விஜயின் அரசியல் வருகை + கொடி.. வந்து விழுந்த கேள்வி.. சட்டென ஒரு வரியில் ரஜினி தந்த ரியாக்சன்!
சென்னை: நடிகர் விஜய் சமீபத்தில் தனது தமிழக வெற்றிக் கழக கொடியை அறிமுகம் செய்தார். நடிகர் விஜயின் தமிழக வெற்றி கழகத்தின் கொடி அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது. இந்த கொடி சிவப்பு மற்றும் மஞ்சள் நிறத்தில் அமைக்கப்பட்டு உள்ளது. இந்த நிலையில் விஜயின் அரசியல் வருகை குறித்து நடிகர் ரஜினிகாந்த் கருத்து தெரிவித்துள்ளார்.
நடிகர் விஜயின் கொடி மேலே, கீழ் சிவப்பு, நடுவில் மஞ்சள் நிறத்தில் அமைக்கப்பட்டு உள்ளது. இந்த கொடியில் இரண்டு பக்கம் யானை வைக்கப்பட்டு உள்ளது. இவை போர் யானைகள் ஆகும். நடுவில் வாகை மலர் வைக்கப்பட்டு உள்ளது. அதை சுற்றி ஸ்டார்கள் வைக்கப்பட்டு உள்ளன. இந்த கொடி முழுக்க முழுக்க தமிழ், தமிழ் தேசியம் ஆகியவற்றை பிரதிபலிக்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளதை பார்க்க முடிகின்றது.

நடிகர் விஜய் தனது கட்சி கொடியை அறிமுகப்படுத்திய சில நாட்களிலே, ஒரு காலத்தில் அரசியலுக்கு வருவதாக சொல்லி, பின்னர் பின்வாங்கிய நடிகர் ரஜினியை அழைத்து அவர் வாயால் முன்னாள் முதல்வர் கருணாநிதி, முதல்வர் ஸ்டாலின் மற்றும் அமைச்சர் உதயநிதி ஸ்டாலினை பாராட்டி திமுக சார்பாக கூட்டம் நடத்தி இருக்கிறார்கள். இதில் ரஜினிகாந்த் பேசிய சில விஷயங்கள் விஜய் தரப்பை பெரிய அளவில் அப்செட்டாக்கி உள்ளது.
சமீபத்தில் அமைச்சர் எ.வ.வேலு எழுதிய 'கலைஞர் எனும் தாய்' புத்தக வெளியீட்டு விழாவில் நடிகர் ரஜினிகாந்த் பேசினார். அதில் மொத்த திமுகவையும், உதயநிதி ஸ்டாலினையும் ரஜினிகாந்த் மிக தீவிரமாக பாராட்டி பேசினார்.
உதயநிதி பாராட்டு: முதல்வர் ஸ்டாலின், அமைச்சர் உதயநிதி ஸ்டாலினை நடிகர் ரஜினிகாந்த் பாராட்டி பேசுகையில், அரசியலுக்கு வந்து கடினமாக உழைத்து தனக்கென பாணியை உருவாக்கி உள்ளார் உதயநிதி ஸ்டாலின். தனக்கொரு நல்ல அரசியல் எதிர்காலம் இருக்கு என்று நிரூபிக்கும் வகையில் உதயநிதி செயல்படுகிறார். பேச்சு, செயலில் தனக்கான பாணியை உருவாக்கியவர் அமைச்சர் உதயநிதி.
என்னுடைய பாசத்துக்குரிய, இப்போது தான் கொஞ்சம் நாள் அரசியலுக்கு வந்து கடினமாக உழைத்து பேச்சில் தனக்கென பாணியை உருவாக்கி கொண்டு மக்கள் மத்தியிலும், தொண்டர்கள் மத்தியிலும் பெயர், புகழ் பெற்று தனக்குள் ஸ்டாலினை வைத்து.. அன்பு தம்பி உதயநிதி ஸ்டாலின் செயல்படுகிறார், என்று பேசினார்.

ரஜினிகாந்த் கருத்து: இந்த நிலையில் விஜயின் அரசியல் வருகை குறித்து நடிகர் ரஜினிகாந்த் கருத்து தெரிவித்துள்ளார். இன்று ஏர்போர்ட் வந்த நடிகர் ரஜினியிடம், செய்தியாளர்கள், விஜய்யின் அரசியல் வருகை, அவரின் தமிழக வெற்றிக் கழகத்தின் கொடி அறிமுகம் பற்றி என்ன நினைக்கிறீர்கள் என்று கேட்டுள்ளனர்.. இதற்கு ரஜினி ஒரே வரியில், அவருக்கு என்னுடைய வாழ்த்துக்கள் என்று கூறி உள்ளார்.
விஜய் ரசிகர்கள் அப்செட்: ஏற்கனவே ரஜினியின் மேடை பேச்சு விஜய் ரசிகர்களை அப்செட்டாக்கி உள்ளது. சரியாக விஜய் அரசியலுக்கு வரும் நேரத்தில்.. திமுகவை பாராட்டியது மட்டுமின்றி.. விஜய்க்கு போட்டியாக பார்க்கப்படும், உதயநிதியை பாராட்டி பேசி உள்ளார். அரசியல் என்பது சாதாரணம் அல்ல.. முக்கியமாக திமுக போன்ற பலமான கட்சியை எதிர்ப்பது சாதாரணம் அல்ல என்று ரஜினி சொல்லாமல் சொல்லி உள்ளார்.
அதோடு ஸ்டாலினின் ஆட்சி சிறப்பாக இருக்கிறது என்றும் சர்டிபிகேட் கொடுத்து.. விஜய் ரசிகர்களை அப்செட்டாகி உள்ளார். ஏற்கனவே விஜய் - ரஜினி மோதல் உள்ள நிலையில்.. ரஜினி ரசிகர்கள் இதனால் விஜய்க்கு எதிராக திமுகவிற்கு ஆதரவாக திரும்பும் சூழல் ஏற்படலாம். மீண்டும் ஒருமுறை விஜய் தந்துள்ள இந்திய வாய்ஸ்.. விஜய்க்கு எதிராக திரும்புமா என்று போக போகத்தான் பார்க்க வேண்டும்.
-
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்!












Click it and Unblock the Notifications