சல்லி சல்லியாக நொறுங்கும்.. எடப்பாடி காதுக்கு போன மெசேஜ்.. செங்கோட்டையன் கேம் ஸ்டார்ட்.. என்னாச்சு?

Subscribe to Oneindia Tamil

சென்னை: செங்கோட்டையன் அதிமுகவில் திடீரென கலகம் செய்ய தொடங்கி இருப்பது எடப்பாடி பழனிச்சாமி தரப்பிற்கு அதிர்ச்சியை கொடுத்துள்ளது. இது தொடர்பாக எடப்பாடி பழனிசாமிக்கு நெருக்கமான, நட்பான சில சீனியர்கள் முக்கியமான மெசேஜ் ஒன்றை கொடுத்துள்ளாராம்.

அத்திக்கடவு - அவினாசி திட்டத்திற்காக எடப்பாடி பழனிச்சாமிக்கு விவசாயிகள் எடுத்த பாராட்டு விழாவில் மூத்த தலைவர்களில் ஒருவரான செங்கோட்டையன் கலந்து கொள்ளவில்லை. விழாவை அவர் புறக்கணித்தது சர்ச்சையாகியிருக்கிறது.

Edappadi Palaniswami Sengottaiyan

உள் கட்சி பூசல் தான் காரணம் என சொல்லப்பட்டது. அதற்கேற்ப, எம்ஜிஆர், ஜெயலலிதா படங்கள் வைக்கப்படாததால் செல்லவில்லை என செங்கோட்டையன் சொல்கிறார். அத்திக்கடவு - அவிநாசி திட்டம் தொடர்பாக எடப்பாடி பழனிசாமிக்கு நடந்த பாராட்டு விழாவில் எம்.ஜி.ஆர், ஜெயலலிதாவின் புகைப்படம் இல்லாததால் அந்த விழாவை புறக்கணித்ததாக அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் விளக்கம் அளித்துள்ளார். நாங்கள் எம்.ஜி.ஆர், ஜெயலலிதாவால் அடையாளம் காணப்பட்டவர்கள். எங்களை வளர்த்து ஆளாக்கிய தலைவர்களின் படங்கள் விழாவில் இல்லை. அதனால் அந்த கூட்டத்திற்கு நான் செல்லவில்லை என்று கூறி உள்ளார்.

உண்மையில் என்ன நடந்தது?:

உண்மையான காரணம் அது கிடையாது என்கின்றனர் அதிமுகவினர். நம்மிடம் பேசிய சீனியர் ஒருவர், "2026-ல் அதிமுக ஆட்சியைப் பிடிக்க வேண்டுமானால் கட்சியில் ஒற்றுமை இருக்க வேண்டும். பிரிந்தவர்கள், நீக்கப்பட்டவர்கள் கட்சியில் மீண்டும் சேர்க்கப்பட வேண்டும் என்பதை தொடர்ச்சியாக வலியுறுத்தி வருகிறார் செங்கோட்டையன். கடந்த 1 வருடமாக சசிகலாவுடம் நெருங்கிய தொடர்பில் இருந்து வருகிறார். சசிகலாவின் எண்ணத்தை பிரதிப்பலிப்பதைப் போலவே செங்கோட்டையனின் சமீபகால நடவடிக்கைகள் இருக்கின்றன.

செங்கோட்டையன் கொங்கு மண்டலம். அதே எடப்பாடியின் அதே ஜாதி பின்புலத்தை சேர்ந்தவர். செங்கோட்டையனுக்கு எடப்பாடியை விட அவர் ஜாதி பின்புலத்தில் அதிக பவர் உள்ளது. செங்கோட்டையன் சீனியர் என்பதால்.. அவருக்கு உட்கட்சி சப்போர்ட் அதிகம் இருக்கும்.

