பாஜகவுடன் கூட்டணி என்பது தற்கொலைக்கு சமம்.. அது வேற டிடிவி.. பாஜகவிற்கு அணில்... இதுவேற டிடிவி
சென்னை: பாஜக உடன் கடந்த 2019ம் ஆண்டு லோக்சபா தேர்தலில் அதிமுக கூட்டணி வைத்த போது, இந்த கூட்டணி தற்கொலைக்கு சமம் என்று விமர்சித்த அமமுக பொதுச்செயலாளர டிடிவி தினகரன் இன்று எதற்காக பாஜக உடன் கூட்டணி அமைத்துள்ளார் என்று சில நெட்டிசன்கள் கேள்வி எழுப்பி உள்ளனர்.
2019ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலின் போது அதிமுக கூட்டணியில், பாஜக, பாமக, தேமுதிக, தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி, புதிய தமிழகம் கட்சி, புதிய நீதிக் கட்சி, என் ஆர் காங்கிரஸ் கட்சி போன்றவை இணைந்திருந்தன. இதில் அதிமுக 20 தொகுதிகளிலும், பாமகவுக்கு 7 தொகுதிகளும், தேமுதிகவுக்கு 4 தொகுதிகளும், பாஜகவுக்கு 5 தொகுதிகளும், மற்றக்கட்சிகளுக்கு தலா 1 தொகுதிகளும் அன்று போட்டியிட்டன.

அப்போது சேலத்தில் நடந்த செய்தியாளர் சந்திப்பில் பேசிய டிடிவி தினகரன், பாஜக உடன் அதிமுக கூட்டணி வைத்திருப்பது தற்கொலைக்கு சமம் என்றார். மேலும் அதிமுக உள்பட பல்வேறு கட்சிகள், இடுப்பில் கல்லுடன் கயிற்றையும் கற்றி கிணற்றில் இறங்கி உள்ளார்கள் என்றும் விமர்சித்திருந்தார்.. அம்மா உயிருடன் இருந்தால் சிறைச்சாலையில் இருந்திருப்பார் என்றும் குற்றவாளி என்றும் சொன்ன ஒரு கட்சியுடன் கூட்டணி சேர்வது ஏன் என்றும் டிடிவி தினகரன் அன்று கேள்வி எழுப்பி இருந்தார்.
அதேபோல் அப்போதே இன்னொரு முறை செய்தியாளர்களிடம் பேசும் போது, பாஜகவுடன் கூட்டணி குறித்த கேள்விக்கு தற்கொலை செய்து கொள்ள நாங்கள் கிணற்றில் இறங்க போவோமா நாங்கள் என்று பேசினார். மேலும் டெல்லியில் வேண்டுமானால் ஆளும் கட்சியாக இருக்கலாம்,. ஆனால தமிழ்நாட்டில் நோட்டா உடன் போட்டி போடும் கட்சியுடன் ஏன் கூட்டணி வைக்க வேண்டும் என்று டிடிவி தினகரன் முன்பு கேள்வி எழுப்பி இருந்தார்.
பாஜகவுடன் கூட்டணி தற்கொலைக்கு சமம் என கூவிய தினகரனை் திகார் ஜெயில் பயம் அவரை எப்படி மாற்றியுள்ளது பாருங்கள் மக்கள் செல்வரின் பரிதாபத்தை! வேனாம் அழுதுடுவேன் என்கிறார்! வாழ்க சுகேஷ் சந்திரசேகர். pic.twitter.com/7N0PkPCjbg
— Damodharan Prakash (@sathrak1967) March 12, 2024
ஆனால் டிடிவி தினகரனின் அமமுக கட்சி பாஜக கூட்டணியில் இணைந்ததுடன், பாஜகவின் வெற்றிக்கு அணிலை போல் உதவியாக இருப்போம் என்று இப்போது கூறியுள்ளார். நேற்று முன்தினம் திருச்சியில் பாஜக கூட்டணி குறித்து ஆலோசனை நடத்திய பின் செய்தியாளர்களைச் சந்தித்த டிடிவி தினகரன், "அமமுக - பாஜக கூட்டணி உறுதி. பாரதிய ஜனதா அக்கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை மற்றும் டெல்லி மேலிட பிரதிநிதி கிஷன் ரெட்டியும் என்னிடம் இன்று தொலைபேசியில் பேசினார்கள். அவர்களிடம் பாஜக கூட்டணிக்கு அமமுகவின் நிபந்தனையற்ற ஆதரவை அளித்தேன.
