ஆர்ஆர்ஆர் பட நிகழ்ச்சிக்கு போன கர்நாடக முதல்வர்! வார்த்தையை விட்ட அண்ணாமலை! வறுத்து எடுத்த திமுக தலை
சென்னை: பொன்னியின் செல்வன் படத்தின் டிரெய்லரை முதல்வர் ஸ்டாலின் வெளியிடுவதை விமர்சித்த அண்ணாமலைக்கு திமுகவின் சரவணன் அண்ணாதுரை பதில் அளித்துள்ளார்.
Recommended Video
இயக்குனர் மணி ரத்னம் இயக்கத்தில் பொன்னியின் செல்வன் படம் தயாராகி உள்ளது. இதன் டீசர் ஏற்கனவே வெளியாகிவிட்டது. நடிகர்கள் கார்த்தி, ஜெயம் ரவி, விக்ரம், ஐஸ்வர்யா ராய், திரிஷா உள்ளிட்ட பெரிய பட்டாளமே இந்த படத்தில் நடித்து உள்ளது.
இந்த படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா அடுத்த வாரம் நடக்க உள்ளது. இந்த டிரெய்லரை முதல்வர் ஸ்டாலின் விழாவில் வெளியிட உள்ளார்.
அதன்பின் இதன் ப்ரோமோஷன் பணிகள் நடக்க உள்ளது. செப்டம்பர் மாதம் படம் வெளியாக உள்ளது.

மணிரத்னம்
முதல்வர் ஸ்டாலின் இதன் டிரெய்லரை வெளியிடுவதை பாஜக தலைவர் அண்ணாமலை விமர்சனம் செய்துள்ளார். நேற்று நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அண்ணாமலை.. மணிரத்னம் இயக்கத்தில் பொன்னியின் செல்வன் படம் வர உள்ளது. இந்த படத்தின் டிரெய்லரை யார் ரிலீஸ் செய்கிறார் தெரியுமா? தமிழ்நாட்டின் முதல்வர்! அடுத்த வாரம் செய்கிறார். அவர்தான் டிரெய்லரை வெளியிட போவது.

முதல்வர்
இந்தியாவில் ஏதாவது ஒரு முதல்வர் இப்படி செய்வாரா? ஏதாவது ஒரு முதல்வர் படத்தின் டிரெய்லரை வெளியிடுவாரா? அடுத்த படத்தின் முதல் நாள் முதல் ஷோவிற்கு முதல்வர் செல்வார். இன்னும் 6 மாதத்தில் இது நடக்கும். முதல்வர் அடுத்து வர கூடிய படத்திற்கு கட் அவுட் வைத்து பால் அபிஷேகம் செய்வார். ஏனென்றால் அவருக்கு தெரியும். கட்சிதான் குடும்பம்.

அண்ணாமலை
குடும்பம்தான் கட்சி. அந்த இரண்டையும் இணைப்பது சினிமா என்பதை அவர் நன்றாக உணர்ந்து இருக்கிறார், என்று அண்ணாமலை விமர்சனம் செய்தார். இந்த நிலையில் அண்ணாமலையை நெட்டிசன்கள் பலர் விமர்சனம் செய்து வருகின்றனர். கர்நாடகாவில் பாஜக முதல்வர் பசவராஜ் பொம்மை தெலுங்கு படமான ஆர்ஆர்ஆர் படத்தின் வெளியீட்டு விழாவில் கலந்து கொண்டார். சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு அதில் பசவராஜ் பொம்மை பேசியதை குறிப்பிட்டு அண்ணாமலையை நெட்டிசன்கள் விமர்சனம் செய்து வருகின்றனர்.

சரவணன் அண்ணாதுரை
திமுக செய்தி தொடர்பு இணை செயலாளர் சரவணன் அண்ணாதுரை அண்ணாமலையை விமர்சனம் செய்து போஸ்ட் செய்துள்ளார். அதில், கர்நாடகா இந்தியாவில் தானே இருக்கிறது?? இந்தியாவில் ட்ரெய்லர் வெளியீட்டு விழாவிற்கு சென்ற முதல்வர். வாட்ஸப் பல்கலைக்கழகத்தின் முன்னணி மாணவருக்கு சமர்ப்பணம். யாரு அந்த மாணவர் என்று சொல்லித்தான் தெரிய வேண்டுமா???, என்று கேள்வி எழுப்பி இருக்கிறார்.
-
அண்ணாமலையின் புதிய அரசியல் அத்தியாயம்! செப்டம்பர் 14ல் வெளியாகிறது கட்சிப் பெயர்? -
Waiting Is Over.. பாஜகவுக்கு டாடா சொன்ன அண்ணாமலை! புதிய கட்சி எப்போது உதயம்? லீக்கான தகவல்! -
விஜய்யின் அடிமடியில் கைவைக்கும் அண்ணாமலை.. தலித் அல்லாத வாக்குகளுக்கு குறி.. புதிய ரூட் எடுக்கிறார்? -
தவெகவின் வெற்றி தொலைக்காட்சி ஆரம்பம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. நாஞ்சில் சம்பத் வாழ்த்து -
300 கோடி சொத்துக்காக நந்தனாவை நடுத்தெருவில் நிறுத்தினாங்களா? பாரதிராஜா குடும்பத்தில் இப்படி சிக்கலா? -
"கலைஞர் டிவி, ஜெயா டிவிக்கு அடுத்ததாக 'வெற்றி டிவி'... ஜூன் 22-ல் லோகோ வெளியீடு? விஜய்யின் அடுத்த மாஸ்டர் மூவ் இதுதானா?" -
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு -
SP Velumani: உங்க சங்காத்தமே வேண்டாம்.. சிங்கப்பூர் சென்ற SP வேலுமணி.. எடப்பாடிக்கு பைனல் மெசேஜ் -
சாய்பாபா காலனி பிரச்சனை ஓவர்.. சிங்காநல்லூருக்கும் விடிவு காலம்.. தவெக ஆட்சியில் பிறந்த நம்பிக்கை -
மனித மூளையை உலுக்கக்கூடிய ஒரு விஷயம்.. ஏஐ குறித்து சத்ய நாதெல்லா பதிவு.. கமல் பதில் -
ஸ்டாலின் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்.. அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நோட்டீஸ்












Click it and Unblock the Notifications