எடப்பாடிக்கு போன எச்சரிக்கை:

செங்கோட்டையன் அதிமுகவில் திடீரென கலகம் செய்ய தொடங்கி இருப்பது எடப்பாடி பழனிச்சாமி தரப்பிற்கு அதிர்ச்சியை கொடுத்துள்ளது. இது தொடர்பாக எடப்பாடி பழனிசாமிக்கு நெருக்கமான, நட்பான சில சீனியர்கள் முக்கியமான மெசேஜ் ஒன்றை கொடுத்துள்ளாராம்.

அதன்படி செங்கோட்டையனை ஓ பன்னீர்செல்வத்தை போல எளிதாக எதிர்கொள்ள முடியாது. இது ரொம்ப சவாலான விஷயம். கவனமாகவே எதிர்கொள்ள வேண்டும். இது போக செங்கோட்டையன் ஜெயலலிதா காலத்திலேயே அரசியல் செய்தவர். அவருக்கு கட்சி அரசியல், நிர்வாக பிரச்சனை, ஜாதி பார்முலாக்களை எதிர்கொள்ள தெரியும்.

இதெல்லாம் போக செங்கோட்டையன் எதிர்ப்பு அலை போல மற்ற சீனியர்கள் எதிர்ப்பை பதிவு செய்ய காரணமாக அமையும். செங்கோட்டையன் டெல்லி சப்போர்ட்டை பெறலாம். ஏனென்றால் எடப்பாடி பாஜகவுடன் நெருக்கமாக இல்லை. ஆனால் செங்கோட்டையன் இறங்கி போகலாம். செங்கோட்டையன் கொங்கு மண்டலம். அதே எடப்பாடியின் அதே ஜாதி பின்புலத்தை சேர்ந்தவர் என்பதால் பாஜக இவர் பக்கம் செல்லவும் தயாராக இருக்கும்.

செங்கோட்டையன் செயலை கவனமாக பார்க்க வேண்டும். முக்கியமாக ஒரு வருடத்தில் தேர்தலை வைத்துக்கொண்டு இந்த பிரச்னையை எதிர்கொண்டால் வாக்குகள் சல்லி சல்லியாக நொறுங்கிடும். அதற்கு நாம் இடம் கொடுக்க கூடாது என்று, எடப்பாடி பழனிசாமியை அவருக்கு நெருக்கமானவர்கள் எச்சரித்து உள்ளனராம்.

செங்கோட்டையன் பேச்சு

நேற்று அதிமுக விழாவில் பேசிய எடப்பாடி பழனிசாமி, தடுக்கி விழுந்தால் தமிழ்நாட்டில் யார் எந்த ஊரில் உள்ளார்கள் என எனக்கு தெரியும். எம்.ஜி.ஆருக்கு வந்த சோதனை யாருக்கும் வந்திருக்காது. எதிர்கட்சித் தலைவரின் கட்டளையில் தான் இந்த கூட்டம் நடைபெறுகிறது.

எத்தனையோ வாய்ப்புகள் வந்த போது கட்சிக்காக பாடுபட்டவன். என்னை சோதிக்காதீர்கள். இதுதான் எனது வேண்டுகோள். நான் தெளிவாக இருக்கிறேன். என்னை யாரும் சிக்க வைக்க முடியாது. நான் எத்தனை ஆண்டுகளில் அரசியல் உள்ளேன், எண்ணற்ற தலைவர்களை பார்த்துள்ளேன். எம்.ஜி.ஆர் ஜெயலலிதா ஆகியோர் காட்டிய பாதையில் நான் சென்று கொண்டுள்ளேன். செய்தியாளர்கள் என்னிடம் எதவாது கிடைக்குமா என எதிர்பார்க்கின்றனர். காலையில் சொன்னதை இப்போதும் சொல்கிறேன், நீங்கள் எதிர்பார்க்கும் எதுவும் சொல்ல மாட்டேன், என்று செங்கோட்டையன் பேசியதும் கவனம் பெற்று வருகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+