அமமுகவின் கோரிக்கைகளை ஏற்கெனவே கடிதம் மூலமாக பாஜகவிடம் கொடுத்துள்ளோம். பாஜக மூன்றாவது முறையாக மீண்டும் ஆட்சியமைக்கும். நரேந்திர மோடியே பாரதத்தில் மீண்டும் ஆட்சியமைப்பார். பாஜகவுக்கு நிபந்தனையற்ற ஆதரவை தெரிவித்திருக்கிறோம். கடந்த 6 மாதங்களாக எங்களிடம் பாஜக பேசிக்கொண்டிருக்கிறது. அதில் கடந்த மூன்று மாதங்களாக கூட்டணி குறித்து தொடர்ந்து பேசிக்கொண்டுதான் இருந்தோம்.
எங்களின் தேவை என்னவென்பது பாஜகவுக்கு தெரியும். உரிய நேரத்தில் தெரிவிக்கப்படும். எந்தவித நிர்பந்தமும் எங்களுக்கு கிடையாது. தாமரை சின்னத்தில் நிற்க வேண்டும் என்ற பாஜக நிர்பந்திக்கவில்லை. எங்களுக்கென தனிச் சின்னம் (குக்கர்) உள்ளது. தமிழகத்துக்கு எதிரான திட்டங்களை அமல்படுத்தும் நிலை நீடித்தால், பாஜகவுடன் கூட்டணி சேர மாட்டேன் என்று தான் நான் முன்பு கூறினேன். தற்போது தமிழகத்தை பாதிக்கும் எந்த திட்டங்களையும் பாஜக அமல்படுத்தவில்லை. வருங்காலத்தில் தமிழகம் முன்னேறுவதற்கு உதவுவதாக பிரதமர் மோடி உத்தரவாதம் அளித்துள்ளார். எனவே, எந்தவித உறுத்தலும் இல்லாமல் பாஜகவுடன் கூட்டணி சேர்கிறோம்.
1999 லோக்சபா தேர்தலில் பாஜகவுடன் கூட்டணி போக மாட்டோம் என்றார் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா. அவரே, 2004 தேர்தலில் பாஜகவுடன் கூட்டணி அமைத்தார். அவரை போலவே, இந்தக் காலகட்டத்தில் தமிழகத்துக்கு என்ன தேவையோ அந்த அடிப்படையில் அமமுக பாஜகவுடன் கூட்டணி அமைத்திருக்கிறது.
ஆர்.கே.நகர் தேர்தலின் போது என்னை சரியாக புரிந்துகொள்ளாததால் என்னை பாஜக எதிர்த்தது. தற்போது என்னைப் பற்றி புரிந்துகொண்டிருக்கலாம். 2021 தேர்தலிலேயே பாஜக கூட்டணியில் இணைவதற்கான வாய்ப்பு இருந்தது. அது சரிவரவில்லை என்பதால் அப்போது நாங்கள் தனியாக நின்றோம். தற்போது பாஜக எங்களுடன் நட்பு பாராட்டி வருகிறது. வருங்காலத்தில் நாங்களும் அவர்களுடன் நட்புடன் பயணிக்க விரும்புகிறோம். அதனால் கூட்டணி அமைத்திருக்கிறோம்” என்றார்.. டிடிவி தினகரனனின் இரண்டு பேட்டியையும் ஒன்றாக இணைந்து திமுக கூட்டணி கட்சியினர் சமூக வலைதளங்களில் வெளியிட்டு வருகிறார்கள்.. அந்த வீடியோ வேகமாக பரவி வருகிறது.
-
அமமுக களமிறங்கும் 11 தொகுதிகள் இதுதான்.. கேஎன் நேரு உள்பட 3 அமைச்சர்கள் + சீமானை எதிர்த்து போட்டி -
2021 vs 2026.. அதிமுக கூட்டணியில் யாருக்கு லாபம்.. பாஜக, பாமக அமமுக வாக்கு சதவீதம் என்ன? -
9 ஆண்டுகள் கழித்து! அதிமுக தலைமை அலுவலகத்தில் நுழைந்த டிடிவி தினகரன்! மாடத்தில் Nostalgic மொமன்ட்ஸ்! -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
1 சவரன் தங்க நகை வாங்க போறீங்களா? கடைக்காரர் போடும் கணக்கில் அதிக மாற்றமா? ஏமாறாமல் இருக்க பில் தேவை -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு!












Click it and Unblock the Notifications