விஜய் மட்டும் தனித்து நின்றால்.. அவ்வளவுதான்.. ஆஹா அப்போ திமுக.. ரஜினி சொன்ன முக்கிய மேட்டர்!
சென்னை: புத்தாண்டு தினத்தில் வாழ்த்துகள் சொல்வதற்காக நடிகர் ரஜினியை சந்தித்தார் ஓபிஎஸ். மரியாதை நிமித்தமான சந்திப்பு என்று ஓபிஎஸ் தரப்பில் சொல்லப்பட்டது. இந்த நிலையில், ரஜினியை சந்தித்து விட்டு வந்த ஓபிஎஸ்சை, அவரது ஆதரவு சீனியர்கள் பலர் சந்தித்தனர். வாழ்த்துகளை பகிர்ந்து கொண்டுள்ளார்கள். அப்போது ரஜினி சந்திப்பு பற்றி பேச்சு வந்துள்ளது. அதனை பகிர்ந்துகொண்ட ஓபிஎஸ், திமுக அதிமுக அரசியல் நிலவரம் பற்றி ரஜினி ஆர்வமுடன் கேட்டார்.
நானும் நடந்து கொண்டிருப்பதைச் சொன்னேன். திமுகவுக்கு எதிராக பல விசயங்களைச் சொன்ன ரஜினி, பொது வெளியில் அதிருப்திகள் இருப்பதை ஸ்டாலின் சாருக்கு சொல்லப்படுகிறதா? இல்லையா?ன்னே தெரியலை. விஜய் அரசியலுக்கு வருவது தேர்தலில் யாருக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என கேட்டார். எல்லா கட்சிகளுக்குமே பாதிப்பு வரும்னு சொன்னேன். விஜய் தனிச்சி போட்டியிட்டா, திமுக மீண்டும் ஜெயிக்க வாய்ப்பு இருக்குன்னு ரஜினியின் எண்ணமாக இருக்கிறது என்று சந்திப்பு பற்றி தனது ஆதரவாளர்களிடம் ஓபிஎஸ் பகிர்ந்து கொண்டிருக்கிறார். ஏனெனில் எதிர்ப்பு ஓட்டுக்கள், அதிமுக, பாஜக, விஜய் என பிரியும் என்பதால் திமுக ஈஸியாக வென்றுவிடும் என்பது அவரது கணிப்பாம்.

ரஜினி புறக்கணிப்பு:
முன்னதாக திருவள்ளுவர் சிலைக்கும்.. விவேகானந்தர் சிலைக்கும் இடையே அமைக்கப்பட்ட கண்ணாடி பாலம் திறப்பு விழா நிகழ்ச்சியைப் நடிகர் ரஜினிகாந்த புறக்கணித்த சம்பவம் விவாதத்தை ஏற்படுத்தி உள்ளது.
சமீபத்தில் நடந்த அய்யன் திருவள்ளுவருக்கு குமரியில் சிலை அமைக்கப்பட்டு 25 ஆண்டுகள் நிறைவு பெறும் வெள்ளி விழா நிகழ்வை கொண்டாடும் வகையில், திருவள்ளுவர் சிலைக்கும் விவேகானந்தர் பாறைக்கும் இடையே கண்ணாடி இழை பாலத்தை திறந்து வைக்கப்படும் நிகழ்வு மிக முக்கியமானது.
உணர்வு பூர்வமான இந்த நிகழ்வில் கண்ணாடி இழை பாலத்தை திறந்து வைத்தார் முதல்வர் ஸ்டாலின். இந்த நெகிழ்ச்சியான விழாவில் தமிழக அமைச்சர்கள், எம்.பிக்கள், எம்.எல்.ஏ.க்கள், அரசு அதிகாரிகள், வி.ஐ.பி.க்கள் பலரும் கலந்து கொண்டனர்.
ரஜினிகாந்த் திருவள்ளுவர் சிலை அழைப்பு:
இதனையடுத்து, ரஜினியிடம் அரசு தரப்பில் பேச, அவரும் ஓ.கே. தெரிவித்திருக்கிறார். இதனைத் தொடர்ந்து, விழாவிற்காக சென்னையில் இருந்து அமைச்சர்கள் பலருக்கும் ப்ளைட் டிக்கெட் புக் பண்ணிய அரசு அதிகாரிகள், ரஜினிக்கும் அவரது மகள் ஐஸ்வர்யாவிற்கும் என 2 டிக்கெட்டுகள் பதிவு செய்தனர். அந்த டிக்கெட்டுகள் ரஜினிக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
இந்த நிலையில், விழாவில் கலந்து கொள்வதற்காக சென்னையில் இருந்து அமைச்சர்கள் நேற்று ப்ளைட் ஏறினார்கள். அவர்கள் பயணிக்கும் விமானத்தில் ரஜினிக்கும் அவரது மகளுக்கும் டிக்கெட் போடப்பட்டிருப்பதை அறிந்திருந்த அமைச்சர்கள், ரஜினியின் வருகையை எதிர்பார்த்தனர்.
ஆனால், விமானம் புறப்படும் நேரம் வரை ஏர்போர்ட்டுக்கு ரஜினி வரவில்லை. அவரது மகளும் வரவில்லை. இதனால், ஏன் வரவில்லை? என்கிற குழப்பத்திலேயே இருந்திருக்கிறார்கள் அமைச்சர்கள். இதற்கிடையே, 'கடைசி நேரத்தில் தவிர்க்க இயலாத காரணத்தால் வர முடியவில்லை ' என ரஜினி சொன்ன தகவலை முதல்வர் ஸ்டாலினுக்குத் தெரியப்படுத்தப்பட்டதாம். அவரும், ஓ.கே. என இயல்பாக சொல்லிவிட்டாராம்.
திருவள்ளுவர் சிலை நிறுவப்பட்டு 25-ஆம் ஆண்டின் வெள்ளி விழா நிகழ்வில் ரஜினிகாந்த் இருக்க வேண்டும் என முதல்வர் தரப்பில் விரும்பப்பட்டு, ரஜினியும் வருவதாகக் கூறிய நிலையில்தான் டிக்கெட்டே புக் பண்ணப்பட்டது. அப்படியிருந்தும் அவர் வரவில்லை என்பதில் அரசு தரப்பு அப்-செட் தான் என்கிறார்கள் விபரமறிந்தவர்கள். கடைசி நேரத்தில் அவர் பயணத்தை தவிர்த்திருப்பது, 'விழாவை ரஜினி புறக்கணித்து விட்டார் ' என்கிற ரீதியல் அரசு தரப்பில் பரவியது.
ரஜினியின் இந்த புறக்கணிப்புக்கு நிஜ காரணம் என்னவென்பது தெரியவில்லை. திருவள்ளுவர் சிலை தொடர்பாக, சில சென்டிமெண்ட் விவகாரம் அவருக்குச் சொல்லப்பட்டதால் புறக்கணிப்பு முடிவை எடுத்திருக்கலாம், இவரது பயணத்தைக் கேள்விப்பட்டு பாஜக தரப்பில் போக வேண்டாம் என சொல்லியிருக்கலாம் என வெவ்வேறு காரணங்கள் சொல்லப்படுகின்றன.












Click it and Unblock the Notifications