ஜெயலலிதாவிற்கு சிகிச்சையளிக்க வந்த ரிச்சர்ட் பீலே வாங்கிய மது ரேட் தெரியுமா? ஆணைய அறிக்கையில் தகவல்
சென்னை: முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு சிகிச்சை அளிக்க இந்தியா வந்த லண்டன் மருத்துவர் ரிச்சர்டு ஜான் பீலே எத்தனை ரூபாய்க்கு மதுபானம் வாங்கினார் என்பது குறித்து ஆறுமுகசாமி ஆணைய அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மரணம் குறித்த அறிக்கை நேற்றைய தினம் தமிழக சட்டசபை கூட்டத் தொடரில் வெளியானது. அந்த அறிக்கையில் ஜெயலலிிதா குறித்த முன்னுரை முதல் முடிவுரை வரை அனைத்தும் கொடுக்கப்பட்டுள்ளது.
ஜெயலலிதா அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டது முதல் இவர் இறப்பு வரை நடந்தது என்ன என்பது குறித்து விளக்கப்பட்டுள்ளது. மேலும் லண்டனில் இருந்து வந்த டாக்டர் ஜான் ரிச்சர்டு பீலே, எலிசபெத் மருத்துவமனையில் இருந்து வந்த பிசியோதெரபிஸ்டுகள் உள்ளிட்டோருக்கு எவ்வளவு கட்டணம் செலுத்தப்பட்டது என்பது குறித்து ஆணையம் அப்பல்லோ மருத்துவமனை ரசீது நகலுடன் இணைத்துள்ளது.

ஜான் பீலே
அதாவது ஜான் பீலே கடந்த 2016 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 23 ஆம் தேதி சென்னையில் அப்பல்லோவில் இருந்த ஜெயலலிதாவுக்கு சிகிச்சை அளிக்க வந்திருந்தார். அப்போது அவர் நுங்கம்பாக்கத்தில் உள்ள தாஜ் கோரமண்டலில் தங்கியிருந்த போது அங்குள்ள சதர்ன் ஸ்பைஸ் எனும் ரெஸ்டாரன்டில் ரூ 3400 க்கு எதோ உணவோ அல்லது ஜூஸையோ வாங்கியுள்ளார்.

மதுபானம் ஆர்டர்
அது போல் மதுபானத்தை ஆர்டர் செய்துள்ளார். அதன் விலை 1,732 ரூபாய் ஆகும். இதற்கு சேவை வரி 179 ரூபாய் ஆகும். வாட் வரி ரூ 1732 ஆகும். அது போல் சிப்ஸ்டெட் எனும் பாரில் 1554 ரூபாய்க்கு மதுபானத்தை ஆர்டர் செய்துள்ளார். இதற்கு வாட் வரியே 900 ரூபாய் ஆகும். அது போல் ஸ்பாவில் 3500 ரூபாய் செலவிடப்பட்டுள்ளது. ஆனிஸ் எனும் ரெஸ்டாரன்டில் 2511 ரூபாய்க்கு உணவு உண்டுள்ளார்.

ஒரு நாள் மட்டும்
அந்த ஒரு நாள் மட்டும் டாக்டர் பீலேவுக்கு மட்டும் உணவு, மது, ஸ்பா உள்ளிட்டவைக்கு ரூ 39,530 ஆகும். அது போல் அதே ஆண்டு அதே மாதம் 15 ஆம் தேதி பேக்கேஜ் சார்ஜ் என ரூ 9,600 செலவிடப்பட்டுள்ளது. மேலும் 14 ஆம் தேதி கோல்டன் டிராகனில் மதுபானம் ரூ 4,025 க்கு வாங்கியுள்ளார். இதற்கு வரி மட்டுமே 2,334 ஆகும். இதே பாரில் ரூ 3,350 க்கு மதுபானம் வாங்கியுள்ளார். இதற்கு வாட் வரி 396 ரூபாய் ஆகும். சதர்ன் ஸ்பைஸில் உணவு மட்டும் ரூ 7,725 க்கு உட்கொண்டுள்ளார்.

எத்தனை ரூபாய்
அது போல் 2016, அக்டோபர் 6, 7 ஆம் தேதியும் சதர்ன் ஸ்பைஸில் மதுபானம் மட்டும் 1800+1554+3,963+670 என 7987 ரூபாய் ஆகும். அது போல் இதற்கு வரி மட்டும் 315+ 901+ 2298+ 389 = 3903 ரூபாயாகும். ஆக மொத்தம் டாக்டர் பீலே சென்னையில் தங்கியிருந்த அக்டோபர் 6,7, 15, 23 ஆகிய 4 நாட்களில் மட்டும் மதுபானம் மற்றும் வரிகளுக்காக ரூ31492 செலவிடப்பட்டுள்ளது.
-
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை!












Click it and Unblock the Notifications