன்னெடுத்து வருகிறார். பொதுக்குழுவிற்கு எதிராக தனி நீதிபதி விசாரணை செய்து வரும் நிலையில் நேற்று ஓ பன்னீர்செல்வம் தனது ஆலோசகர்களுடன் இரவோடு இரவாக ஆலோசனை மேற்கொண்டார்.
Recommended Video
அதிமுக பொதுக்குழுவிற்கு எதிராக ஓ பன்னீர்செல்வம் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். அவரின் இந்த மனு மீதான விசாரணை நேற்று சென்னை உயர் நீதிமன்றத்தில் தனி நீதிபதி முன் விசாரணைக்கு வந்தது.
நேற்று இந்த வழக்கில் 2 மணி நேரம் விசாரணை நடத்தப்பட்டது. ஓ பன்னீர்செல்வம் தரப்பு இதில் பல முக்கியமான வாதங்களை வைத்தது.

ஓ பன்னீர்செல்வம்
அதில் ஓ பன்னீர்செல்வம் தரப்பு வைத்த முக்கிய வாதம் என்றால்.. உச்ச நீதிமன்றம் பொதுக்குழுவை நடத்த அனுமதி கொடுத்துள்ளது. ஆனால் சட்டப்படி பொதுக்குழுவை நடத்துங்கள் என்று கூறியுள்ளது. இங்கு எது சட்டப்படி என்பதுதான் கேள்வி. ஜூலை 11ம் தேதி கூட உள்ள பொதுக்குழு சட்டப்படி நடக்கும் பொதுக்குழு கிடையாது. ஜூலை 11ம் தேதி பொதுக்குழுவை ஒருங்கிணைப்பாளர் - இணை ஒருங்கிணைப்பாளர் கூட்டவில்லை.

தலைமை கழகம்
அதிமுக தலைமை கழகம் பொதுக்குழுவை கூட்டி உள்ளது. இந்த தலைமை கழகத்துக்கு எந்த அதிகாரமும் இல்லை. தேர்தல் ஆணையத்தில் இந்த அமைப்பு பதிவு செய்யப்படவே இல்லை. அப்படி இருக்கும் போது அவர்கள் எப்படி பொதுக்குழுவை கூட்ட முடியும். ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவி இன்னும் காலாவதியாகவில்லை என்று ஓ பன்னீர்செல்வம் தரப்பு வாதம் வைத்தது.

கேள்விகள்
இதையடுத்து எடப்பாடி பழனிசாமிக்கு சில முக்கியமான கேள்விகளை உயர் நீதிமன்ற நீதிபதி எழுப்பினார். ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் காலாவதியாகிவிட்டதா? . இல்லை என்றால் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் உள்ள போது பொதுவக்குழுவை அவைத்தலைவர் எப்படி கூட்ட முடியும்? பொதுக்குழுவை கூட்ட தலைமை கழகம் எப்படி கடிதம் அனுப்ப முடியும்? பொதுக்குழுவை கூட்ட எத்தனை நாட்களுக்கு முன் நோட்டீஸ் அனுப்ப வேண்டும். அதில் யார் கையெழுத்து போட வேண்டும், என்று நீதிபதி கேள்வி எழுப்பி உள்ளார். இந்த கேள்விகளுக்கு எடப்பாடி பழனிசாமி தரப்பு இன்று பதில் அளிக்க வேண்டும்.

சாதகம்
இந்த கேள்விகள் ஓ பன்னீர்செல்வம் தரப்பிற்கு சாதகமாக உள்ளது. அதிலும் நேற்று நீதிபதி கேள்வி கேட்கும் போது, ஜூன் 23ஆம் தேதி பொதுக்குழுவின் போது ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகள் காலாவதியாகவில்லை. அப்படி இருக்கும் போது ஜூலை 11 ஆம் தேதி பொதுக்குழு நடக்கும் என்ற அறிவிப்பை தமிழ்மகன் உசேன் எப்படி அறிவிக்க முடியும்?, என்றும் குறிப்பிட்டார். இதுதான் ஓ பன்னீர்செல்வம் தரப்பிற்கு சாதகமாக மாறி உள்ளது.

ஆலோசனை
பொதுக்குழுவிற்கு எதிராக தனி நீதிபதி விசாரணை செய்து வரும் நிலையில் நேற்று ஓ பன்னீர்செல்வம் தனது ஆலோசகர்களுடன் இரவோடு இரவாக ஆலோசனை மேற்கொண்டார். நேற்று ஓ பன்னீர்செல்வம் வீட்டிற்கு அவரது ஆதரவாளர்கள், சட்ட வல்லுனர்கள் சிலர் சென்றுள்ளனர். இரவு நீண்ட நேரம் வரை ஆலோசனை செய்துள்ளனர். உயர் நீதிமன்ற வழக்கில் நேற்று சாதகமான அம்சங்கள் பேசப்பட்டதை இவர்கள் விவாதித்து உள்ளனர்.

