பக்கத்துல இருக்குற எம்எல்ஏ சண்டை போடுறாங்க! அன்னபூர்ணா ஓனர் சொன்னதும்.. நெளிந்த வானதி! என்ன நடந்தது?

Subscribe to Oneindia Tamil

சென்னை: ஜிஎஸ்டியை கணக்கு போட முடியாமல்.. கணினியே திணறது. ஜிஎஸ்டி அலுவலர்கள் குழப்புகிறார்கள். எல்லாவற்றிற்கும் ஒரே இன்புட்தான். ஒரே கிட்சன்தான். ஆனால் வேறு வேறு ஜிஎஸ்டி. அதிகாரிகள் குழப்புகிறார்கள். அவர்களால் கூட கணக்கு எடுக்க முடியவில்லை என்று, என்று அன்னப்பூர்ணா குழும தலைவர் சீனிவாசன் தெரிவித்துள்ளார். கோவையில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தொழில் அமைப்பினருடன் நடத்திய ஆலோசனை கூட்டத்தில் அன்னப்பூர்ணா குழும தலைவர் சீனிவாசன் கடுமையான புகார்களை வைத்துள்ளார்.

கோவையில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தொழில் அமைப்பினருடன் ஆலோசனை செய்தார். கொடிசியாவில் இந்த ஆலோசனை கூட்டம் நடந்தது. அன்னப்பூர்ணா குழும தலைவர் சீனிவாசன் நேற்று கோவையில் நடந்த ஆலோசனை கூட்டத்தில் கலந்து கொண்டார். ஜிஎஸ்டி தொடங்கி பல்வேறு நிதி விவகாரங்கள் குறித்து ஆலோசனை செய்யப்பட்டது. இதில் அன்னப்பூர்ணா குழும தலைவர் சீனிவாசன் கேட்ட கேள்விகள் நாடு முழுக்க கவனம் பெற்றுள்ளது.

nirmala sitharaman gst

அன்னப்பூர்ணா குழும தலைவர் சீனிவாசன் பேசிய விஷயங்கள் நாடு முழுக்க விவாதத்தை ஏற்படுத்தி உள்ளது. அவர் நிர்மலா சிதாராமனிடம் நேற்று கேள்வி கேட்கையில், எங்களுக்கு ஒரே ஒரு பிரச்சனைதான்.. உங்க பக்கத்தில் உள்ள எம்எல்ஏ வானதி சீனிவாசன் ரெகுலர் அன்னபூர்ணா கஸ்டமர். அவங்க வரும்போதெல்லாம் சண்டை போடுறாங்க. எங்கள் ஜிஎஸ்டி பில்லை பார்த்து சண்டை போடுறாங்க. அந்த அம்மா கடைக்கு வந்தால்.. பில்லை பார்த்து கேட்பாங்க. ஸ்வீட்டுக்கு 5 சதவிகிதம் ஜிஎஸ்டி உள்ளது. அதற்கு இன்புட் உள்ளது. உணவிற்கு 5 சதவிகிதம் ஜிஎஸ்டி. அதற்கு இன்புட் கிடையாது. காரத்திற்கு 5 சதவிகிதம் ஜிஎஸ்டி உள்ளது. பேக்கரியில் பிரெட், பன் தவிர எல்லாவற்றிற்கும் 28 % வரி உள்ளது.

இந்த அம்மா வருவாங்க.. ஜிலேபி சாப்பிடுவாங்க.. ( வானதி சீனிவாசன் சிரித்தபடி நெளிகிறார்) .காரம் சாப்பிடுவாங்க.. அதன்பின் காபி சாப்பிடுவாங்க. எல்லாவற்றிற்கும் வேறு வேறு ஜிஎஸ்டி. ஸ்வீட்டிற்கு 5 சதவிகிதம் ஜிஎஸ்டி. காரத்திற்கு 12 சதவிகிதம் வரி என்றால் சண்டை போடுவாங்க. ஒரே பில்லில்.. ஒரு குடும்பத்திற்கு வேறு வேறு ஜிஎஸ்டி போட முடியவில்லை. ஒரே பில்லில் வேறு வேறு பொருட்களுக்கு வேறு வேறு ஜிஎஸ்டி போட மிஷின் திணறுகிறது. இதை பார்த்து கஸ்டமர்கள் சண்டைக்கு வருகிறார்கள். பன்னுக்கு ஒரு ஜிஎஸ்டி.. உள்ளே இருக்கும் கிரீமிற்கு ஒரு ஜிஎஸ்டி வைத்துள்ளனர். கஸ்டமர்கள்.. நீ பன்னு கொடு.. நானே கிரீமை வைத்துக்கொள்கிறேன் என்கிறார்கள்.

குறைத்தால் எல்லாவற்றிக்கும் குறையுங்கள்.. இல்லை எல்லாவற்றிற்கும் அதிகரியுங்கள். வடநாட்டில் அதிகம் சுவீட் சாப்பிடுகிறார்கள்.. அதனால்தான் அங்கே இணைப்பிற்கு ஜிஎஸ்டி கம்மி.. காரம் சாப்பிடுவதில்லை. அதனால் அதற்கு ஜிஎஸ்டி அதிகம் என்று உங்கள் எம்எல்ஏ வானதி சீனிவாசன்தான் கூறுகிறார். அப்படியா? நான் அப்படி எல்லாம் இல்லை என்றேன். தயவு செய்து அதை கொஞ்சம் ஆலோசனை செய்யுங்கள். ஒரே மாதிரி வரி போடுங்கள்.

கணினியே திணறது. ஜிஎஸ்டி அலுவலர்கள் குழம்புகிறார்கள். எல்லாவற்றிற்கும் ஒரே இன்புட்தான். ஒரே கிட்சன்தான். ஆனால் வேறு வேறு ஜிஎஸ்டி. அதிகாரிகள் குழம்புகிறார்கள். அவர்களால் கூட கணக்கு எடுக்க முடியவில்லை, என்று அன்னப்பூர்ணா குழும தலைவர் சீனிவாசன் தெரிவித்துள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+