இரண்டுக்கும் நீங்க ஆசைப்பட கூடாது! செந்தில் பாலாஜி ஜாமீன்! அமலாக்கத்துறைக்கு குட்டு வைத்த நீதிபதிகள்
சென்னை: 471 நாட்களுக்கு பிறகு மாஜி அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு ஜாமீன் வழங்கப்பட்டு உள்ளது. கிட்டத்தட்ட 15 மாதங்கள் தொடர்ந்து அவர் சிறையில் இருந்த நிலையில் தற்போது விடுதலை செய்யப்பட்டு உள்ளார். அவர் இன்று அல்லது நாளை வெளியே வருவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அவருக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கப்பட்டு உள்ளது.
நீதிபதி ஓகா, இன்று தீர்ப்பை அறிவிக்கும் போது, அமலாக்கத்துறையை கடுமையாக கண்டித்தார். அவர்கள் செய்த சில செயல்களை கடுமையாக விமர்சனம் செய்தார். அதில்., கடுமையான ஜாமீன் விதிகள் மற்றும் விசாரணையில் தாமதம் ஆகியவற்றை ஒன்றாக பயன்படுத்த முடியாது. ஜாமீனும் கொடுக்க முடியாது.. விசாரணையும் தாமதம் செய்வோம் என்று சொல்வது சரியாக இருக்காது . இரண்டிற்கும் நீங்கள் ஆசைப்பட முடியாது.

நாங்கள் நஜீப் என்பவற்றின் வழக்கில் வழங்கப்பட்ட தீர்ப்பு மற்றும் சிலரின் பிற தீர்ப்புகளை இங்கே குறிப்பிட்டுள்ளோம். ஒருவருக்கு ஜாமீன் கொடுக்க மறுக்கிறீர்கள்.. அதை எதிர்க்கிறீர்கள்.. அதே சமயம் விசாரணையையும் நடத்தாமல் காலம் தாழ்த்துகிறீர்கள். இதை எல்லாம் கருத்திக்கொண்டு.. நாங்கள் நஜீப் வழக்கில் அளித்த தீர்ப்பின் அடிப்படையில்.. ஜாமீன் வழங்கி உள்ளோம், ஆனால் மிகவும் கடுமையான நிபந்தனைகள் உள்ளன.
வழக்கு கடந்து வந்த பாதை: கடந்த மாதம் இந்த வழக்கில் உத்தரவு ஒத்திவைக்கப்பட்ட நிலையில்.. இன்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கி உள்ளது உச்சநீதிமன்ற நீதிபதி அபய் எஸ்.ஓஹா தலைமையிலான அமர்வில் செந்தில் பாலாஜி மனுவை விசாரணை செய்த நிலையில் ஜாமீன் வழங்கி உள்ளது.
இந்த வழக்கில் ஜாமீன் கோரி அவர் கடந்த சில மாதங்களுக்கு முன் சுப்ரீம் கோர்ட்டிற்கு சென்று முறையிட்டார். அவர் அமைச்சர் பதவியை ராஜினாமா செய்துவிட்ட நிலையில், அவருக்கு ஜாமீன் கிடைக்க வாய்ப்பு இருப்பதாக கூறப்பட்டது. அவரது ஜாமீன் மனு சில நாட்களுக்கு முன் சுப்ரீம் கோர்ட்டில் விசாரணைக்கு வந்தது. 12 முறை இந்த வழக்கில் வாதங்கள் ஒத்திவைக்கப்பட்டது. உச்சநீதிமன்ற நீதிபதி அபய் எஸ்.ஓஹா தலைமையிலான அமர்வு இந்த நிலையில் இன்று செந்தில் பாலாஜிக்கு ஜாமீன் வழங்கி உள்ளது.
முதலில் அமலாக்கத்துறை இதில் மிகவும் தாமதமாக ஆவணங்களை கொடுத்தது. உதாரணமாக கடந்த மே 6ம் தேதி விசாரணையின் போது அமலாக்த்துறை வேண்டும் என்றே வழக்கை தாமதப்படுதுகிறது என்று செந்தில் பாலாஜி தரப்பு வாதிட்டது. அன்று வழக்கு விசாரணைக்கு வரும் நிலையில் அன்றுதான் அமலாக்கத்துறை பதில் மனு தாக்கல் செய்தது. அமலாகக்துறை தாக்கல் செய்த பதில் மனுவில், செந்தில் பாலாஜி ஜாமின் கோரி தாக்கல் செய்த மேல் முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும் என்று கோரப்பட்டுள்ளது. அமலாக்கத்துறை பதில் மனுவில் கூறியிருப்பதாவது: அமைச்சர் பதவியை ராஜினாமா செய்த பிறகும், எம்எல்ஏ பொறுப்பில் உள்ளதால் influential person-ஆக உள்ளார்; வழக்கு தொடர்புடைய சாட்சியங்களை அழிக்க வாய்ப்புள்ளதால் செந்தில்பாலாஜிக்கு ஜாமின் வழங்கக்கூடாது., விசாரணையின்போது செந்தில்பாலாஜி உரிய ஒத்துழைப்பை வழங்கவில்லை, என்று கூறியது.
நீங்கள் வழக்கை தாமதம் செய்கிறீர்கள். இடைப்பட்ட காலத்தில் பெயிலும் கொடுக்க கூடாது என்று சொல்கிறீர்கள். இரண்டையும் ஒன்றாக எப்படி பயன்படுத்த முடியும்? என்று நீதிபதிகள் குறிப்பிட்டு உள்ளனர் . .












Click it and Unblock the Notifications