Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

அந்த ஒரு "படலம்".. கேகே உடலில் இருந்தது என்ன? பிரேத பரிசோதனையில்.. இதயத்தை பார்த்தால் அதிர்ச்சி!

Subscribe to Oneindia Tamil

சென்னை: பிரபல பாடகர் கேகே எனப்படும் கிருஷ்ணகுமார் குமாத்தின் மரணம் குறித்த அதிர்ச்சி தகவல்கள் தற்போது வெளியாகி உள்ளன. பிரேத பரிசோதனையில் இவரின் இதயத்தை சோதனை செய்த மருத்துவர்கள் அது தொடர்பான முதல் கட்ட அறிக்கையை வெளியிட்டுள்ளனர்.

பிரபல பாடகர் கே. கே என்னும் கிருஷ்ணகுமார் குன்னத்.. தமிழ், தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட பல மொழிகளில் பாடி இருக்கிறார். தமிழில் காதல் வளர்த்தேன், நினைத்து நினைத்து பார்த்தேன் ஸ்ட்ராபெரி கண்ணே உள்ளிட்ட பல பாடல்களை இவர் பாடி இருக்கிறார்.

இந்த நிலையில் கொல்கத்தாவில் இசை நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட போது இவருக்கு உடல்நிலை சரியில்லாமல் போனது. இதையடுத்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர், மாரடைப்பு காரணமாக பலியானார்.

 என்ன காரணம்?

என்ன காரணம்?

இசை நிகழ்ச்சி நடக்கும் அன்று காலை இவர் தனக்கு மிகவும் சோம்பலாக இருப்பதாக தனது மேனேஜரிடம் சொல்லி இருக்கிறார். அதேபோல் தனது மனைவியிடம் எனக்கு தோள்பட்டை வலிக்கிறது. கை கடுமையாக வலிக்கிறது என்றும் கூறி இருக்கிறார். இது போக அன்று சாப்பாடு செரிக்கவில்லை என்று அதற்காக மாத்திரை எடுத்துள்ளார். பின்னர் நிகழ்ச்சியின் போது எனக்கு வியர்வை அதிகமாக வருகிறது. பேச முடியவில்லை, மூச்சு முடியவில்லை என்றும் குறிப்பிட்டு இருக்கிறார்.

என்ன நடந்தது?

என்ன நடந்தது?

இதையடுத்து நிகழ்ச்சி முடிந்து மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் போதுதான் மாரடைப்பு ஏற்பட்டு கேகே மரணம் அடைந்தார். இந்த நிலையில் இவரின் பிரேத பரிசோதனை அறிக்கையின் முதல் பாகம் தற்போது வெளியாகி உள்ளது. அதன்படி, இவரின் இதயத்தை பார்த்த போது.. அதை சுற்றி கொழுப்பு படலம் இருந்துள்ளது. நல்ல வலிமையான கொழுப்பு படலம் இவரின் இதயத்தை சுற்றி காணப்பட்டு இருக்கிறது.

சுற்றி இருந்த படலம்

சுற்றி இருந்த படலம்

இந்த படலம் மிகவும் வலிமையாக இருந்துள்ளது. இதன் காரணமாக அவரின் இதய வால்வுகள் கம்பு போல வலிமையாக காணப்பட்டு இருக்கிறது. அதாவது இந்த படலம் பரவி அந்த வால்வுகள் வலிமையாக இறுகிப்போய் உள்ளன. இதையடுத்து இவரின் இதய வால்வுகள் histopathological சோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளது. இதன் மூலம் மரணம் அடைந்த நேரத்தில் அவரின் உடலில் ரத்த வால்வுகளில் அடைப்புகள் இருந்ததா என்று கண்டுபிடிக்க முடியும்.

மாத்திரைகள்

மாத்திரைகள்

இவரின் உடலில் மாத்திரைகள் பல சாப்பிட்டதற்கான அடையாளம் இருந்துள்ளது. அதன்படி உடலில் 10க்கும் மேற்பட்ட மாத்திரைகள் சாப்பிட்டதற்கான அடையாளம் இருந்துள்ளது. இதில் பெரும்பாலான மாத்திரைகள் செரிமான பிரச்சனை, கல்லீரல் பிரச்சனை, விட்டமின் சி மாத்திரைகள் ஆகும். அதேபோல் செரிமானத்திற்கு என்று இவர் தொடர்ந்து நிறைய டானிக் குடித்ததும் பிரேத பரிசோதனையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+