அவசரமாக காரை எடுத்த ஜெயக்குமார்.. பின்னாடியே வந்த ஓபிஎஸ்! ஒரே ஒரு வார்த்தையில் சொன்ன பதில்.. போச்சே!
சென்னை: இன்று அதிமுக அலுவலகத்தில் இருந்து ஜெயக்குமார் வெளியேறியதும் பின்னாடியே ஒருங்கிணைப்பாளர் ஓ பன்னீர்செல்வம் வந்தது பெரிய பரபரப்பை ஏற்படுத்தியது.
Recommended Video
பெரும் பரபரப்பிற்கு இடையில் அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நேற்று முதல்நாள் நடந்தது. எதிர்பார்த்தபடியே நேற்று நடந்த கூட்டத்தில் ஒற்றை தலைமை குறித்த விவாதம் எழுந்தது.
நேற்று நடந்த மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் கிட்டத்தட்ட 20 நிர்வாகிகள் ஒற்றை தலைமை குறித்து பேசினார். முதலில் மாதவரம் மூர்த்திதான் ஒற்றை தலைமை பற்றி பேசி இருக்கிறார். அதன்பின் எம்ஆர் விஜயபாஸ்கர், சிவி சண்முகம், குறி கிருஷ்ணமூர்த்தி, திருத்தணி ஹரி, அருள்மொழி தேவர், சி விஜயபாஸ்கர், கோகுல் இந்திரா, வளர்மதி, ராஜன் செல்லப்பா, ஆர்பி உதயகுமார் ஆகியோர் பேசி உள்ளனர்.

இன்று கூட்டம்
இந்த நிலையில் இன்று அதிமுக தீர்மான குழு கூட்டம் அதிமுக அலுவலகத்தில் நடைபெற்றது. இதில் ஜெயக்குமார் கலந்து கொண்டார். இன்னும் பல அதிமுக நிர்வாகிகள் இந்த கூட்டத்தில் கலந்து கொண்டனர். இதில் பேசிய ஜெயக்குமார்.. பொதுக்குழுவில் என்னென்ன விஷயங்களை ஆலோசனை செய்யலாம் என்று விவாதம் செய்தனர். என்னென்ன தீர்மானங்களை நிறைவேற்றலாம் என்பது பற்றி இவர்கள் ஆலோசனை மேற்கொண்டனர்.

ஆலோசனை
இந்த நிலையில் உள்ளே கூட்டம் நடந்து கொண்டு இருக்கும் போதே.. ஓ பன்னீர்செல்வம் அதிமுக அலுவலகம் வர போகிறார் என்ற தகவல் தெரிவிக்கப்பட்டது. கூட்டத்தில் இருந்தவர்களுக்கு இந்த தகவல் உடனடியாக தெரிவிக்கப்பட்டது. இந்த நிலையில் கூட்டம் சரியாக அதே நேரத்தில் முடிந்தது. வெளியே ஓ.பி.எஸ்ஸை வரவேற்க கூட்டம் நிரம்பி வழிந்தது. அந்த கூட்டத்தின் வழியே ஜெயக்குமார் வெளியேறினார்.

ஜெயக்குமார்
1 நிமிடம் மட்டும் இடையில் செய்தியாளர்களை சந்தித்த அவர்.. தீர்மானக்குழு கூட்டம் மீண்டும் 18ம் தேதி தொடர்ந்து நடக்கும். ஓபிஎஸ் வருகிறார் என்று வெளியேறவில்லை. ஓ.பன்னீர் செல்வதால் வருவதால் ஆலோசனை கூட்டத்தை முடித்து கொள்ளவில்லை. அதற்கும் இதற்கும் சம்பந்தம் இல்லை. ஒற்றை தலைமை முறை செயல்பாட்டிற்கு வருமா.. வராதா என்பதை பொறுத்திருந்தான் பார்க்க வேண்டும், என்றார்.

ஓ பன்னீர்செல்வம்
இதையடுத்து ஜெயக்குமார் தனது காரை எடுத்துக்கொண்டு சென்ற சில நிமிடங்களில் அங்கே ஓ பன்னீர்செல்வம் வந்தார். அவர் காரை ஸ்லோ செய்த நிலையில் மைக்கை நீக்கிய செய்தியாளர்கள் ஒற்றை தலைமை வருமா? பொதுக்குழுவில் நல்ல முடிவு கிடைக்குமா என்ற கேள்வி எழுப்பினர். இதற்கு ஒரே ஒரு வார்த்தையில் பதில் அளித்த ஓ. பன்னீர்செல்வம் "கிடைக்கும்" என்றார். ஆனால் தனக்கு ஆதரவாக ஒட்டப்பட்ட போஸ்டர்கள் பற்றி பதில் அளிக்க ஓ பன்னீர்செல்வம் மறுத்துவிட்டார்.

அதிமுக அலுவலகம்
முன்னதாக அதிமுக அலுவலகத்தில் இருந்து ஜெயக்குமாரின் கார் புறப்பட்டதும், அதன் மீது ஓ.பன்னீர் செல்வம் ஆதரவாளர்கள் தாக்குதல் நடத்தினர். அதோடு அவரை ஆபாசமான வார்த்தைகளை சொல்லி மோசமாக திட்டினார்கள். துரோகியே.. *****.. ஏய் காரை நிறுத்து என்று கூறி கடுமையான வார்த்தைக்களால் அவரை திட்டினர்.இதனால் அங்கு பெரிய பரபரப்பு ஏற்பட்டது.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன்












Click it and Unblock the Notifications