5 வருடம்
ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவி காலாவதி ஆகவில்லை என்று நீதிபதி கூறியுள்ளார். இதை வைத்து சட்டப்படி பொதுக்குழு கூடவில்லை என்று தடை பெற முயற்சி செய்யலாம். பொதுக்குழுவை சட்டப்படி கூட்ட மட்டுமே உச்ச நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. ஆனால் இது சட்டப்படி கூடும் பொதுக்குழு கிடையாது என்று நாம் வாதம் வைப்போம் என்று ஓபிஎஸ்சுடன் சட்ட வல்லுனர்கள் ஆலோசனை செய்துள்ளார்.

நம்பிக்கை
அதோடு அவருக்கு நெருக்கமான நிர்வாகிகள்.. ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவி 5 ஆண்டுகளுக்கு செல்லும் என்பதை நிரூபிக்க வேண்டும் அண்ணே. அப்போதுதான் 5 ஆண்டுகளுக்கு எதுவும் செய்ய முடியாது என்ற நிலையை கொண்டு வர வேண்டும். தேர்தல் ஆணைய பதிவுகளில் இப்படித்தான் இருக்கிறது. அதை மாற்ற முடியாது. 5 வருஷத்திற்கு பொதுச்செயலர் பதவியை கொண்டு வர முடியாது என்று வாதம் வைப்போம் என்றும் நேற்று ஓபிஎஸ் வீட்டில் நடந்த ஆலோசனையில் பேசி உள்ளனர்.

ஆலோசனை
அதோடு இடைக்கால பொதுச்செயலாளர் பதவி கொண்டு வருவது சட்டப்படி செல்லாது என்று ஏற்கனவே சசிகலா வழக்கில் வாதம் வைக்கப்பட்டு இருக்கிறது. அந்த வாதத்தை வைத்ததே எடப்பாடி பழனிசாமிதான். அதை நாம் எடுத்துக்காட்டுவோம். இடைக்கால பொதுச்செயலாளர் என்ற பதவியே செல்லாது என்று வாதம் வைப்போம், என்றும் நேற்று ஓபிஎஸ் வீட்டில் நடந்த ஆலோசனையில் பேசி உள்ளனர். எடப்பாடி பழனிசாமி எப்படியாவது பொதுச்செயலாளர் ஆகிவிடலாம் என்று நினைத்துக்கொண்டு இருக்கும் நிலையில் ஓபிஎஸ் தரப்பு சட்ட ரீதியாக சில விதிகளை பயன்படுத்தி அதற்கு முட்டுக்கட்டை போட முயன்று வருகிறது!
-
2016 சட்டமன்ற தேர்தலில்.. அதிமுகவின் இன்பதுரை வெற்றி செல்லாது.. உயர்நீதிமன்றம் அதிரடி! -
அண்ணன் தம்பிகள்தானே! இடைத்தேர்தலில்.. அதிமுக-திமுக கூட்டணி! வாயை விட்ட சுப வீரபாண்டியன்! -
கதை ஓவர்! அதிமுகவில் இருந்து நீக்கியதை எதிர்த்த மனுவை வாபஸ் பெற அனுமதி கேட்ட ஒபிஎஸ்.. இன்று விசாரணை -
இபிஎஸ் வர்றதுக்குள்ள இப்படியா.. எஸ்.பி.வேலுமணி முகத்துக்கு நேராக துரோகின்னு கத்திய அதிமுக நபர் இவரா? -
பெரிய புள்ளி.. அதிமுகவுக்கு அடுத்த ஆப்பு! வலையை விரித்த செங்க்ஸ்.. தவெகவுக்கு தாவ தயாரான சிவிஎஸ்! -
இதுவும் பெரிய திமிங்கலம் தான்.. அதிமுகவுக்கு அடுத்த ஆப்பு வைத்த விஜய்! சி.விஜயபாஸ்கரின் திடீர் மூவ்! -
எடப்பாடி பழனிசாமிக்கு நிம்மதி.. IT விசாரணை கோரிய வழக்கை தள்ளுபடி செய்தது சென்னை உயர் நீதிமன்றம் -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் வாங்கியோருக்கு குட் நியூஸ்! பணம் கட்டலயா? ஏலத்திலிருந்து நகை மீட்க ஈஸி வழி -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
"முதலமைச்சருக்கு நன்றி.. ஆனால்! எதிரியின் எதிரி நண்பனா? விஜய் ரசிகர்கள் குறித்து பேசிய அஜித் சகோதரர்












Click it and Unblock the Notifications