அவருக்காக எனர்ஜியை இழக்காதீங்க! சீமான் பற்றி ஆனந்த் சொன்ன நொடி.. விஜய் தந்த பதில்.. என்ன நடந்தது?

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழக வெற்றிக்கழகத்தின் செயற்குழுவை நேற்று கூட்டியிருந்தார் அக்கட்சியின் தலைவர் விஜய். இந்த கூட்டத்தில் மாநில நிர்வாகிகள், மாவட்டச் செயலாளர்களும் கலந்து கொண்டனர். முதல் மாநில மாநாட்டில் மா.செ.க்களுக்கு பேசும் வாய்ப்புகள் கொடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டிருந்தது.

இதனால், நிறைய விசயங்களை பதிவு செய்ய ஹோம் வொர்க் பண்ணிக்கொண்டு வந்திருந்தனர். ஆனால், நேரம் ஒத்துழைக்காததால் அவர்களுக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை. இந்த சூழலில்தான் செயற்குழு கூட்டம் கூட்டப்பட்டதும் அதில் மா.செ.க்கள் கலந்துகொள்ள அழைக்கப்பட்டதாலும் தங்களுக்கு பேச வாய்ப்புக்கிடைக்கும் என்கிற எதிர்பார்ப்புகளுடன் வந்திருந்தனர்.

seeman naam tamilar katchi vijay politics

ஆனால், இந்த முறையும் வாய்ப்பு கிடைக்காததால் ஏமாற்றம் அடைந்தனர். 26 தீர்மானங்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டது. சாதிவாரியாகக் கணக்கெடுப்பு நடத்தி, சமூக நீதியை நிலைநாட்ட எந்த நடவடிக்கையும் எடுக்காமல், சமூக நீதியின் பாதையில் பயணிக்கிறோம் என்று திமுக அரசு கூறி வருவதை மக்கள் நம்ப மாட்டார்கள். ஒன்றிய அரசின் மீது பழிபோட்டுவிட்டுத் தப்பித்துக்கொள்ள நினைக்கும் முயற்சி பலிக்காது. உண்மையான சமூக நீதியை நிலை நாட்டிட, தமிழக அரசு முதலில் உடனடியாகச் சாதிவாரிக் கணக்கெடுப்புக்கு அச்சாரமிடும் ஆய்வைக் காலதாமதமின்றி உடனே நடத்த வேண்டும் என்று இச்செயற்குழு வலியுறுத்துகிறது.

தீர்மானங்கள்: நெய்வேலி பழுப்பு நிலக்கரிச் சுரங்கத்தில் பணியமர்த்தப்பட்டுள்ள ஒப்பந்தத் தொழிலாளர்களுக்குப் பணி நிரந்தரம் செய்ய வேண்டும். என்.எல்.சி.க்காக நிலம் வழங்கிய நில உரிமையாளர்களின் வாரிசுகளுக்கு. இதுவரை யாருக்கெல்லாம் பணி வாய்ப்பு வழங்கவில்லையோ அவர்களுக்கும் நிரந்தரப் பணிவாய்ப்பு வழங்கப்பட வேண்டும். விவசாயிகளின் ஒப்புதலின்றி நிலக்கரிச் சுரங்கம் அமைப்பதற்கு ஓர் அங்குலம் நிலத்தைக் கூடக் கையகப்படுத்தக் கூடாது என்று இச்செயற்குழு. ஒன்றிய அரசை வலியுறுத்துகிறது.

காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூரில், ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஏக்கர் பரப்பளவில் 13 நீர்நிலைகள் உள்ளன. இவற்றை அழிப்பது சென்னையை நிரந்தரமாக வெள்ளக் காடாக்கும் சீர்கேட்டுக்கு வழிவகுக்கும். சென்னையைப் பாதுகாக்கவும், விவசாயிகளின் மனநிலையை உணர்ந்து ஒன்றிய, மாநில அரசுகள், பரந்தூரில் விமான நிலையம் அமைக்கும் முடிவைத் திரும்பப் பெற வேண்டும். விவசாயம் மற்றும் விவசாய நிலங்களின் பாதுகாப்பை, ஒரு கொள்கையாகவே முன்னெடுக்கும் தமிழக வெற்றிக் கழகம், தன் மண்ணுக்காகவும் மக்களுக்காகவும் சட்டரீதியாகப் போராடவும் தயங்காது என்பதைத் தெரிவித்துக்கொள்கிறது, என்பது உள்ளிட்ட பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

சீமான்: இந்த தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்ட நிலையில், கட்சியின் கொள்கையை கூ முட்டை என சீமான் விமர்சித்திருப்பதால் அது குறித்து கட்சியின் நிலைப்பாட்டை தலைவர் தெரிவிக்க வேண்டும் என மா.செ.க்கள் பலரும் பொதுச்செயலாளர் ஆனந்த் மூலம் கோரிக்கை வைத்திருக்கிறார்கள். இதனை விஜய்யின் கவனத்துக்கு ஆனந்த் கொண்டு சென்றுள்ளார்.

தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டப்பிறகு பேசிய விஜய், கட்சியின் கொள்கை விளக்கப் பொதுக்கூட்டங்களையும், செயற்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மான விளக்கப் பொதுக்கூட்டங்களையும் நடத்தி மக்களிடம் நெருக்கமாக செல்ல வேண்டும். நமது கொள்கைகளை விமர்சிப்பவர்களுக்கு பொதுக்கூட்டத்தின் வாயிலாக பதிலடி கொடுக்கலாம். நம்மை பொறுத்தவரை திமுகவும் பாஜகவும் தான் எதிரிகள். அவர்களின் விமர்சனங்களுக்கு எதிர்வினையாற்றினால் போதும்.

மற்றவர்களுக்காக (சீமான் போன்றவர்கள்) உங்கள் நேரத்தையும் சக்தியையும் இழக்காதீர்கள். அவர்களை நான் பார்த்துக் கொள்கிறேன். கொள்கைத் தெளிவற்றவர்களால் நமது அரசியலை புரிந்துகொள்ளமுடியாது. போக போக புரிய வைக்கிறேன். அரசியலில் இறங்கி விட்டால் இத்தகைய விமர்சனங்களை எதிர்கொள்ள வேண்டியதிருக்கும். நம்மை முடக்குவதற்காகத்தான் இப்பட்டிப்பட்ட விமர்சன தாக்குதல் வருகிறது. இதற்கெல்லாம் நாம் முக்கியத்துவம் கொடுத்தால் அரசியல் பணிகளில் பின் தங்கிவிடுவோம்.

அதனால், விமர்சனங்களை மண்டையில் ஏற்றிக் கொள்ளாதீர்கள். ஜனவரியில் தமிழகம் முழுவதும் மாவட்ட சுற்றுப்பயனம் செய்ய திட்டமிடப்படுகிறது. அதில் இவர்களுக்கு நான் பதில் சொல்கிறேன். நீங்கள் கவலைப்படாதீர்கள். தலைமைக் கொடுக்கும் உத்தரவுகளில் மட்டும் கவனம் செலுத்தினால் போதும்" என்று அறிவுறுத்தியிருக்கிறார் விஜய்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+